Recent Comments

    பெருங்குடல் அழற்சி Diverticulitis

    பூங்கோதை

    வழமை போலவே நடப்பிலுள்ள கல்வியாண்டின், பள்ளி இறுதித்தவணையின் இறுதி வாரம், மிக மும்முரமான காலப்பகுதி. இந்த ஆண்டில் நான் கற்பித்த அத்தனை குழந்தைகளும் அடுத்த ஆண்டிற்குப் போகவிருப்பதால், ஆசிரியர்களாகிய நமக்கும் அவர்களை புதிய வகுப்பிற்காக மனதாலும் பக்குவப்படுத்தி அனுப்பி வைக்க வேண்டிய சவாலான நிலைமையோடு, பள்ளி நிர்வாகத்திற்காக முடித்துக் கொடுக்க வேண்டியதுமான கடமைகளும் இருந்தன.

    “ மிஸ் எஸ், உன்னை விட்டுப் போக கவலை மேல் கவலையாய் இருக்கு!” எனச் சொன்னதைக் கேட்டு காது புளித்திருந்தாலும், என் மனதிலும் நெகிழ்ச்சி.

    “ என் நாய்க்குட்டி இறந்த நாளை விட மிகக்கவலையான நாள் இது தான்!” என்ற சின்னவளின் அந்த நீல நிறக்கண்களிலிருந்து அருவியாய் கண்ணீர் வந்தது தான் ஹைலைட். இப்படியாகப் பேசி, என்னை அணைத்துக் கொண்டவள் என் வகுப்பில் முன்பு செய்த அட்டகாசங்கள் கணக்கிலடங்கா.

    அதே வாரத்தில் தான், இருந்தாற் போல் என் இடையிலும் அடி வயிற்றுப் பக்கத்திலும் சுரீர் எனத் தோன்றி மறைந்த வலியை எனக்குப் பெரிதாக எடுக்கத் தோன்றவில்லை. இன்னும் இரண்டே நாட்களில் கோடை விடுமுறை வந்து விடும் பொருத்துக் கொள் என்றது மனது. வேலைப்பளு காரணமாக வந்த வலியாகக் கூட இருக்கலாம் என எண்ணி, இயற்கை வலி நிவாரணிகளையும் எடுத்தபடியே அந்தக் கடுமையான காலத்தைத் தள்ளியாயிற்று.

    வெள்ளியன்று,கோடை விடுமுறை விட்டாயிற்று. மனம் நிறைய என்னை விட்டுச்செல்லும் குழந்தைகளின் நினைவுகளுடனும், அவர்களின் பெற்றோர்கள் அள்ளித் தந்திருந்த பூங்கொத்துகள், பூங்கன்றுகள், நினைவுப் பரிசுகள், வாழ்த்துகளுடனும் வீடு வந்து சேர்ந்த எனக்கு, அப்போது தான் அந்த வயிற்று வலியின் தீவிரம் புரிய ஆரம்பித்தது.
    உடல் முழுவதும் அசாதாரண அசதி. மனதும் மகிழ்வாக இல்லாத ஒரு மாலைப்பொழுது.

    ஏழு வாரங்கள் தொடர்ச்சியான கற்பித்தலும் அதனோடு சார்ந்த பயிற்சிகளும் எழுத்து வேலைகளுமென முழு நேர வகுப்பாசிரியையின் பணி சார்ந்த களைப்போடு, வலி நிவாரணிகளையும் எடுத்த போது அன்று இரவு உறக்கம் என்னைத் தழுவிச் சென்று விட்டது.

    விடிகாலையில் வலி பூதாகரமாக எழுந்து நின்று ஆடியதில் வலி தாங்கும் சக்தி கொண்ட என்னையே அது ஆட்டம் கொள்ளச் செய்தது. சரி, இதற்கு மேல் மருத்துவ உதவி எடுக்காமல் இருப்பது உயிர்கொல்லியாகலாம் என மனதும் ஆர்ப்பரிக்க, மகனுடனும் அவசர அவசரமாக அவசரச் சிகிச்சைப் பிரிவை அடைந்தோம்.

    “ ஏதாவது தேவையெண்டால் வாய் திறந்து சொல்லாமல் இருப்பியோ? ஏன் இப்பிடியெல்லாம் நடந்து கொள்ளுறாய்? செத்துக்கித்துப் போகாதை, நான் உனக்கு செய்ய வேண்டியது நிறைய இருக்கு.” தலையைத் தடவியபடியே, மகன் தோளில் சாய்த்துக் கொள்ள, அவன் தோழி என் கைகளைப் பற்றியபடியே என் பக்கத்தில் அமர்ந்து கொள்ள திருவிழா இனிதே ஆரம்பமாகியது.

    இரத்தப் பரிசோதனை உள்ளிட்ட அத்தியாவசியமான அனைத்து மருத்துவ பரிசோதனைகளும், என் வலி நிவாராணிகளோடு நடாத்தப்பட்டு, மருத்துவர்கள் தமது முடிவைத் தெரிவித்த போது இரவு 7 மணியாகியிருந்தது.

    நோயின் பெயர் ஏதோ பேய்ப் படங்களின் பெயர் போல “ டைவேர்ட்டகுலைசிஸ்’ என் ஒரு நூதனமாக இருக்க, இதன் வீரியம் அதிகமாகி, குடலின் உள்ளே சிறு கட்டி ஒன்று வெடித்து, எனக்கு இரத்தப்போக்கு ஏற்பட்டிருந்தது. இதனை ஆங்கிலத்தில் Perforated bowel என்கின்றனர். வலி, வலி, வலி! வலி தவிர எதுவும் உணர முடியாமல் மயங்கிச் சாயும் நிலை.

    இனி, இந்த நோயின் தன்மைகளையும் அதனைத் தவிர்க்கும் அல்லது கண்டறியும் நிலமையைப் பார்ப்போம்.

    டைவர்டிகுலிடிஸ் என்பது செரிமான மண்டலத்தின் ஒரு அழற்சி நிலை. டைவர்டிகுலா எனப்படும் சிறிய பைகள் பெருங்குடலில் உருவாவதற்கான சரியான காரணங்கள் அறியப்படவில்லை. இந்த சிறு பைகளில் அழற்சி அல்லது தொற்று ஏற்பட்டால், அந்த நிலை டைவர்டிகுலைடிஸ் எனப்படும்.
    ((Serious consequences from diverticulitis may necessitate surgery, including the formation of abscesses, which are encrusted masses of pus. You could develop peritonitis if these pass through the intestinal wall. This infection carries a risk of death).

    டைவர்டிகுலிடிஸ் அதி உச்ச வலியையும் வேறு சில உடற்சிக்கல்களுக்கும் வழிவகுக்கும். இந்த நிலையில் உள்ள ஒருவர் சில உணவுகள் அவர்களின் அறிகுறிகளை மோசமாக்குவதை அவதானிக்கக் கூடியதாய் இருக்கும்.
    சிலர் டைவர்டிகுலிடிஸின் தாக்கத்தை எளிதாக்குவதற்கு குறிப்பிட்ட உணவு முறைகளைப் பின்பற்றுகிறார்கள், மற்றவர்கள் வீட்டு வைத்தியம் பயன்படுத்துகின்றனர்.

    பல ஆண்டுகளுக்கு முன்பு, சோளம், பயறு, ஏனைய விதைகளைச் சாப்பிடுவது குடலில் அழற்சியை தோற்றுவித்து, டைவர்டிகுலிடிஸை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் நினைத்தார்கள், ஆனால் அதை ஆதரிக்கும்படி எந்த ஆராய்ச்சியும் கைகூடவில்லை. விதைகளுடன் கூடிய தக்காளி மற்றும் ஸ்ட்ராபெர்ரிகள் உட்பட இந்த வகையான உணவுகளை சாப்பிடுவது பாதுகாப்பானது என்பது தற்போதைய தரவு.

    நோய் அறிகுறிகள்:
    இனி நோயின் அறிகுறிகளைப் பார்த்தோமேயானால், டைவர்டிகுலிடிஸின் அறிகுறிகள் பின்வருமாறு காணப்படுகிறது.

    * வலி; இது ஒருவரைக் கலங்கடிக்கும் திறமை கொண்டது. என்னைப் பொறுத்தவரைக்கும், குழந்தை பெற்ற பெண்களாக இருந்தால், அவர்களது மகப்பேற்று வலிக்கு இது ஒப்பானதாகும். மற்றும் இந்த வலி பல நாட்கள் நீடிக்கும். அடிவயிற்றின் கீழ் இடது பக்கம் வலியின் வழக்கமான தளமாகும்.
    * குமட்டல் மற்றும் வாந்தி.
    * காய்ச்சல்.
    * வயிற்று மென்மை.
    * மலச்சிக்கல் அல்லது, பொதுவாக, வயிற்றுப்போக்கு.

    காரணங்கள்:
    உங்கள் பெருங்குடலில் இயற்கையாகவே பலவீனமான இடங்கள் உண்டு. அவை சில வகை அழுத்தத்தின் கீழ் செல்லும் போது டைவர்டிகுலா பொதுவாக உருவாகிறது. இவை பளிங்கு போன்ற பைகள், பெருங்குடல் சுவர் வழியாக நீண்டு செல்லும் தன்மை கொண்டவை.

    டைவர்டிகுலா குடலைக் கிழிக்கும்போது டைவர்டிகுலிடிஸ் ஏற்படுகிறது, இதன் விளைவாக வீக்கம் மற்றும் சில சந்தர்ப்பங்களில் தொற்று ஏற்படுகிறது.

    ஆபத்து காரணிகள்:
    பல காரணிகள் டைவட்டிகுலைட்டிஸ் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கலாம்:
    அதற்கான காரணங்கள் எதுவும் என்னோடு சம்பந்தப்படுத்த முடியாததாக இருந்தது வைத்தியர்களை குழப்பத்தில் வைத்திருந்தது. நான் மாமிசம் சாப்பிடுவதில்லை, பலவகை மரக்கறிகள், மீன், முட்டை எடுப்பதுண்டு, தினசரி உடற்பயிற்சி என ஆரோக்கியமான வாழ்வு முறைகளைப் பின்பற்றுபவள், எங்கு தோற்றுப் போனேன் என்பது ஆச்சரியம தான்.

    * உடல் பருமன். அதிக எடையுடன் இருப்பது, டைவர்டிகுலிடிஸ் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
    * புகைபிடித்தல். புகைபிடிக்காதவர்களை விட சிகரெட் புகைப்பவர்கள் டைவர்டிக்யூலிடிஸை அனுபவிக்கும் வாய்ப்பு அதிகம்.

    * உடற்பயிற்சியின்மை.
    சிறந்த உடற்பயிற்சி உங்களுக்கு டைவர்டிகுலிடிஸ் வரும் அபாயத்தைக் குறைக்கிறது.

    * வயது அதிகரிப்பு.
    டைவர்டிகுலிடிஸ் நோய் வயதுக்கு ஏற்ப அதிகரிக்கிறது.

    * விலங்கு கொழுப்பு அதிகமான, மற்றும் நார்ச்சத்து குறைவாக உள்ள உணவு வகைகளை உள்ளெடுப்பது. விலங்குகளின் கொழுப்பை அதிக அளவில் உட்கொள்வது ஆபத்தை அதிகரிப்பதாகத் தெரிகிறது, இருப்பினும் குறைந்த நார்ச்சத்தின் பங்கு மட்டும் தெளிவாகத் தெரியவில்லை.
    * சில மருந்துகள். ஸ்ட்ரோய்ட்ஸ் ( steroids) ஐபூபுருஃபென் ( Ibuprofen) அட்வில், மற்றும் நாப்ராக்ஸன் சோடியம் (அலேவ்) போன்ற ஸ்டெராய்டல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் உட்பட பல மருந்துகள் டைவர்டிகுலிடிஸ் ஏற்படும் நிலையை அதிகரிக்கக் கூடும்.

    சிக்கல்கள்:
    கடுமையான டைவர்டிகுலிடிஸ் உள்ளவர்களில் சுமார் 25% பேர் மருத்துவ சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர். இவ்வகைச் சிக்கல்கள் கீழ் தரப்பட்ட நிலைகளால் உருவாகலாம்.
    * சீழ் பையில் சேரும் போது ஏற்படும் தொற்று.
    * வடுவால் குடலில் அடைப்பு.
    * குடல் அல்லது குடல் மற்றும் உறுப்புகளின் பிரிவுகளுக்கு இடையே ஒரு அசாதாரண பாதை ஏற்படலாம்(ஃபிஸ்துலா).
    * பெரிட்டோனிட்டிஸ், இது பாதிக்கப்பட்ட அல்லது வீக்கமடைந்த பை உடைந்து, குடல் உள்ளடக்கங்களை உங்கள் வயிற்று குழிக்குள் கொட்டினால் ஏற்படலாம். பெரிட்டோனிட்டிஸ் ஒரு மருத்துவ அவசரநிலையாதலால் உடனடி சிகிச்சை அளிக்கப்படா விட்டால், உயிர் ஆபத்து ஏற்படலாம்.


    இந்த நோய்க்கு நீர் ஆகாரமும், அன்டிபயோட்டிக்ஸ்ஸும் மாத்திரமே ஆரம்ப நிலையில் சிகிச்சையளிக்கின்றன. நிலைமை மோசமானால், இதற்கு பலனளிக்க முடியாத போது, ஏற்கனவே ஆரம்பத்தில் கூறியது போல நோயின் தீவிரத்தைப் பொறுத்து அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படலாம்.

    வெறும் நீர் ஆகாரத்தில் ஆரம்பித்து, Low fibre diet எனப்படுக்கின்ற நார்ச்சத்து குறைந்த உணவுகளையே மருத்துவர்கள் தற்போது உள்ளெடுக்கச் சொல்லியிருக்கின்றனர். அதன் பின்னர் படிபடியாக சாதாரண உணவுகளை உள்ளெடுக்கலாம்.

    இது ஆண்களை விட பெண்களையே அதிகமாகத் தாக்குவதாக ஆய்வுகள் கூறுகின்றன. பெண்கள் அசாதாரணமான வயிற்று நோ, வயிற்று வலி, இடுப்பு வலி தோன்றும் போது அல்லது வயிறு பொறுமலாக இருப்பின் உடனடியாக மருத்துவரின் ஆலோசனை பெறுவது சிறந்தது.

    Reference:

    https://www.webmd.com/digestive-disorders/understanding-diverticulitis-treatment

    https://www.mayoclinic.org/diseases-conditions/diverticulitis/diagnosis-treatment/drc-20371764

    https://www.niddk.nih.gov/health-information/digestive-diseases/diverticulosis-diverticulitis/treatment

    is/diagnosis-treatment/drc-20371764

    https://www.niddk.nih.gov/health-information/digestive-diseases/diverticulosis-diverticulitis/treatment

    Postad



    You must be logged in to post a comment Login