Recent Comments

    வேலையும் வேலையின்மையும்

    Thayagamweb-featuredworkக.கலாமோகன்

    நான் நீண்ட காலங்களின் முன் பிரான்ஸ் நாட்டுக்கு வந்தவன். இது நிச்சயமாக எனது நாடு போலும். இந்த நாட்டுக்கு வந்த போது நான் சுதியோடு வேலையைத் தேடாதவனாக இருந்தேன். இந்த வருகை எனது கனவு அல்ல, திரும்பிப் போதல் சில ஆண்டுகளில் எனது கனவாக இருந்தது. இந்தக் கனவை அழித்தது எங்கள் நாட்டில் நடந்த போர். Workவேலை இல்லாமல் முதலாளித்துவம் இருக்க முடியுமா? வேலைகள்தாம் இந்த முதலாளித்துவக் கொடிய உலகை அமைத்தவை. ஒவ்வொரு நாடும் இன்று முதலாளித்துவ கொள்கையைத் துதிக்கும் நாடுகளாக இருக்கின்றன. இந்த நாடுகள் தொழில் மீது சட்டங்களைப் போடுகின்றன, தொழிலாளர்கள் உரிமைகளைப் பறிக்கவும் திட்டங்களைத் தயாரிக்கின்றன. தொழில் மீதான ஒரு சட்டம் உலகில் இல்லை, பல சட்டங்கள் நிறைய உள்ளன. ஒவ்வொரு சட்டமும் ஒரு வித சாத்திரமாகும். 3ஆம் உலகம் வேலையத் தேடி அழுவது. இந்த உலகின் நாடுகள் ஊழல் அரசியலில் தோய்வதால் இப்போதும் வேலையின்மை மேடையில் நிற்கின்றது. . 60 மில்லியன் சிறுவர்கள் இந்தியாவில் தொழில் தேடுபவர்களாக உள்ளனர். 80 களிலிருந்து ஆபிரிக்காவில் 200 மில்லியன் மக்கள் வறுமையில் உள்ளதாகவும், 30 வருடங்களில் இது இரண்டாகப் பெருத்துவிடும் என்பதாகவும் ஆய்வுகள் சொல்கின்றன. தொழில் இன்மை Child laboruவறுமையை விதைக்கின்றது. முதலாளித்துவ “புதிய” பொருளாதாரக் கொள்கைகள்தாம் தொழிலின்மையையும் , வறுமையையும், பயங்கரவாதத்தையும் தோற்றுவிக்கின்றன. 3 ஆம் உலகில் தொழில் இல்லாதோருக்கு அரச உதவி கிடைக்காது, கிடைத்தாலும் கொஞ்சம்தான். இந்த ஏழை நாடுகளினது கனவாக இருப்பன முதலாளித்துவ நாடுகளே. அவர்களுக்கு இவைகள் சொர்க்கங்கள் போல. ஆனால் இவைகளும் உலகமயபடுத்தலால் 3 ஆம் உலமாகிக் கொண்டுள்ளன. இப்போதைக்கு முதலாளித்துவ நாடுகளில் வேலை செய்யாதோருக்கு அரச உதவி உண்டு. காரணம் நாம் ஒவ்வொரு தினமும் அரசுக்குக் கொடுத்துக் கொண்டுள்ளோம். பாணிலும் டக்ஸ், சிகரெட்டிலும் டக்ஸ்…. பிரீதி வாங்கினாலும் டக்ஸ், இங்கே எங்கு வாங்கினாலும் டக்ஸ் அரசுக்கு. பொருளாதார தீரியாக, முதலாளித்துவ நாடுகளில் சட்டப்படி வாழ்வோர் அரசின் கடனாளிகளாக உள்ளனர். இந்த அரசின் அரசியல்வாதிகள் எமது வேலையால் கிடைக்கும் பணத்தை ஊழலால் சுவிப்பவர்கள். ஆனால் இந்த நாட்டின் கிராமப் பகுதிகளில் தொழில் இன்மையால் நிறையத் தற்கொலைகள் நடக்கின்றன. 40 வீதமானோர் பிரான்சில் தொழில் விருப்பு அற்று உள்ளனர் என்பதை நெட்டில் வாசித்தேன். இKarl Marxந்த விருப்பின்மைதான் இந்த நாடு தற்கொலைகளில் முன்னணி நாடாக இருப்பதற்குக் காரணமா? Émile Durkheim, கடந்த நூற்றாண்டிலேயே பிரான்ஸ் தற்கொலையின் சிறப்பு நாடாக உள்ளது என்பதற்காக ஆய்வுப் புத்தகம் எழுதியுள்ளார். முதலாளித்துவ அரசுகளின் “சுரண்டல்” கலைதான் தொழிலின்மையை உலகின் விதியாக்கிக் கொண்டுள்ளது. இந்த விதியை உடைக்க நாங்கள் வாசிக்க வேண்டிய புத்தகம் கார்ல் மார்க்சின் “மூலதனம்” ஆக இருக்கவேண்டும். இது பழைய புத்தகம், ஆம்! இது எப்போதும் புதிய புத்தகமுமே.

    Postad



    You must be logged in to post a comment Login