Recent Comments

    சுவடு பதிக்கும் சுவடி! (3)

    சுவடி தன் சுவடுகளைப் பெருமையுடன் பதித்து வெற்றிநடை போடுகிறது. அது விட்டுச் செல்லும் சுவடுகள் தங்களுக்கு மிகுந்த பயன் தருவதாகப் பலரும் பாராட்டுகிறார்கள். தாங்கள் கட்டாயமாய் அறிய வேண்டிய விடயங்கள், வேறெங்கும் கிடைக்காமல், சுவடியில் கிடைப்பதாகவும், ஒவ்வொரு விடயமும் தங்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் பயன் தருவதாகவும் உற்சாகப்படுத்துகிறார்கள். வன்னியில் வெளிவரவேண்டிய பத்திரிகைகள் இங்கே வருவதாகவும், இங்கு என்ன நடக்கிறது என்பதை அறிய ஆவலாய் இருப்பதால், கனடிய செய்தி, தகவல்களையும் சேர்த்து, பத்திரிகையாக்கும்படி  ஆலோசனை கூறினார்கள். வளர்ச்சிப்பாதையில் எதுவும் சாத்தியம்! சுவடியின் வெற்றியைப் பார்க்கும் போது, வழமையான தமிழ்ப் பாணியில் சுவடியின் சுவடுகளைப் பின்பற்றி பல அரிச்சுவடிகள் வரக்கூடும் என்றே தோன்றுகிறது. றஞ்சினி ரேக்அவுட் றிப்போட்டர், ஈழம் மீன்மார்க்கட் மலர், அண்ணாச்சி அடைவுகடை அமுதம் என்றெல்லாம் தமிழ் மகன் நிர்வாக வர்த்தகங்கள் இதழ்கள் வெளியிட்டால், எங்கள் சமூகமும் ஆரோக்கியம் அடையக்கூடும். வெளிவரும் பத்திரிகைகள் மீன் சுற்றவும் பயன்படும். எப்படியோ, நாடும் இனமும் நலம், வளம் பெற வேண்டும் என்பதே எங்கள் அவா!

    Postad



    You must be logged in to post a comment Login