Recent Comments

    அந்தப்புரத்தில் ஒரு காதல் கதை!

    பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி

    கியூறியஸ் அந்தப்புரத்தில் டிலிவரி வேலை செய்கிறான் என்ற விசயத்தை வெளியில் விட்டால்...

    'மச்சமுள்ள மாப்ளடா! கொடுத்து வச்ச பய!' என்று பொறாமையோடு பலரும் பார்க்கக் கூடும்.

    யாழ்ப்பாணத் தமிழன் என்றால்... அண்ணை, அங்க கள்ளப் பேப்பரில வேலை எடுக்கலாமோ? என்பான்.

    அடேய், அது அது நம்ம மன்னர்களின் அந்தப்புரம் இல்லைடா, ஷேக்குகளின் Harem டா... வேலை எடுக்கப் போனியோ, கொய்யப்படுவது தலையாக இருக்காதுடா!

    டிலிவரி என்றதும் ஏதோ 'பிள்ளைப்பெத்துப் பார்க்கிற' வேலை என்று கற்பனைக் குதிரையைத் தட்டி பறக்கத் தேவையில்லை.

    அமேசன் டிலிவரி தான்!

    ஒரு காலத்தில் தமிழ் வந்தேறிகள் கனடாவில் சொறிந்து வாழ்ந்த இடம் அது...

    மீன் பிடிக்கு தடை விதிக்கப்பட்ட தாயகக் கடலில் பிடித்த விளைமீனும், கண்ணிவெடி விதைத்த பூனகரி மொட்டைக்கறுப்பனும், இராணுவ ஆக்கிரமிப்பு ஒட்டகப்புல நெல்லிக்கிரசும், மா அரிக்க ஓசித் தமிழ்ப் பேப்பரும் கிடைக்கும் சுப்பர்மார்க்கட் பொட்டு(பெட்டி)க்கடை வைக்கும் அளவுக்கு... அங்குள்ள கட்டடத் தொகுதிகளில் தமிழ் அகதிகள் இருந்தார்கள்.

    இப்போது...?

    எல்லாரும் வாங்கினம் என்று புது வீடு வாங்கிக் கொண்டு எல்லாத் தமிழர்களும் மார்க்கத்திற்கு புலன் பெயர்ந்ததால்... இப்போது வேறு குடிகள் வந்தேறி விட்டன.

    இப்போது மாலை நேரங்களில் அங்கே போனால்...

    ஏதாவது பூதங்கள் நம்மைக் கடத்திப் போய், காபூலில் விட்ட மாதிரி இருக்கும்.

    குர்தா தாடி முல்லாக்களும் புர்க்கா பாபிகளுமாக...!

    மாலை நேரங்களில் மதரசாக்களுக்கு பிள்ளைகளை கொண்டு செல்ல பஸ்ஸே வரும்.

    இதைவிட, சில மாடிகளில் லோக்கல் மதரசாக்கள் வேறு!

    கனடாவிலேயே சனத்தொகைப் பெருக்கம் அதிகமாக உள்ள இடமாக அது அறியப்பட்டுள்ளது.

    அதற்கு அங்கு காதல் பெருகியது காரணமாக இருக்காது.

    மாதாந்தம் வாசலில் வந்து விழுகிற கனடிய அரசின் உதவித் தொகை தான் காரணமாக இருக்கும்.

    இதனால்... வேலை வெட்டிக்கு போகாமல், இறைவனைத் தொழுவதே முழுநேர வேலையாகி, கட்டடத் தொகுதியின் அடியிலேயே வழிபாட்டுத் தலம் அமைக்கப்பட்டு, தொழுகை நடக்கும்!

    இந்தக் கட்டடத் தொகுதியே அந்தப்புரம் மாதிரித் தான்.

    முகமூடிய பெண்கள் சகல வகையான முகமூடிகளுடனும்...!

    கியூறியஸ்க்கு அதெல்லாம் பிரச்சனை கிடையாது.

    யாரைக் கண்டாலும்... ஒரு புன்சிரிப்புடன் 'ஹலோ!'

    எதிர்பாராமல் கேட்ட ஹலோவுக்கு பதில் சொல்லியாக ஆக வேண்டிய இக்கட்டில்...

    ஹலோ என்பார்கள் எல்லாரும்.

    பவ்வியமான கியூறியஸின் பணிவன்பினால் கவரப்பட்டு, அந்தப்புர ராணிகள் எல்லாம் நட்பு நாடிச் சிரிப்பார்கள். தாங்களாகவே கதைப்பார்கள்.

    முல்லாக்கள் இல்லாத நேரமாகப் பார்த்துத் தான்!

    முல்லாக்களும் பிரச்சனை இல்லை.

    நட்பு நாடிப் பேசுவார்கள். தங்களைப் போன்ற தென்னாசியன் என்பதில் ஒரு ஒற்றுமை கண்டிருக்கக் கூடும்.

    ஒரே ஒரு வயதான முல்லா தான்... ஆங்கிலமும் தெரியாது.

    நீ முஸ்லிமோ?

    இல்லை.

    இந்துவோ?

    இல்லை!

    இந்தியனோ?

    இல்லை.

    அப்ப எந்த இடம்?

    கிழவர் முகம் சரியாக இல்லை.

    முல்லா இனிமேல் தொழுகைக்கு போக முன்னால்...

    இரட்டைத் தாள் போட்டுத் தான் போவார் போல இருந்தது!

    தனது பரம்பரைகளின் தூய ரத்தம் மாசுபடுவதை விரும்பாதிருந்திருக்கக் கூடும்.

    புர்கா பாபிகள் சில நேரங்களில் கடுப்பு ஏற்றுவார்கள்.

    கையில் பொட்டலத்துடன் கதவைத் தட்டினால்...

    உடனே கதவைத் திறக்க மாட்டார்கள்.

    சரி! 'கொஞ்சம் பொறு' என்றாவது?

    ஊகூம்!

    சாவகாசமாகப் போய் முக்காட்டை எடுத்து மூடிக் கொண்டே,

    'கதவுக்கு வெளியில் வைத்து விட்டுப் போ!'

    'உங்கள் கையெழுத்து வேண்டும்!'

    கதவைத் திறந்து கதவின் பின்னாலிருந்து கை வரும்!

    இன்றைக்கு வழமையில் கணவனே வந்து நட்புடன் பொட்டலத்தை பெற்றுக் கொள்ளும் வீட்டில்...

    முல்லாவின் வியட்னாமிய மனைவி, கதவைத் திறக்காமலேயே, 'வாசலில் வைத்து விட்டுப் போ!' என்றாள்.

    இந்த இழுபறி விவகாரங்கள் தெரிந்ததால், நான் செய்யும் ஓவர்டைம் பற்றி சுப்பர்வைசர் காரணம் கேட்பதில்லை.

    எல்லாரும் முகம் மூடுவதில்லை.

    ஒரு தடவை, ஹை ஹீல்ஸ், இறுக்கமான மினிஸ்கேட்டுடன் சற்று ஓவரான மேக்கப்புடன் எலிவேட்டரில் வந்த பெண்ணைப் பார்த்து, கியூறியஸ்க்கே கூச்சமாகி விட்டது.

    தற்செயலாக கியூறியஸ் அவளைப் பார்ப்பதாக யாராவது நினைத்தால்...!

    தனது தளம் வரும் வரைக்கும் கியூறியஸ் கண்ணை மூடி தியானம் செய்ய வேண்டியதாயிற்று.

    கண்கள் மட்டுமே வெளியில் தெரியும் கருப்பு முகமூடிகள் முதல்... தலையைச் சுற்றிய முக்காடுகள் வரை இருந்தாலும்... எதுவுமே இல்லாமல் சாதாரணமாகவே நடமாடும் அந்தப்புர ராணிகளும் உள்ளார்கள்.

    இன்றைக்கு காதலர் தினம்!

    அந்தப்புரம் என்றால்...

    காதல் என்ன, காமம் பற்றி கேட்க வேண்டுமா? என்பீர்கள்.

    கதவுகளும் முகங்களும் மூடிய அந்தப்புரத்தின் உள்ளே நடப்பது, காதலா, காமமா, நமக்கென்ன பிரச்சனை?

    அதற்கான சாட்சிகளாக...

    கொரிடோர்களில் எக்கச்சக்கமான குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறார்களே!

    காதலர் தினம் தான்!

    கொரிடோரில் இருந்து இருந்து படியால் அடுத்த மாடிக்கு இறங்க... படிக்கட்டுகளுக்கான கதவைத் திறக்க...

    நேரே ஒரு பாடசாலை மாணவி சுவரில் சாய்ந்தபடி..!

    டெலிவரிக்கு போகும் போது இப்படி யாரையாவது திடீரென்று கண்டால்... அவர்கள் திடுக்கிடாதபடிக்கு...

    ஒரு 'ஹலோ!'

    படி இறங்க...

    இன்னொரு பையன் நின்றிருந்தான்.

    அந்தப்புரத்தின் படுக்கையறைகளில் மட்டுமல்ல...

    படிக்கட்டுகளிலும் காதல் மயம்தான்!

    பையனுக்கும் 'ஹலோ!' சொல்லி, இருவருக்கும் இடையால் பொட்டலங்களுடன் கடந்து போய்க் கொண்டே இருந்தான் கியூறியஸ்.

    சில டிலிவரிகளை முடித்துக் கொண்டு...

    திரும்பவும் அதே மாடிகளுக்குள்ளால் போக வேண்டியிருக்க...

    திரும்பவும் அதே படிகளில்...

    இருவரும் நெருக்கமாக இருந்தார்கள்.

    கதவைத் திறந்த சத்தம் கேட்டு விலகியிருக்கக் கூடும்.

    திரும்பவும் 'ஹலோ!'

    ஏதோ தங்களை உளவு பார்க்க வந்ததாக நினைத்திருப்பார்களோ என்னவோ?

    திரும்பவும் அவர்களைப் பிரித்து...

    நடுவால் போய் டிலிவரி முடித்து...

    மூன்றாவது தடவையாக, வாகனத்தில் இருந்து பொட்டலங்களை எடுத்துக் கொண்டு மீண்டும் கட்டடத்தின் கதவுகளைத் திறக்க...

    அந்தப் பெண்...

    கியூறியஸை ஒரு மாதிரியாகப் பார்த்துக் கொண்டே கடந்து வெளியே போனாள்!

    யாழ்ப்பாணத்தில் காதல் பண்ணின கியூறியஸ்க்குத் தெரியும்.

    காதல் பண்ணுவதில் உள்ள சிக்கல்கள்! நெருக்கடிகள்!

    மனம் விரும்பிய மனைவியின் கையைப் பிடித்துக் கொண்டு நடப்பதே ஹராம் ஆன பூமி அது.

    காதலர்கள் சோடியாக நடப்பது என்பதே இனத் துரோகக் குற்றம்.

    காபூல் தலைநகரான ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியில் இருந்த போது ஒழுக்க விதிகளை அமுல்படுத்த Ministry of Vice and Virtue என்ற அமைச்சே இருந்தது.

    கீழே தொழுது கொண்டிருந்த முல்லாக்களின் கண்ணில் இந்தச் சோடி பட்டிருந்தால் என்ன நடந்திருக்குமோ தெரியாது.

    புர்க்கா பாபிகளின் கண்ணில் பட்டிருந்தால்...?

    'நம்மைப் போல முகத்தை மூடினால், உன் அம்மாவுக்கே அடையாளம் தெரியாது' என்று புத்திமதி சொல்வார்களோ?

    இன்றைக்கு பேஸ்புக்கைப் பார்த்தால்...

    இந்துத் தீவிரவாதிகளும், இஸ்லாமியத் தீவிரவாதிகளும் ஒன்றாகக் கை கோர்த்திருக்கிறார்கள்...

    காதலர் தின எதிர்ப்பில்!

    தங்கள் மதக் கொள்கைகளின் அடிப்படையில், ஆயிரத்தில் ஒரு இரவுகளும் காமசூத்திரமும் கண்ட மதங்கள் காதலை தடை செய்ய முயற்சிக்கின்றன.

    அடே, ஓம் என்ற மந்திரத்தை விட ஓமோன்கள் பலம் வாய்ந்தவைடா!

    காலத்தை வெல்லும் இந்த படிக்கட்டுக் காதல் ஜோடிகளான அனார் சலீம் அல்லது லைலா மஜ்னு எங்கிருந்தாலும் வாழ்க!

    Postad



    You must be logged in to post a comment Login