Recent Comments

    சி.சிவஞானசுந்தரம்: சிரித்திரனும்,சிரிப்பும் சிந்தனையும்….

    Sirithiran           க.கலாமோகன்

    சி.சிவஞானசுந்தரம்

    கேலித்துவ ஓவியங்களில் எனக்கு இலக்கிய வாசிப்பைக் காட்டிலும் நிறைய விருப்பம். எழுத்தைக் காட்டிலும் நிறையப் பேசுவன ஓவியங்கள். இவைகளது செய்திப் பரிமாறல்கள் எழுத்தைக் காட்டிலும் சிறப்பானவை. நான் Le Monde பத்திரிகையின் சந்தாக்காரனாக இருந்தபோது, பத்திரிகை வந்ததும் உடனடியாக தலைப்புச் செய்தியைப் பார்ப்பதில்லை. Plantu வின் ஓவியமே முதலில் எனக்கு முக்கியம். இந்த ஓவியம்தான் உலகின் மிகப் புகழப்பட்ட பத்திரிகையின் மூச்சாக இருந்தது என்று கருதுகின்றேன். எனது பத்திரிகை வாசிப்புகளுள், முதலில் தொடங்குவது ஓவிய வாசிப்பே.

    sivagnanasuntharam (9)

    இது எங்கே தொடங்கியது? இந்தப் புகலிட நாட்டில் அல்ல. யாழ்ப்பாணத்தில். சின்னப் பையனாக இருந்தபோது எமது “முத்தமிழ் சனசமூக நிலைய” த்தின் வாசிகசாலையில் “சிரித்திரன்” வாசிப்புக்காகத் தவம் இருப்பேன். இந்த இதழை ஒவ்வொருவரும் பறிக்கும் இயல்பு. இந்த இயல்பு இந்த இதழின் வாசிப்பு மதிப்பைக் காட்டும். புகலிட வாழ்வு நிறையக் கேலிச்சித்திர உலகைக் காட்டியுள்ளது. ஆம்! தமிழின் கேலிச்சித்திர உலகம் சிறப்பாவதற்கு நிறைய ஓவியர்கள் உதவியுள்ளனர். இவர்களில் உலகின் மிகப் பெரிய கேலிச்சித்திரவாதியாக உள்ளார் எனது அன்பரும், சிநேகிதரும், மானிட கேள்விகளைத் தனது தூரிகையால் சிறப்பாக வடித்தவருமான சி.சிவஞானசுந்தரம்.

    sivagnanasuntharam (1)இவரது “மைனர் மச்சான்” கருத்தோவியங்கள் தமிழ்த்துவப் போலிக் கலாசாரத்தைக் கீறல் கலைக்குள் பார்ப்பது. இவர் “மகுடி” என அறிந்திருப்பது, இந்தப் பெயரில் “சிரித்திரன்” இல் மிகவும் சிறப்பான பதில்களைக் கேள்விகளுக்குத் தந்துள்ளார். என்னால் எப்போதும் மதிப்புக்குள்ள கலை மேதையான சிவஞானசுந்தரம், தனது முதலாவது ஓவியத்தைப் பிரசுரித்தது இந்தியாவின் பிரபல பத்திரிகளில் ஒன்றாக இருந்த Blitz இல் தான்.

    இவர் மீது பெரிதாக அறிமுகம் செய்வது எனது நோக்கு அல்ல. 01/05/92 தாயகத்தில் விக்கிரமசிங்க, “அறிமுகம்: சிரித்திரன் சிவஞானசுந்தரம்/ மகுடி பாம்பாகவும் புலி மகுடியாகவும்” எனும் தலைப்பில் எழுதியுள்ள கட்டுரை, இவரின் புலி சார்பை விமர்சித்தாலும், இவர் மீதான காத்திரமான குறிப்புகளை எழுதியுள்ளது. இந்தக் கட்டுரை PDF இல் வாசிப்புக்காக இணைக்கப்பட்டுள்ளது.

    புலித்துவத்துள் இந்த சிறப்பான கலைஞர் விழுந்தது இவரினது ஆசையால் ஆன விருப்பா? புலிகளினது யுகத்துக்குள் தம் உயிரைப் பாதுகாக்க நிறையப்பேர் புலித்துவத்தை ஆதரிக்கவில்லையா? இவை ஆய்வு செய்யப்படவேண்டியன.

    ஆனால் பல படைப்பாளிகள் தமிழ்த்தேசிய வெறியுடன் புலிகளை, புலிகளின் கொடுமைகளை ஆதரித்தனர். இவர்களது படைப்புகள் நிறைய வெறியைக் கக்கின. எனது இளமைக் காலத்தில் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய கலை நண்பரான மகுடி மனித நாகரிகத்தை உலகம் பூராகவும் விரும்பியவர். இவரது “புலித்துவம்” மீள் பார்வைக்கு எடுக்கப்படவேண்டியது. இவரது உண்மை நண்பர்களுக்கு இவர் கொடுத்த வாக்குமூலங்களால்தாம் நாம் இவரது ஈடுபாட்டை அறிய முடியும்.

    sivagnanasuntharam (6)

    sivagnanasuntharam (3)

    நான் “சிரித்திரன்” இதழுக்கு எனது சிறுகவிதையை அனுப்பியபோது, என்னைத் தேடி எனது வீட்டுக்கு வந்து, எனது எழுத்தை ஊக்குவித்தவர். எனது எழுத்துகளை இவரது “சிரித்திரன்” இதழ்கள் நிறையப் பிரசுரித்துள்ளன. இவரது மனிதப்பாடும், கலை மேன்மையையும் கொண்ட கலைஞர்கள் மிகவும் குறைவாகவே உள்ளனர். இது மிகவும் இவர் மீதான சிறு குறிப்பு. இவரது சில கீறல் வேலைகளை மீள் பார்வைக்குத் தருமுகமாகவே இக் குறிப்பு எழுதப்பட்டுள்ளது. இங்கு பிரசுரமாகும் கீறல்களை “சிரித்திரன் சித்திரக் கொத்து” என இவர் பிரசுரித்த நூலில் இருந்து எடுத்துள்ளேன். இந்த ஒவியங்களுக்காக இவரது குடும்பத்துக்கு நன்றி. இந்த நூலில் இவர் எழுதியுள்ள “அகவுரை”, “கருவும் உருவும்” என்ற தலைப்பிலான இவரது எழுத்துகள் மூலம் இவர் தனது படைப்புக்கலை மீது சிறப்பாகச் சொல்லியுள்ளார். சிரிப்பையும் சிந்தனையையும் சொன்ன சிரித்திரன் தமிழின் மிகப் பெரிய கேலித்துவ இதழ்களில் கவனத்துக்கு எடுக்கப்படவேண்டியது.

    sivagnanasuntharam (5)

    sivagnanasuntharam (4)

    sivagnanasuntharam (8)

    sivagnanasuntharam (7)

    Postad



    You must be logged in to post a comment Login