Recent Comments

    மதம்

    ஜெயந்தீசனின் குட்டிக்கதைகள் 

    சிறிது பயமாக உள்ளது. இந்த உலகில் நாம் எதுமீதும் பேசலாம். பிரச்சினை இல்லை. மதம்மீது பேசினால் சிக்கல்தான். இதனால்தான் நான் என்னோடு பழகுவோரிடம் மதம்மீது பேசுவதில்லை. அனைத்து மத ரசிகர்களுடனும்  செக்ஸ் மீது பேசி நண்பர்களாக இருக்கின்றேன். 

    என்னோடு வேலை செய்யும் அலிக்குத் தனது முதலாவது மனைவியோடு 7 பிள்ளைகள். அவள் அவரை விட்டுப் பிரிந்தபோது அவர் சின்னக் கன்னியுடன் திருமணம் புரிந்தார். அலிக்கு வீட்டிலும் தொழுகை, தொழில் செய்யும் இடத்திலும் தொழுகை. நாம் உடுப்பு  மாத்தும் இடம் அவரது பள்ளிவாசல். நான் உடுப்பைக் கழட்டும்போது  அவர் அராபிய மொழியில் தொழுகை செய்வார். அவரது தலையைத் தொடாமல் அசைந்தே நான் எனது சப்பாத்தை எடுப்பேன்.  தொழில் இடத்தில் சட்டப்படி  தொழுகைக்கு உரிமை இல்லை. லாபம் சம்பாதிக்கும் முதலாளிகள் இந்தத் தொழுகைகளை அனுமதித்து அவர்களை அதிகம்  சுரண்டுவதைக்  நான் எப்போதும் கண்டுள்ளேன். 

    சில தினங்களின் முன் அலி என்முன் நடுக்கத்துடன் நின்றான். 

    “ஏன் நடுங்குகின்றாய்? உனது மனைவிக்கு அல்லது பிள்ளைகளிற்கு  வருத்தமா?” எனக் கேட்டேன்.

    “இல்லை, இல்லை. எனது தொலைபேசிக்கு வருத்தம்.”

    “காட்டு.”

    “காட்டினால் நீ காண்பதை எவருக்கும் சொல்லாது இருப்பாயா?”

    “என்னை நம்பு.”

    காட்டினான். போனில் போர்ணோக் காட்சிகள் வருவதும் போவதுமாக இருந்தன.

    “இந்த நிர்வாணக் காட்சிகளிற்காக ஏன் நடுங்க வேண்டும்?”

    “எப்படி இவைகள் எனது போனுக்குள் வந்தன என்பது எனக்குத் தெரியாது. 

    “ அலி எனக்குப் பொய் சொல்லாதே. நீ  போர்ணோவை எப்போதும் பார்க்கின்றாய். அதுதான்…” என்றேன்.

    “இல்லை, நான் பார்ப்பதில்லை….”

    “அலி, யார் போர்ணோ பார்ப்பதில்லை?”

    “நான் தொழுகைதான் செய்பவன்.”

    “தொழுகை செய்பவர்களுக்குப் போர்ணோ பார்க்கும் விருப்பம் இருக்காதா?”

    முடிவில் எனக்கு உண்மையைச் சொன்னான்.

    “எனது மனைவிக்குச் சில செக்ஸ் படங்களை அனுப்பினேன். அதன் பிறகு எனது போனில் போர்ணோ படங்களே எப்போதும் வருகின்றது. இந்தப் போனில் எனது முதலாம் மனைவியின் பிள்ளைகள்  விளையாடுவார்கள். அவர்களுக்கும் கொடுக்க முடியாது. மசூதிக்குச் சென்றாலும் என்னிடம் பலர் தமது உறவினரை அழைக்கப் போன் கேட்பார்கள். எப்படி எனது போனைக் கொடுக்க? இப்போது நான் மசூதிக்கும் செல்வதில்லை.” என்ற அலியின் முகத்தில் கவலை தெரிந்தது. 

    “அலி, நீ கூகுலில் (Google) பார்த்ததை அழி!”  

    “அழியா? எனக்கு அழிக்கத் தெரியாதே.”

    “நான் அழிப்பேன்.” என்றவுடன் தனது போனைத் தந்தான்.

    அலி ஓர் விண்ணன். நான் பார்க்காத போர்ணோக்களையே பார்த்து இருக்கிறான். காமசூத்திரத்தை கிழித்துக் கிழித்துக் குப்பையில் எறியும் வெறி எனக்கு வந்தது. 

    “அழித்துவிட்டாயா?” 

    “அலி, அழிக்கிறேன்.” என்றபடி அவன் கண்ட காம வீடியோக்களைப் பார்த்தபின் அழித்தேன்.

    பின் அவனிடம் போனைக் கொடுத்தேன்.

    அதனைத் திறந்தவுடன் “இது புதிய போன் போல உள்ளது “ என்றபடி “நீதான் எனது அல்லா.” என்றான். 

    Postad



    You must be logged in to post a comment Login