Recent Comments

    பட்டினி போக்க ‘வாடி என் கப்பக் கிழங்கே!’

    உலகெங்கும் தொடர்ந்து வரும் வரட்சி காரணமாக, உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உண்டாகியுள்ளது. இந்த வரட்சியிலும் பயன் தரக் கூடிய பயிராக மரவள்ளிக் கிழங்கு உள்ளது. பிரேசில் நாட்டிலேயே மரவள்ளி பயிரிடப்பட்டு பின்னர் போத்துக்கேயரால் இலங்கை உட்பட உலகெங்கும் கொண்டு செல்லப்பட்டது. நூறாண்டுகளாக மரள்ளிக் கிழங்கு ஆபிரிக்கா, தென்னமெரிக்கா, ஆசியா ஆகிய நாடுகளில் கோடிக் கணக்கான ஏழைகளின் பசி போக்கும் உணவாக இருந்து வருகிறது. ஆபிரிக்காவில் மட்டும் மரவள்ளிக் கிழங்கு அங்குள்ள மக்களின் மாப்பொருள் உணவின் மூன்றில் ஒரு பகுதியாக இருந்து வருகிறது.தற்போது மரவள்ளிக் கிழங்கு மா மற்ற தானியங்களுடன் சேர்த்து அரைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. மிகவும் வரட்சியான காலங்களில் மரவள்ளித் தாவரம் உறங்கு நிலைக்குச் சென்று விடுகிறது. இதனால் மண்ணிற்குள்ளே சுமார் மூன்று வருடங்கள் வரைக்கும் மரவள்ளிக் கிழங்கு அழியாமல் பாதுகாப்பாக இருக்க முடியும். போதிய நீர் மீண்டும் கிடைக்கும் போது அது நீரை உறுஞ்சி மீண்டும் தன் வளர்ச்சியை ஆரம்பிக்கும். எனவே, தற்போதைய வரட்சிச் சூழ்நிலைகளில் மற்ற தானிய மாப்பொருள் உணவுப் பொருட்கள் கருகி விளைச்சலின்றிப் போகும் நிலையில் மரவள்ளிக் கிழங்கு பட்டினியைப் போக்க உதவ முடியும். நெல், சோளம் போன்ற தானியப் பொருட்கள் அழிந்து போகும் நிலையில் மரவள்ளிக் கிழங்கு வரட்சியிலும் வளர்ந்து பசி போக்கும். வைரஸ் மற்றும் உயிரினங்களால் மரவள்ளி பாதிப்படையும் வாய்;ப்புகள் இருந்த போதிலும் அவற்றிலிருந்து பாதுகாக்க விஞ்ஞானிகள் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மரவள்ளிக் கிழங்கும் மாசிக் கருவாட்டுச் சம்பலும் ருசித்த நம் வீர மறவர்கள் வாயூறுவது தெரிகிறது. எதற்கும் மரவள்ளிக் கிழங்கு உண்ட பின்னால், இஞ்சித் தேநீர் குடித்து ஆபத்துக்கு உள்ளாக வேண்டாம் என்பதை மட்டும் பணிவு வினயத்துடன் தெரிவிக்க விரும்புகிறோம்.மரவள்ளிக் கிழங்கின் நச்சுத் தன்மைக்கு காரணம் அதன் இலைகளிலும் கிழங்கின் தோலுக்குக் கீழும் சயனைட் காணப்படுவது தான்.

    Postad



    You must be logged in to post a comment Login