Recent Comments

    இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே!

    சதா மனதில் கவலையும், காதில் செல்போனுமாய் திரிவோருக்கு காதில் தேனாய் வந்து பாய்கிறது ஒரு செய்தி! இதுவரை காலமும் செல்பேசி நிறுவனங்களின் ஏகபோகத்தின் தயவில் வாழ்ந்து, பெருந்தொகையாய் கட்டணம் செலுத்திக் கொண்டிருந்தவர்களுக்கு பாதுகாப்பு வழங்க ஒன்ராறியோ அரசு புதிய சட்டம் ஒன்றை அமுலாக்கியுள்ளது. முன்பெல்லாம் செல்பேசி ஒப்பந்தத்தை முறிப்பதாயின் பெரும் நட்டஈடு கட்ட வேண்டியிருக்கும். அதற்குப் பயந்தே, பலரும் மாதாந்தம் பெருந்தொகையைக் கட்டி அழுது கொண்டிருந்தார்கள். ஏப்ரல் முதலாம் திகதி அமுலாகும் இந்தச் சட்டம், புதிய செல்பேசிப் பாவனையாளர்களுக்கு மட்டுமன்றி, முன்பே மாட்டுப்பட்டவர்களுக்கும் மீட்சி கொடுக்கிறது. புதிய சட்டப்படி, புதிய செல்பேசி ஒப்பந்தங்கள் சட்டத்தரணிகளுக்குமே மட்டும் புரியும்படியானதாய் இ;ல்லாமல், பாவனையாளர்களுக்குப் புரியக் கூடிய விதத்தில் இலகுவான, தௌpவான மொழியில் எழுதப்பட்டிருக்க வேண்டும். உங்களின் ஒப்பந்தத்தை முறிப்பதற்கான நட்ட ஈடாக அதிகபட்சம் ஐம்பது டொலர்களை மட்டுமே செல்பேசி நிறுவனங்கள் அறவிட முடியும். ஒப்பந்தத்தில் மாற்றங்கள், நீடித்தல், புதுப்பித்தல் போன்ற மாற்றங்களுக்கு பாவனையாளர்களின் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.  இவ்வாறு பாவனையாளர்களுக்குத் தெரியாமல் மாற்றம் செய்தால், ஒரு வருடம் வரையிலான கட்டணத்தை பாவனையாளர்களுக்குத் திரும்ப வழங்க வேண்டும். மாதாந்த குறைந்த பட்சக் கட்டணத் தொகையை விளம்பரங்களில் தௌpவாகத் தெரிவிக்க வேண்டும். அந்தத் தொகை எல்லாக் கட்டணங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். குறைந்த கட்டணத்தைக் காட்டித் தூண்டில் போட்டு, பின்னர் வேறு கட்டணங்களைச் சேர்த்து மாட்ட முடியாது. உங்கள் ஒப்பந்தத்தை இரண்டு வருட காலத்தின் பின் எந்த நட்டஈடும் இன்றி ரத்துச் செய்ய உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் உங்கள் செல்பேசியின் விலை உங்கள் மாதக் கட்டணத்தில் கழிபட்டால், மீதித் தொகையை நீங்கள் செலுத்தியே ஆக வேண்டும். ஏற்கனவே மத்திய அரசு செல்பேசி ஒப்பந்தங்கள் பற்றி கடுமையான அறிவுறுத்தல்கள் விடுத்திருந்தாலும், அவை தண்டனைக்குரிய சட்டமாக்கப் படவில்லை. தற்போது ஒன்ராறியோ அவற்றைச் சட்டமாக்கியிருக்கிறது. எனவே, மாதா மாதம் பெருந் தொகையைக் கட்டி அழுது கொண்டிருந்தால், உடனேயே ரத்துச் செய்து புதிய சேவையை மலிவாகப் பெற்று... பிறகென்ன... கவலையே இல்லாமல் குப்பை கொட்ட வேண்டியது தான்!

    Postad



    You must be logged in to post a comment Login