Recent Comments

    தங்கள் வரவு நல்வரவாகுக!

    வணக்கம். தங்கள் வரவு நல்வரவாகுக! தலையங்கத்தைப் பார்த்துப் புல்லரித்துப் போய் ஓடி வந்திருப்பீர்கள். உங்களுக்கெல்லாம் அந்தப் பிள்ளையின் வயதில் சகோதரியோ, மகளோ, மருமகளோ, பெறாமகளோ இருக்கும். அந்தப் பிள்ளைகளுக்கும் இவ்வாறான நிலை ஏற்பட்டால், அதை வைத்து யாராவது இப்படியான ஈனப்பிழைப்பு நடத்துவதை நீங்கள் விரும்புவீர்களா? இப்படியாக வக்கிர உணர்வுகளுக்குத் தீனி போட்டுப் பிழைப்பு நடத்தும் இணைய ஊடகங்களுக்கு நீங்கள் பல்லாயிரக்கணக்கில் படையெடுப்பதால் தான், அதைக் காட்டி அவர்கள் ஈனப்பிழைப்பு நடத்துகிறார்கள். இவர்களை நிறுத்த வேண்டுமாயின், அந்தப் பிள்ளையின் கொலையை நேரில் பார்த்தது போல செய்தி எழுதி, அந்தப் பிள்ளைக்கு ஏற்கனவே நடந்த அநீதியை விட மோசமான அநீதியை இழைக்கும் இவர்களின் இணையத் தளங்களின் விளம்பரதாரர்களுக்கு 'இவ்வாறான சமூகவிரோதிகளின் தளங்களில் விளம்பரம் செய்ய வேண்டாம்' என்று அழுத்தம் கொடுப்பதன் மூலமே இவர்களின் ஈனச்செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். இவர்கள் தங்களின் பணத்தைச் செலவிட்டு, தமிழ் மக்களுக்கு செய்தி வெளியிடக் கூடியவர்கள் இல்லை. இன்னமும் மனிதாபிமானம் செத்து விடாதவர்கள், சிந்தனை ஆற்றல் கூடி விடுமே என்ற பயம் இன்றி, இங்கே உள்ள விடயங்களை வாசித்தும் பார்க்கலாம். உங்களின் வக்கிர உணர்வுகளுக்குத் தீனி தேடி வந்தவர்கள், மரண அறிவித்தல் இணையத் தளம் இன்னொரு பக்கமாய் நடத்தும் ஆபாச இணையத் தளங்களைத் தேடி அதில் உள்ள வீடியோக்களைப் பார்த்து, சுய இன்பம் கொள்ளலாம்.

    Postad



    You must be logged in to post a comment Login