Recent Comments

    ஈழஸ்தான் ஜிந்தாபாத்!

    இந்துத்வ வியாதி வேகமாகப் பரவி பல மூடர்களைப் பீடித்து வருகிறது. மதத்தின் பெயரால், மதத்திற்காக கொலை செய்யலாம் என்ற சிந்தனை மதங்களைக் கடந்து பரவி வருகிறது. சிலுவைப் போர் முடிந்து, இப்போது அல்லாஹூ அக்பர் கூச்சல் ஜிந்தாபாத்தாகிக் கொண்டிருக்கிறது. 72 கன்னிப் பெண்களை விட, முப்பத்து முக்கோடித் தேவதைகள் மேல் என்ற எண்ணமோ என்னவோ?

    காந்தியின் உருவப் பொம்மைக்கு காவி ஒன்று துப்பாக்கியால் சுட, 'நாதுராம் கோட்சே ஜிந்தாபாத்' என்று பின்னால் உள்ள கூட்டம் பிற்பாட்டுப் பாடும் வீடியோ ஒன்று இணையத்தில் உலவி வருகிறது. மதத்தின் பெயரால் குழந்தைகளை, பெண்களை, மனிதர்களை குரூரமான முறையில் கொல்வதை மகிழ்ச்சியோடும் பெருமையோடும் படம் எடுத்து பரப்பிக் கொள்வது தற்போதைய மதப் பரப்பு முறையாகிக் கொண்டிருக்கிறது.

    ' ' '

    சுமார் 30 வருடங்களுக்கு முன்னால் நான் கனடாவிற்கு வந்து சேர்ந்த காலத்தில், தமிழர்கள் அகதிகளாக வந்த கப்பல் ஒன்று ஐரோப்பாவிலிருந்து வந்து சேர்ந்தது. அது வந்த கொஞ்ச நாட்களில், நெதர்லாந்தில் இருந்து இன்னொரு கப்பல் அகதிகளோடு வரப் போவதாக கனடியத் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுக் கொண்டிருந்தது. அந்த தொலைக்காட்சி அங்கே தயாராக இருந்த கப்பல், அங்கு நடமாடியவர்களை எல்லாம் படம் பிடித்து, வரப் போவதைக் கட்டியம் கூறிக் கொண்டிருந்தது.

    கடைசியில் கப்பல் வந்து சேர்ந்து, அகதிகள் கனடாவில் காலடி எடுத்து வைத்து விட்டார்கள்.  இரவு ஒன்றில் பற்றைகள் நிறைந்த பகுதிகளுக்கு ஊடாக, இந்த சீக்கிய அகதிகள் வந்து கொண்டிருப்பதை கனடியத் தொலைக்காட்சி ஒளிப்பதிவுக் கருவிகள் படம் பிடித்து வரவேற்க...

    கமெராக்கள் வருவதைக் கண்ட சீக்கியர்கள் திடீரென்று கைகைள உயர்த்தியபடி 'காலிஸ்தான் ஜிந்தாபாத்' என்று கோஷம் போடத் தொடங்கினார்கள்.

    தங்களுடைய அகதிக் கோரிக்கையை நியாயப்படுத்துவதற்காக தங்கள் போராட்டத்தை அவர்கள், தமிழர்களைப் போலவே, பயன்படுத்த எடுத்த முயற்சி அது.

    கடைசியில் காலிஸ்தான் அம்பேலாகி, இப்போது கனடாவில் மேற்குப் பகுதியில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் வேரூன்றியிருக்கும் சீக்கிய புலன் பெயர்ந்தோர், இணையம் இரண்டிலும் தான் காலிஸ்தானின் இருத்தல் வந்து முடிந்திருக்கிறது.

    நல்ல காலம், அவர்கள் எல்லாம் நாடு கடந்த அரசாங்க விளையாட்டுகளைத் தொடரவில்லை.

    ஆனால் சீக்கியக் கோயில்களில் அடிக்கடி வாள் சண்டைகள் நடக்கும்.

    • * *

    போன பொங்கலுக்கும், கனடாவில் கடும் பனிக்குள், சில பனிகள், பானை ஒன்றை வைத்து, பொங்கிப் பிரவகித்து, 'பொங்கலோ பொங்கல்' என்று கோஷம் போட்டன, புலிக்கொடியைப் பிடித்தபடி! அந்த வீடியோவை பேஸ்புக்கில் பகிர்ந்து புல்லரித்திருந்தன மிகுதிப் பனிகள்!

    ஈழம் போய், இப்போது பேஸ்புக்கில் மண்மீட்புப் போர்... அதாவது இளிச்சவாயர்கள் போராட்டத்திற்கு கொடுத்து ஏமாந்த பணத்திற்கு, தேசியச் சொத்து என்று பெயரிட்டு, அதை மீட்பதற்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

    பொங்கல் பானையோடு ஒரு கூட்டம்... ஈழஸ்தான் ஜிந்தாபாத்!

    • *

    என்னவோ, இன, மத, மொழி பேதமின்றி, மூளைச்சலவை செய்யப்பட்ட கொள்கைவாதிகள் கமெராக்களைக் கண்டதும் ஒரே மாதிரியாகவே நடந்து கொள்கிறார்கள்!

    Postad



    You must be logged in to post a comment Login