Recent Comments

    கண்டதும் கற்றுப் பண்டிதராவீர்

    ரொறன்ரோ நகரில் பல நூலகங்கள் பிரஜைகளின் பாவனைக்காய் உள்ளன. அங்கே தமிழ் உட்பட பல மொழிகளில் நீங்கள் பயன்பெறலாம். தமிழ்ப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் மட்டுமன்றி, படங்கள், ஒலிவட்டுக்கள் என பலவற்றை நீங்கள் வாங்கி வாசித்து, கேட்டு, பார்த்து பயன் பெறலாம். சுமார் ஏழாயிரத்துக்கும் அதிகமான தமிழ் நூல்கள், படங்கள் என ரொறன்ரோ நூலகத் தொகுதியில் உள்ளன. இவை பெரும்பாலும் தமிழர் செறிந்து வாழும் பகுதியில் உள்ள நூலகங்களில் உள்ளன. நீங்கள் வீட்டே அவற்றைக் கொண்டு செல்வதாயின் அதற்கு உங்களுக்கு நூலக அடையாள அட்டை தேவை.  உங்களுடைய ஆளடையாளமும், உங்கள் விலாசமும் கொண்ட பத்திரங்களுடன் இந்த அட்டையைப் பெறலாம். அடையாளம் இல்லாதவர்கள் கூட, நூலக அடையாள அட்டை பெறக் கூடியதான தபால் அட்டைகள் வைத்திருக்கிறார்கள். நீங்கள் விண்ணப்பிக்கும்போது, உங்கள் விலாசத்தை நிரப்பி அவர்கள் அனுப்ப, உங்களுக்கு அட்டை கிடைத்ததும் அதை அடையாளமாய் காட்டிப் பெறலாம். இதற்கு நீங்கள் ரொறன்ரோ வாசியாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. ரொறன்ரோவில் வசிக்கும், வேலை செய்யும், பாடசாலைக்குச் செல்லும், சொத்து வைத்திருக்கும் எவரும் இந்த அடையாள அட்டையைப் பெறலாம். ஒரே நேரத்தில் ஐம்பது பொருட்களை நீங்கள் வீட்டுக்கு கொண்டு செல்ல முடியும். படங்கள் 7 நாட்களும், புத்தகங்கள், குறுவட்டுகள் போன்றன 21 நாட்களும் வீட்டில் வைத்திருக்க முடியும். நூலக அட்டையைப் பெற்று, கண்டதும் கற்றுப் பண்டிதராகுங்கள்! (இந்த அட்டையையும் இணையத்தையும் வைத்து என்ன செய்யலாம் என்ற வித்தைகளை வரும் சுவடிகளில் பார்க்கலாம்!) வாசிப்பதால் மனிதன் பூரணமடைகின்றான். (மனிசிகளும் தான் என்பதைச் சொல்லாவிட்டால், பெண்ணியவாதிகள் கோபித்துக் கொள்வார்கள்!) ஞாபகமிருக்கட்டும், உண்மைகளையும், சிந்திக்க வைப்பவற்றையும் வாசிப்பவர்கள் தான் பூரணமடைகிறார்கள். பொய், புரட்டுக் குப்பைகளை வாசிப்பவர்கள் அல்ல!

    Postad



    You must be logged in to post a comment Login