Recent Comments

    இன்றும் சுதந்திரக் குரல்கள்…

    thayagam featured-press freedomக.கலாமோகன்

    இனவாதம், மொழிவாதம், சாதியவாதம், மத வாதம். இவைகளை நிராகரித்தால்தான் கலையுலகத்துள் மனிதத்தைப் பாடமுடியும் என நான் நினைக்கின்றேன். இந்தப் பாடலை நாம் மிகவும் அதிகமாகக் கேட்காது இருத்தல் என்பது தொடர்கின்றது. மனித சுதந்திரப் பாடலை எழுதுவோரும், கீறுவோரும் மிரட்டப்படுகின்றனர், விரட்டப்படுகின்றனர், சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகின்றனர், கொலைசெய்யப்படுகின்றனர். 21 ஆம் நூற்றாண்டில் நாம் சுதந்திரத்தை வாழுகின்றோம் என்பது பொய். press-freedom12014 ஆம் பாகிஸ்தானில் 14 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். பிரான்சின் “le monde” பத்திரிகை இந்த நாட்டை மிகவும் மோசமான நாடு என்று கருதுகின்றது. இலங்கை நாடும் மோசமான நாடுதான் என்பது நிறையப் பேரின் கருத்தாக இருக்கலாம். இங்கும் எழுத்து உரிமை இப்போதும் மிதிக்கப்படுகின்றது. எமது முதலாவது அகதியாக இருந்தவர் ஒரு சிங்களவரே. அவர் Varindra Tarzie Vittachi. இவர் Emergency '58 எனும் புத்தகத்தை எழுதியதால்தான் இலங்கையில் தமிழர்களின் அழிப்பு உலகுக்குத் தெரியவந்தது. இந்தப் புத்தகத்தை எழுதியபின் அவர் இலங்கையை விட்டு வெளியேறினார். அல்ஜீரியா பிரான்சின் காலனித்துவத்தை 120 வருடங்கள் வாழ்ந்தது. இது விடுதலை பெற்றபின் மக்களுக்கு சுதந்திரம் கொடுத்ததா? 1990 இல் 100 க்கும் மேற்பட்ட பத்திகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த கொலைகளை அரசும், அரசுக்கு எதிப்பானவர்களும் செய்துள்ளனர். அல்ஜீரியர்கள் சுதந்திரம் பற்றிப் பேசவேண்டுமாயின் பிரான்ஸ் வருகின்றனர் அகதிகளாக. 1523_file_b_inde_dilemஇந்த நாட்டில் மிகப் பெரிய குறும்போவியர் வாழ்கின்றார். அவரது உயிர் பாதுகாப்புக்காக அவர் மிகவும் ரகசியமாகவே வாழ்கின்றார். Ali Dilem அவரது பெயர். 47 வயது. இன்றும் பயம் இல்லாமல் அரச பயங்கரவாதத்தையும், இஸ்லாமிய பயங்கரவாதத்தையும் எதிர்த்துக் கீறுபவர். இவருக்கு நிறையக் கௌரவங்கள் கிடைத்துள்ளபோதும் மிகவும் ஆபத்து வயலில்தான் அவரது ஓவியம் ஓடிக்கொண்டுள்ளது.   ஒவ்வொரு ஆண்டும் நிறைய எழுத்து சுதந்திரம் அழிக்கப்பட்டுக் கொண்டுள்ளது. ஒவ்வொரு கண்டத்திலும் நிறையப் பேனாக்களின் அழிவுகள். இந்த அழிவுகள் புதிய பேனாக்களின் வருகையை நிறுத்தவில்லை. இன்றும் நிறைய எழுத்துகள் மனித சுதந்திரதைத் தேடி எழுகின்றன. அண்மையில் ஈரானிய நடிகை Golshifteh Farahani பிரான்சில் நிர்வாணமாகத் தனது உருவத்தைக் காட்டினார். Farahani_Nude_Photo_Shoot இந்த நிர்வாணம் ஓர் விடுதலையின் போக்கே. “பிரான்சில்தான் பெண்களுக்கு நிறைய உரிமைகள் உண்டு” என அவர் தெரிவித்துள்ளார். இந்த சிறு குறிப்பை Golshifteh Farahani ன் படத்துடனும், Ali Dilem மின் குறும்போவியத்தைத் தருவதுடனும் முடித்துக்கொள்கின்றேன்.

    Postad



    You must be logged in to post a comment Login