Recent Comments

    யாழ்ப்பாணத்துப் பிராங்கன்ஸ்டைன்

    (புலிகளின் மானிட விரோதப் போக்குக்கு எதிராக தாயகம் குரல் எழுப்பத் தொடங்கியது இன்று நேற்றல்ல. துரோகிகளுக்கு மரண தண்டனை என்பதும் மாற்றுக் குரல்களுக்குத் தடை என்பதுமாக புலிகள் வெறியாட்டம் ஆடத் தொடங்கிய நாட்களில் தாயகம் தனித்து நின்று வெற்றி கண்டிருக்கிறது. மிரட்டல்கள், தடைகள் என்று ஆயுதப்புலிகளும் காகிதப்புலிகளும் தாயகத்தின் குரலை நசுக்க எடுத்த முயற்சிகள் பலப்பல. இருபது வருடங்களாக அந்தக் குரல், அஞ்ஞாத வாசத்தின் பின்னாலும், மிரட்டல்களுக்கு அடங்கி விடாமல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அந்தச் சூழ்நிலையில் நாங்கள் காட்டிய உத்வேகம் இன்றும் எங்களுக்குள் கனன்று கொண்டு தான் இருக்கிறது.

    இந்த இருபது வருட காலத்தில் நாங்கள் கண்ட மாற்றங்கள் எத்தனையோ! மனிதர்கள் எத்தனையோ! 'தீர்வைச் சொல்லாமல், சும்மா புலியைக் கடிக்கினம்' என்ற விமர்சகக் கூட்டம். 'தாயகம் தமிழ்த் தேசியத்துக்கு முரணானது'என்ற புத்திஜீவிப் பெருந்தகைகள். 'அவங்கள் கோவிப்பாங்கள்' என்று, எங்களோடு அடையாளம் காட்டப் பயந்த பச்சோந்திக் கூட்டம், தாயகம் என்றொரு வெளியீடு புலம் பெயர்ந்த இலக்கிய, அரசியலில் ஏற்படுத்திய தாக்கத்தை இருட்டடிப்புச் செய்த இலக்கியக் கூட்டம். 'இனிமேல் அவங்கள் தான்!' என்ற முடிவில், வாழ்நாள் பூராவும் கட்டிக் காத்து வந்த கொள்கைகளைக் காற்றிலே பறக்க விட்டு புலி பிராண்ட் தமிழ்த் தேசிய நீரோட்டத்தில் சங்கமித்த அரசியல் கூட்டம். 'அவங்களை எதிர்த்துக் கொண்டு இண்டைக்குப் பிழைப்பு நடத்தேலாது' என்று மெதுவாக புலியை அண்டிப் பிழைக்கும் யாவாரிக் கூட்டம்.

    'எதிர்காலமே புலியைச் சுற்றித் தான் இருக்கும்' என்று நம்பிய இந்தக் கூட்டம் எல்லாம் இன்று தங்கள் முகமூடிகளும் கிழிந்து, நம்பகத் தன்மையை இழந்து, புலி அழிந்து விட்டால், தங்கள் அடையாளங்களும் இருப்புகளும் அழிந்து விடும் என்பதற்காக அழிந்து கொண்டு இருக்கும் புலிக்கு, ஒட்சிசன் ஏற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன.

    உண்மைக்கும் நீதிக்குமான குரல் என்றுமே தலைகுனிவதில்லை. காலம் கடந்த பின்பு என்றாலும் உண்மை வெளியாகும் போது, அந்தக் குரல்களின் நியாயத்திற்கான காரணம் எல்லோருக்கும் புரியும். ஆனால், மானிட விரோதத்திற்கு சாமரம் வீசியவர்கள் எல்லாம், சரியும் சிம்மாசனங்களுடனும் உருளும் மணிமுடிகளோடும் வரலாற்றில் இருந்து விரட்டப்படுவார்கள் என்பது பலருக்கும் புரிந்ததில்லை. இன்று எங்கள் கண் முன்னால் நடைபெறும் பல விடயங்கள் அன்று நாங்கள் தீர்க்கதரிசனத்துடன் எச்சரித்த விடயங்களே என்பதில் துயரம் கலந்த பெருமை எங்களுக்கு உண்டு.

    புலி பிராண்ட் விடுதலைப்போராட்டம் எந்த விதத்திலும் பயனளிக்காது, அது தமிழினத்திற்கு அழிவைத் தான் தரும் என்ற கருத்தில் எங்களுக்கு எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை. நாங்கள் ஏற்கனவே கூறிய கருத்துக்கள் எங்கள் கண் முன்னாலேயே உண்மையாகி வரும் நிலையில், தாயகத்தின் ஏடு இட்டோர் இயலில் நாங்கள் தெரிவித்த கருத்துக்களை மீண்டும் ஒரு முறை இந்த முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் வாசகர்களுக்காக தருகிறோம்.

    இதெல்லாம் புலிகள் அழிந்த பின்னால் புற்றுக்குள்ளால் வெளியே வந்து புலி எதிர்ப்பு வேசம் போடும் குரல் அல்ல, தேசிக்காய் தலையர் ஆயுதத்தோடு மண்டையில் போட்டுக் கொண்டிருந்த காலங்களில் எழுதப்பட்டது.

    யாழ்ப்பாணிகளால் உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட புலிகள் எப்படி தமிழர்களை அழித்து தாங்களும் அழிந்து போவார்கள் என்பது பற்றி, 26 வருடங்களுக்கு முன்னர் 1991 நவம்பர் 1 தாயகத்தில் வெளிவந்த ஏடு இட்டோர் இயல் இது.)

    யாழ்ப்பாணத்துப் பிராங்கன்ஸ்டைன்

    ஜோர்ஜ் இ.குருஷ்சேவ்

    பல வருடங்களுக்கு முன்னர் ஒரு ஆங்கிலப்படம் ஒன்று வெளிவந்தது. விஞ்ஞானி ஒருவர் பல்வேறு மனிதர்களைக் கொன்று அவர்களின் அங்கங்களை வெட்டிப் பொருத்தி ஒரு ராட்சசனை உருவாக்குகிறார். தனது கட்டுப்பாட்டில் வைத்து காரியங்கள் சாதிக்க முயலும் போது, இறுதியில் கட்டுப்பாட்டை மீறிய இராட்சசன் தன்னை உருவாக்கியவரையும் கொன்று தானும் அழிந்து போகிறது. பெரும்பாலான ஆங்கிலப்படங்களில் இவ்வாறாக உருவாக்கப்படுகின்ற எதுவும், இராட்சத மனிதனாகட்டும், மிருகமாகட்டும், இயந்திர மனிதனாகட்டும், அவை எப்போதுமே கட்டுப்பாட்டை மீறி தங்களை ஆக்கியவனையே அழித்து தாமும் அழிந்து போகின்றன. இவை உண்மைக் கதைகளோ, சரித்திரங்களோ இல்லை என்Aலும் அவை பல உண்மைகளை எமக்கு காட்டுகின்றன.

    பனைமரத்துடன் உருவகப் படுகின்ற யாழ்ப்பாணக் கலாசாரப் பண்பாட்டு விழுமியங்கள் (பனங்கொட்டைக் கலாசாரம்?) யாழ்ப்பாணிகளின் மனதில் ஒரு உயர்வு மனப்பான்மையை ஊன்றி விட்டன. பிரபஞ்ச மையமே யாழ்ப்பாணம் என்றும் அண்ட சராசரங்கள் எல்லாம் அதைச் சுற்றியே சுழல்கின்றன என்றும் வெறுமனே யாழ்ப்பாணத்தில் பிறந்ததால் தான் கூர்ப்பில் அதியுயர் நிலையை எய்தி விட்டதாகவும் கனவு கண்டு, தான் அல்லா இன்னொருவனை மட்டம் தட்டுவதும் (தேவையேற்படின் கழுத்தறுத்தும்) யாழ்ப்பாணக் கலாசாரமாகி விட்டன.

    கல்வி என்பது யாழ்ப்பாணத்தின் முதலீடு என்றும் புத்தியைப் பாவித்து ஜீவனம் நடத்துவதே அவர் பண்பு என்றும் பல்வேறு மாயைகளுக்குள் மூழ்கிய யாழ்ப்பாணம் தற்போது தன் முகமூடிகளை இழந்து நிர்வாணப்பட்டுக் கொண்டிருக்கிறது.

    வெறும் நிலத்துண்டுக்காக குடும்பத்துக்குள்ளேயே குத்து வெட்டுப்படுவதும், வேலிகளுக்காக வழக்காடி இறுதியில் காணியையே வழக்கு பேசியவருக்கு எழுதுவதும், வெறும் சீதனத்துக்காக, பணத்தை அடிப்படையாகக் கொண்ட உறவுகளை ஏற்படுத்துவதும் (தேவையேற்பட்டால் 'ஓடிப்போனவளை' இழுத்து வந்து கட்டி வைப்பதும்) சாதி அடிப்படையில் அடக்குமுறைகளை மேற்கொள்வதும் பெண்களை இரண்டாம் தரப் பிரஜைகளாக்கி தங்கள் விருப்புகளை அவர்கள் மேல் திணிப்பதும் யாழ்ப்பாணம் தவிர்ந்த மற்றப் பிரதேசங்களில் வாழும் தமிழர் கீழ்ப்பட்டவர்கள் என்றும் தன்னை யாழ்ப்பாணம் ஏமாற்றி வந்திருக்கிறது. (இவற்றின் கனாகனங்கள் காலப் போக்கில் குறைந்திருக்கலாம். ஆனால் அவை இன்னமும் வேரூன்றித் தான் இருக்கின்றன.)

    தேவை ஏற்படும் போது இவற்றை மறைத்து, சுயநலத்தை வெளிக்காட்டியும் (மலையக சகோதரர்கள் என்று பாசத்தைப் பொழிவது) சந்தர்ப்பவாதங்களிலும் யாழ்ப்பாணம் ஈடுபட்டிருக்கிறது. மொத்தத்தில் அதன் நோக்கமே சுயநலம் தான். இந்த இயல்பு கூட்டானதும் தனித்துவமானதுமாகும்.

    இதன்படி தனது இனத்துக்குள்ளேயே தனது நலனுக்கு குந்தகம் வந்தால் கழுத்தறுப்புச் செய்வது. அதையும் தன் நலன்களுக்கு ஆபத்து வரும் போது தான் தப்பித்துக் கொண்டு மற்றவர்களைப் பலி கொடுக்கவும் அது தயங்குவதில்லை. (வெளிநாடுகளுக்கு வந்தவர்களில் பெரும்பாலோர் யாழ்ப்பாணத்தவர்களே. இங்கு வந்து அழிவில்லாமல் சுதந்திரம் இல்லை என்பவர்களும் இவர்கள் தான். மற்ற இடங்களில் மக்களை விட்டு ஓடியதைப் பற்றி கவலையில்லாமல், யாழ்ப்பாணத்தில் நிற்பதால் மட்டும் 'நின்று போராடுவதாக' ஆதரவு வழங்குதல் என்று 'யாழ்ப்பாணக் கலம்பகம்' நீளும்)

    இலங்கையின் மூளையே வடக்கு என்றும் தலைமை வடக்கில் தான் இருக்க வேண்டும் என்ற சிந்தனையில் தமிழர்களுக்கான தலைமை யாழ்ப்பாணமே என்ற விதத்தில், மலையகத்தமிழர், முஸ்லிம்கள் எல்லோரும் தமிழ் பேசுகிறார்கள் என்பதற்காக அவர்கள் அனைவருக்குமான தலைமையாக (தற்போது உலகத் தமிழர்களுக்கும்) யாழ்ப்பாணம் நடந்து கொள்கிறது.

    தலைமைகளை தெரிவு செய்வதில் (உருவாக்குவதில்) யாழ்ப்பாணம் என்றுமே அவதானமாக இருந்திருக்கிறது. எந்த நாடும் இனமும் தனக்கான தலைமைகளைத் தெரிவு செய்வதில் கவனமாக இருக்கும் என்பது உண்மை தான். தனது நலன்களைப் பேணக் கூடியவர்களையே ஆட்சிக்கு அமர்த்தும். ஆனாலும் அதற்காக மோசமானவர்களை ஆட்சியில் அமர்த்தினால் துன்பங்களையே அனுபவிக்க நேரிடும் என்பது தெரிந்த விடயம். ஹிட்லரை தெரிவு செய்த ஜேர்மானியர்களுக்கு என்ன நடந்தது?

    எனவே அறியாமைகள், தங்கள் நலன்கள் காக்கப்படும் என்ற நம்பிக்கைகள் தலைமைகளை உருவாக்கியிருக்கும். ஆனால் யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை யாழ்ப்பாணம் தனது நலன்களுக்காக தெரிந்து கொண்டே தலைமைகளை தெரிவு செய்தது.

    பிரபல வழக்குரைஞர்கள் தான் (Q.C என்பது Qualified Criminal, Cheater, Culprit ஆகவும் இருக்கக் கூடும்) எங்கள் ஆரம்ப தலைமைகளாக இருந்தன. இதிலும் கிரிமினல் அப்புக்காத்துகள் என்றால் (கோகிலாம்பாள் புகழ்?) யாழ்ப்பாணத்துக்கு ஒரே குஷிதான். தான் செய்கின்ற குற்றச் செயல்களை பூசி மெழுகி, வெளியே எடுத்து விட யாரை நம்பியிருந்தார்களோ, அவர்களையே தலைவராக்கினார்கள். (ஆனாலும் சந்நிதியானையும் நல்லூரானையும் ஏன் தனிப் பெருந்தலைவர்களாக ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தான் புரியவில்லை. ஏனென்றால் இந்த 'நியாய' துரந்(த்)தர்கள் எலலாம் முயன்று தோற்று தூக்குத்தண்டனை நிச்சயம் என்றதும் யாழ்ப்பாணம் இவர்களை நம்பித்தான் பறவைக் காவடி எடுக்கும்)

    இந்த தலைமைகள் முழு தமிழினத்தின் தலைவர்களாக, பிரதிநிதிகளாக பாராளுமன்றம் சென்றாலும் யாழ்ப்பாணிகளின் நலன்களுக்கு முரணாக நடக்கவில்லை.

    எல்லைக்காவலர் வவுனியாவில் எல்லை காத்தது தமிழ் மக்களின் நிலம் பறிபோகக் கூடாது என்றால், மாவிட்டபுரத்தில் ஏன் 'பொல்லோடு' நின்றார்? (கோலாயுதத்தை விட்டு வேலாயுதத்தோடு நின்றிருந்தால், யாழ்ப்பாணம் கோயில் கட்டியும் கொண்டாடியிருக்கும்) இது யாழ்ப்பாணத்தின் 'கலாசார பாரம்பரியங்களையும் பண்பாட்டு விழுமியங்களையும்' காத்துக் கொள்ள அவர் எடுத்த நடவடிக்கை தானே.

    இதே போல் தான் தமிழரசுக் கட்சியும் 'ஆலயப் பிரவேசத்தின் போது' மதில் மேல் குந்தியிருந்தது. எதற்காக? யாழ்ப்பாண நலனகளைப் பாதுகாககவே.

    இந்த தலைமைகள் தமிழ்மக்களின் பிரதிநிதிகளாக 'ஆண்ட தமிழினத்தை' தட்டி எழுப்பினார்கள்.

    சமூகத்தில் புரையோடிக் கிடந்த எந்தப் பிரச்சனையைக் களைய வேண்டும் என்று முழுமூச்சாக முன்நின்றார்கள்? சாதிப்பிரச்சனைக்கு சமபந்தி போசனம் தீர்வாகவில்லை. உடுப்பிட்டியில் ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்து யாழ்ப்பாணம் தனது பெருந்தன்மையை Great leap forward என்று பறைசாற்றியது. பின்பு என்ன நடந்தது?

    சீதனப் பிரச்சனைக்கு எதிராக என்ன செய்தார்கள்? பெரிய இடத்து திருமணங்களில் கலந்து சிறப்பித்தார்கள். பெண்கள் இந்தக் கட்சிகளில் எங்கே சம பங்கு வகித்தார்கள்? மாறாக பிரசாரங்களில் வெள்ளைச் சேலை (தமிழ் பண்பாடாம். பிறகேன் விதவைக்கும் வெள்ளை?) பேச மட்டுமே பயன்படுத்தப்பட்டார்கள். அல்லது பேச வருபவர்களுக்கு குளிர்பானம் வழங்க அழைக்கப் பட்டார்கள். இப்படியான சமூகக் கோளாறுகளைத் தவிர்த்து உணர்வுரீதியான பிரச்சனைகளை பூதாகரமாக்கி அரசியல் லாபம் தேடத் தான் முயன்Aர்கள்.

    முன்னைய தலைமையை விட இன்னொரு தலைமை அதிக நலன்களை பெற்றுத் தரும் எனக் கருதினால் முற்றுமுழுதாக பழைய தலைமையை நிராகரித்து எல்லாப் பழியையும் அதன் தலையில் கட்டி, புதிய தலைமையை தூக்கிப் பிடிப்பதை யாழ்ப்பாணம் கனகச்சிதமாக செய்து வருகிறது.

    கூட்டணியின் போக்கு வெறும் அரசியல் லாபமே அன்றி, முழுமையாக தான் எதிர்பார்த்த 'ஆண்ட பரம்பரை மீண்டும் ஆளத் துடித்த தமிழீழம்' கிடைக்காது என்றவுடன் கூட்டணியை கைகழுவத் தொடங்கியது. இதற்குள் தமிழீழமும் அதன் ஏகபோகமும் கிடைக்க இயக்கங்கள் வழி செய்யும் என்ற நம்பிக்கை எழுந்தது.

    ஆனாலும் கண்மூடித்தனமாக யாழ்ப்பாணம் காலடியில் விழவில்லை. ஆரம்பத்தில் 'பெடியள்' எல்லாரையும் ஆதரித்தது. இதற்கு பெடியள் மீதான அபரிமிதமான அன்பு என்பதை விட, கலவரங்களில் சிங்களவர் செய்த குரூரமான செயற்பாடுகளே காரணம். ஆனாலும் இயக்க மோதல்கள் படிப்படியாக எல்லாப் 'பெடியளும்' ஒன்றல்ல என்றதும், சுயம்வரத்தில் மாலையோடு நின்ற இளவரசியாக தன் யாழ்ப்பாணம் உருவகித்தது.

    புளொட்டுக்கான ஆதரவு பெருமளவு இருந்தாலும் அதில் பெரும் பங்கு அதன் தலைவரின் 'உயர்குடிப்பிறப்பு' வகித்தது என்பதை மறுக்க முடியாது. தனது உட்கட்சி ஜனநாயக மறுப்பை மூடி மறைத்து, தன் இடதுசாரிக் கோஷத்தையும் கொஞ்சம் 'அமுக்கி' வாசித்திருந்தால் புளொட் யாழ்ப்பாணத்தின் இதயத்தை கொளளை கொண்டிருக்கும். ஆனால் புளொட்டின் கவனம் 'களையெடுப்பில்' இருந்ததால் யாழ்ப்பாணத்தைக் கவர முடியவில்லை. (அதனால் தான் இப்போது பலாத்காரமாக கவரும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்களோ என்னவோ?)

    ஈரோஸ் புத்திஜீவித்தனமாக 'படித்தவர்கள்' மத்தியில வளர முயன்றதாலும், இராணுவரீதியான சாகசங்களில் ஈடுபடாததாலும், அதிதீவிர இடது போக்கைக் கொண்டதாலும் யாழ்ப்பாணம் அதையும் உதாசீனம் செய்தது.

    டெலோவைப் பொறுத்தவரை பெரும் வர்த்தகர்கள், பெரிய மனிதர்களின் 'அசைவுள்ள' ஆதனங்களில் கைவைக்கப் போனது.. அது போதுமே, யாழ்ப்பாணத்துக்கு? அடிமடியில் கைவைக்க விடுமா? இறுதியில் கொக்கோ கோலா கொடுத்து தன் வக்கிரத்தை தணிததுக் கொண்டது. உயிரோடு தீ மூட்டப்பட்டு கொழுத்தப்படுவதும், சுட்டுப் பொசுக்கப்படுவதும் திரைப்படங்களில் பார்க்க கிடைக்காது, நேரில் பார்த்த மகிழ்வில் யாழ்ப்பாணம் திளைத்தது. இறந்தவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல, கிழக்கைச் சேர்ந்தவர்கள் என்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.

    ஈ.பி.ஆர்.எல்.எஃப் யாழ்ப்பாணத்தின் மனநிலையை அறியவில்லை. செய்கின்ற அநியாயங்களை கூச்சமின்றி மூடி மறைக்காமல், அப்பட்டமாக கொலை செய்து வீதியில் போட்டால் யாருக்குத்தான் பொறுக்க முடியும்?

    பச்சை வள்ளங்கள் பற்றி இப்போது தான் தெரியவருகிறது. யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை ஒரு இரட்டை நியம அளவு கோல் ஒன்றை வைத்திருந்தது. மாமி, மருமகள் குட உடைப்பு போல் புலிகள் செய்தால் அதை ஏற்றுக் கொள்வதும், கண்டும் காணாமல் விடுவதும், இதையே ஈ.பி.ஆர்.எல்.எஃப் செய்தால் புலிகளின் துணையோடு கண்டிப்பதும் என்று நடந்து கொண்டது.

    ஈ.பி.ஆர்.எல்.எஃப் ஐ யாழ்ப்பாணம் வெறுக்க காரணம் என்ன? அதை தாழ்த்தப்பட்ட மக்களோடு தொடர்பு படுத்தி (அவர்களுக்கு விடுதலை உணர்வு வரக்கூடாது என்பதில் இவர்களுக்கான அக்கறை அவ்வளவு) அந்தக் காரணத்தைப் பகிரங்கப்படுத்தி (மூப்பன் இயக்கம் என்று உலகத் தமிழர் கூட எழுதியிருந்தது) அதை யாழ்ப்பாணத்தில் செல்வாக்கிழக்க பிரசாரம் செய்யப்பட்டது.

    (யாழ்ப்பாணத்து வர்ணாசிரம தர்மத்தின் பிரகாரம் மீனவ சமூகம் அதியுயர்ந்ததாக கருதப்பட்டதா என்பது எனக்குத் தெரியாது. ஆBலும் மேல் மட்டத்து திருமணங்களில் அவ்வாறான கலப்பு எதுவும் நிகழ்ந்ததாக தெரியவில்லை)

    எப்படி இயககம் ஒன்றை சாதியைக் காட்டி ஒதுக்கிய யாழ்ப்பாணம், இன்னொரு தலைமையை சாதியைப் பற்றி கவலையின்றி ஏற்றுக் கொண்டது?

    ஈ.பி.ஆர்.எல்.எஃப் ஒதுக்கப்பட்டதற்கும் அதன் இடதுசாரிப் போக்கிற்கும் அதிக தொடர்பு இல்லை. ஏனென்றால் சகல இயக்கங்களுமே, புலிகள் உட்பட, ஆரம்பத்தில் சமஉடைமை தத்துவம் பேசின. புலிகள் காலப் போக்கில் அவற்றைக் கைவிட்டு, அறிக்கைகளில் மட்டும் ஞாபகப்படுத்திக் கொள்கிறார்கள். (மறந்து போகாமல் இருப்பதற்காக?)

    இடதுசாரிப் போக்கு கொண்ட அமைப்புகளான புளொட், ஈரோஸ், ஈ. பி.ஆர்.எல்.எஃப் என்பன தொழிலாளர்கள் வாழும் பகுதிகளான வன்னியிலும் கிழக்கிலும் செல்வாக்குப் பெற்றிருந்த அதே வேளை யாழ்ப்பாணத்தில் புலிகள் மட்டுமே அதி செல்வாக்குப் பெற்றிருந்தனர். புலிகள் மற்ற இடங்களில் கால் ஊன்ற நீண்ட காலம் சென்றது.

    புலிகளுக்கும் யாழ்ப்பாணத்துக்கும் அப்படி என்னதான் உறவு? யாழ்ப்பாணத்துவத்தின் வக்கிரம் பொருந்திய, அதிகார வெறி கொண்ட, நான் என்ற அகங்காரம் மிக்க பரிமாணம் தான் புலிகள். வேலிக்காக சண்டை பிடித்து உயிர் எடுத்தது யாழ்ப்பாணம். எல்லைகளில் இப்போது சிங்களவர்களின் உயிர்கள் பலியிடப்படுகின்றன. தன் கருத்தை நிலைநாட்ட யாழ்ப்பாணம் கத்தியைத் தூக்கி, ஏகேயாக பரிணமித்திருக்கிறது. 'தமிழ் ஈழமே தனது தாகம்' என்ற யாழ்ப்பாணம், தனது மைந்தர்கன் ஐரோப்பாவுக்கும் கனடாவுக்கும் அனுப்பி பாதுகாப்பதில் மிகவும் அக்கறையாக இருந்தது. அத்துடன் எந்த மகனையும் கையில் வேலைக் கொடுத்து 'காயம் நெஞ்சில் பட வேண்டும், (நெற்றியில் படக் கூடாது, துரோகியாகி விடுவாய்) புறமுதுகு காட்டக் கூடாது' என்று போர்க்களத்துக்கு அனுப்பவில்லை. (ஒரு சில புறநடைகளே இங்கு புலிகளுக்கு பிரசாரத்துக்கு பெரிதும் பயன்பட்டன.) மாறாக வீட்டிலிருந்து ஓடிய பி ள்ன்கன் வேறு வழியின்றி ஆதரித்ததே அன்றி, முடிந்தவரைக்கும் யுத்தம் தன் வீட்டு வாசலில் வராமல் இருக்க யாழ்ப்பாணம் பகீரதப் பிரயத்தனம் செய்தது.

    இன்று நின்று போராடுபவர்கள் யார்? வறிய குடும்பங்களின் பிள்ன்களும் கிழக்கைச் சேர்ந்தவர்களும் தான். முன்னைய மாவீரர்கள் கம்பி நீட்டி வெளிநாடுகளில் வாசம் செய்கிறார்கள். பெற்றார்களே கொழும்பு வரை வந்த வழியனுப்பியும் இருக்கிறார்கள்.

    (ஒரு தடவை தொலைபேசியில் ஒரு கிழக்கைச் சேர்ந்த வாலிபர் அழுதார், தாங்கள் தான் குடியேற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் அதற்காக போராட முன்வந்த தங்கன் யாழ்ப்பாணத்தில் வைத்து கொன்றதாகவும், அப்போது கூட முகாம்களுக்கு வந்து யாழ்ப்பாணத்தவர்களைத் துரத்தி விடடு மற்றவர்களையே கொன்றதாகவும் கூறி அழுதார்.) எல்லையை இழந்தவர்கள் கோட்டையைப் பாதுகாக்க வேண்டும். ஆனால் கோட்டைக்குள் உள்ளவர்கள் தப்பி ஓடி விடுவார்கள். யாழபபாணத்ததைப் பாதுகாத்தல் என்பது தான் 'நின்று போராடுவது' ஆகி விட்டது.

    தனது நலன்களைக் காக்க புலிகள் சரியான கருவி என்பதை அறிந்த யாழ்ப்பாணம் அதை போஷிக்கத் தொடங்கியது.

    கோழிக்கள்ளனைச் சுட்டபோதும் நியாயம் சொன்னது. அமிர்தலிங்கத்தைச் சுட்டபோது துரோகி என்றது. ராணுவத்தை சுட்ட போது மகிழ்ச்சி அடைந்தது. ராஜினியைச் சுட்ட போது 'நான் காணவில்லை' என்றது.

    புலிகளைக் கொண்டு மட்டுமே தனது வழமையான கட்டமைப்பைப் பேண முடியும் என்பது யாழ்ப்பாணத்துக்கு தெரியும். புலிகள் சாதி முறையை ஒழிக்க ஒரு போதும் முன்நின்றதில்லை. தலைமைப்பீடங்களின் சகவாசங்கள் கூட மேல் மட்டங்களுடனேயே நின்றது. சீதனத்தை ஒழிக்க முயலவில்லை. மாறாக சீதனத்தைக் கொடு, எனக்கு ஒரு பங்கு தா என்றது.

    முஸ்லிம்களை வேரோடு அகற்றியது. யாழ்ப்பாணம் வாய் திறக்கவில்லை. அவர்கன் நம்ப முடியாது என்ற ஆண்டாண்டு கால நியாயப்படுத்தலோடு யாழ்ப்பாணம் தன்னைத் திருப்திப்படுத்தியிருக்கக் கூடும்.

    இயக்கத்தில் பெண்கன் சேர்த்து புரட்சி செய்தது. சேலை உடுக்கவேண்டும் என்று வேறு மிரட்டியது. பொருட்களைப் பதுக்குபவர்களுக்கும், விலை கூட்டி விற்பவர்களுக்கும் தண்டனை இல்லாமல், தங்கள் வரிப்பணத்தை வசூலித்து மகிழ்ந்து கொண்டது. எந்த கட்டத்திலும் யாழ்ப்பாணத்துக்கு முரணாய் புலிகள் எதையும் செய்யவில்லை. ஏன் பொதுவுடைமைத் தத்துவத்தைக் கூட கைவிட்டதே. புலிகள் சமூக விரோதிகள் என்று கொன்றது விடுதலைக்காக போராடிய மற்ற அமைப்புகளின் உறுப்பினர்களையும் திருடர்களையுமே அன்றி உண்மையான சமூக விரோதிகன் அல்ல. அவர்களின் அரவணைப்பில் தான் புலிகள் வளர்ந்தனர்.

    ஆBலும் தற்போது பிராங்கன்ஸ்டைன் விஞ்ஞானியின் கட்டுப்பாட்டை பிராங்கன்ஸடைன் பூதம் மீறியது போல், யாழ்ப்பாணத்தின் கட்டுப்பாட்டை புலிகள் மீறி விட்டார்கள். இங்கு முன்பு புலிகளின் புகழ் பாடிய பலர் இப்போது அடக்கி வாசிக்கிறார்கள். ஏனென்றால் வீட்டாரை கடத்தி கப்பம் கேட்கிறார்களாம்.. தனக்கு வரும் போது தான் தலையிடியின் மகத்துவம் புரிகிறது. வீட்டை விட்டு வெளியேறுவோர் வீட்டையும் உறுதியையும் கொடுக்க வேண்டும். காணி, பூமிக்காக உயிரை தியாகம் செய்யும் (அல்லது எடுக்கும்) யாழ்ப்பாணம் பொறுக்குமா? யாழ்ப்பாணத்து வீடும், அச்சிறுக்கையான வேலியும் பறிக்கப்பட்டால் என்னாவது? தாலியில் தங்கத்தை வெட்டுவதைப் பார்த்துக் கொண்டிருக்குமா?

    ஆனால் ஏன் மெளனமாய் இருக்கிறது? இதன் இயல்பே அது தான். கெஞ்சினால் மிஞ்சி, மிஞ்சினால் கெஞ்சி.. அடக்கும் போது அடங்கி.. அடங்கும் போது அடக்கி... சிங்கள அடக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்ததாக பீற்றிக் கொண்டவர்கள் ஏன் இன்று புலிகளுக்கு எதிராக கிளர்ந்தெழவில்லை? புலிகளின் அடக்குமுறைக்கு தப்பி ஏன் விசா எடுத்து வெளியேற துடிக்கிAர்கள்? நின்று போராடலாம் தானே?

    பிராங்கன்ஸ்டைன் பூதத்துக்கும் அழிவுக்கான நேரம் வந்து விட்டது. விஞ்ஞானியின் கழுத்தை இறுகப் பிடித்து நசித்துக் கொண்டிருக்கிறது. தன்னைத் தானே அழிக்கும் அழிவுக்கு ஆரம்பம் வகுத்து விட்டது. 'உலக முடிவு நெருங்கி விட்டது' என்று ஆண்டாண்டாக கூறிக் கொண்டிருக்கும் மதப் பிரசாரகன் போல பயமுறுத்தா விடடாலும், அழிவு நிச்சயம் என்பது உண்மை. (ஈரோஸ் கூடத்தான் 'புலி இறுதியில் தன்னை அழித்துக் கொள்ளும். நாம் மிஞ்ச முடியும்' என்று நினைத்தது)

    இறுதிக்கட்டம் இன்றோ, நாளையோ என்பதல்ல பிரச்சனை. நிச்சயமானதும் விரைவில் நிகழப் போவதுமாகும். 'தன்னைத் தானே அழித்துக் கொள்ளும்' இராட்சதர்கள் போலவே புலியும் தன்னை அழித்துக் கொள்ளும். அதற்கு முன் தன்னை உருவாக்கிய யாழ்ப்பாணத்தை ஒரு கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

    இந்தப் பிராங்கன்ஸ்டைன் பூதத்தினால் விஞ்ஞானியை வெல்ல முடியுமா? என்றால் இல்லை என்றே கூற வேண்டும். யாழ்ப்பாணத்துக்கு தன்னைக் காத்துக் கொள்ளத் தெரியும். யாழ்ப்பாணத்துக்கு இன்று தேவைப்படுவது எல்லாம் புலிகளின் அடக்குமுறையில் இருந்து மீட்டு, தன் நலன்களைப் பாதுகாப்பதற்கான வழியே. அதைச் செய்ய ஒரு தலைமை தேவை. அது கூட்டணியாயிருந்தால் என்ன? துரோகக் குழுக்களாக இருந்தால் என்ன? ஏன் இந்திய இலங்கை இராணுவமாக இருந்தால் தான் என்ன? இன்னொரு தடவை தன் செட்டையை உதிர்த்து எந்த வித தயக்கமுமின்றி, வெட்கம் கெட்ட தனத்துடன் இதே யாழ்ப்பாணம் அந்தத் தலைமைகளுக்கு துதிபாடி, எல்லாப் பழியையும் புலிகள் மேல் போட்டு மீண்டும் தன் சுயரூபத்தைக் காட்டிக் கொள்ளும்.

    Postad



    You must be logged in to post a comment Login