Recent Comments

    வேலி தாண்டாதிருக்கச் ஆறு வழிகள்

    உங்கள் செல்லிடப் பேசியில் இடைக்கிடை முகப்புத்தகத்தில் என்ன போகிறது என்று பார்க்க ஆவலாய் இருப்பீர்கள். அப்புறமாய் நேரம் போகாவிட்டால் ஒரு படம் பார்க்கலாம் என்று தோன்றும். மாத முடிவில் தொலைபேசிக் கட்டணத்தைப் பார்த்ததும் தலையில் கை வைப்பீர்கள். தரவிறக்க எல்லை கடந்து, வேலி தாண்டிய வெள்ளாடு போல் முழி பிதுங்கும். எல்லையில்லாத் தரவிறக்க வசதி எல்லா செல்லிடப் பேசித் திட்டங்களுக்கும் இல்லை. தொலைபேசி நிறுவனங்கள் தரும் இத்தனூண்டு தரவு எல்லை முடிந்த பின்னால், மேலதிகத்திற்கு அறவிடுவது பகல் கொள்ளை தான். வேலி தாண்டாமல் இருக்க இதோ சில வழிகள்... 1.போகும் இடங்களில் கிடைக்கும் இலவச wi-fi சேவைகளைப் பயன்படுத்துங்கள். உங்கள் செல்லிடப் பேசியின் வரையறை பற்றிய கவலை இல்லாமல்! இப்போது நூலகங்கள், கோப்பிக் கடைகள் எல்லாம் இலவசமாய் இணையத் தொடர்பு கிடைக்கிறது. உங்கள் செல்லிடப் பேசியே தன்னாலேயே என்னென்ன இணைப்புகள் கிடைக்கின்றன, எது இலவசம், எது நுழைய முடியாதது என்றெல்லாம் சொல்லித் தரும். 2.உங்கள் தொலைபேசி நிறுவனத்தின் இணையத் தளத்திற்கு சென்று பதிவு செய்தால், தரவிறக்க எல்லைக்கு வரும்போது உங்களுக்கு தகவல் வரும்...  இதற்கான செயலிகள் அவர்களிடம் இருந்தால் அவற்றைத் தரவிறக்கம் செய்து பாவியுங்கள். அவையே உங்களுக்கு தரவின் அளவைக் காட்டித் தரும். 3. உங்கள் செல்லிடப் பேசியிலேயே உங்கள் தரவிறக்கப் பாவனை பற்றி அறிந்து கொள்ளலாம்.  உங்கள் செல்பேசியிலே உள்ள ளுநவவiபேள இல் உள்ள னுயவய ருளயபந இல் பதிவுகள் செய்தால், எல்லையை எட்டும் போது உங்களுக்கு அறிவிக்கவும், எல்லையைத் தாண்டியதும் பாவனையை நிறுத்தவும் நீங்கள் வழி செய்ய முடியும். அதைப் பயன்படுத்துங்கள். ஆனால் உங்கள் செல்பேசி கணிக்கும் தரவுத் தொகையும் உங்கள் செல்பேசி நிறுவனம் கணிக்கும் தரவுத் தொகையும் ஒன்றல்ல என்பதை ஞாபகம் வைத்திருங்கள். செல்பேசி நிறுவனங்கள் பகல் கொள்ளைக்காரர்கள் என்று இப்போது தானே சொன்னோம். அவர்கள் எப்படித் தரவுத்தொகையைக் கணிக்கிறார்கள் என்பது கடவுளுக்கும் தெரியாது. 4.உங்கள் செல்பேசியில் Data Usage இல் என்னென்ன செயலிகள் (apps) எவ்வளவு தரவு பயன்படுத்தின என்று பார்க்கலாம். இதில் அதிகளவு தரவைப் பயன்படுத்தும் செயலிகளை பயன்படுத்துவதை நிறுத்தலாம். அவற்றை wi-fi பயன்படுத்தும்போது மட்டும் செயற்படுமாறு வழி செய்யலாம். 5.படம் பார்த்தல், இணையத்தில் பாடல் கேட்டல் போன்றன அதிகளவு தரவைப் பயன்படுத்துகின்றன. அவற்றையும் குறைத்துக் கொள்ளுங்கள். 6.உங்கள் செல்பேசியை கணனியில் இணைத்து, (இது Tethering எனப்படும்) முகப்புத்தகம் பார்க்க முயற்சிக்காதீர்கள். தரவுத் தொகையை உறுஞ்சிக் குடிக்க இலகுவான வழி இது. ஒரு மாத கணக்கை ஒரு மணிக்குள் முடித்து விடும். இந்த வழிகளைப் பயன்படுத்தி, உங்கள் தரவுப் பாவனையைக் குறைத்தால், வேலி பாயப் போய், படக்கூடாத இடங்களில் கிழுவந் தடி குத்துவதை தவிர்க்கலாம்.

    Postad



    You must be logged in to post a comment Login