Recent Comments

    யுத்தம்

    சுவரில் சாத்தியிருக்கும்

    கறல் பிடித்த தகரத்தின் முனையிற்பட்டு

    சூரியன் ரத்தம் சிந்துகிறது.

     

    அவ்விடமெல்லாம் செந்நிறமாய்ப் பரவியிருக்க,

    நனைந்த ஒரு றாத்தல் பாணைக்

    கவ்விக் கொண்டு வரும்

    வாலில்லா நாய்க்கு ஒரு தாய் கல்லால் எறிகிறார் .

     

    நாய் விட்டுச் சென்ற பாணை எடுத்து

    அந்தத் தாய் தன் பிள்ளைக்குக் கொடுக்கிறார்.

     

    "யுத்தம் முடிந்து விட்டது"

    என்று தேநீர்க் கடையின் வானொலி சொல்கிறது.

     

    எனது கவிதை எங்கேயுந் தொடங்காது

    அங்கேயே முடிந்து விடுகிறது.

    ப்ரீடா காளினி

    Postad



    You must be logged in to post a comment Login