Recent Comments

    சபாலிங்கம்: மீண்டும் நினைப்போம்

    sabalingam3குஞ்சன்

    1994 ஆம் ஆண்டு பிரான்சில் ஒரு தமிழ்ப் படுகொலை நடந்தது. வீட்டுக்குள் நுழைந்த இரண்டு இளைஞர்கள் இந்தப் படுகொலையை நடத்திவிட்டு வெளியே தப்பி மறைந்தனர். இது நிச்சயமாக அரசியல் கொலை. தமது கொலைக் கலாசாரத்தை நாட்டிலும் நடத்தலாம், வெளிநாட்டிலும் நடத்தலாம் என்பதை புலிகள் காட்டியுள்ளனர். கொலைசெய்யப்பட்டவர் எஸ்.சபாலிங்கம். இலங்கைத் தமிழ் அரசியலுள் குறிப்பிடத்தக்கவர். இளம் காலத்திலேயே சிறைகளுள் இருந்தவர். இலங்கைத் தமிழ் இளசுகளையும், புத்திஜீவிகளையும் அழிப்பதில் முன் நின்ற புலிகளின் பிரபாகரனைத் தம்பியாக இருந்தபோதே அறிந்தவர்.url

    சபாலிங்கத்தின் சிறப்பு அவரது அமைதியில் வாழ்ந்தது. நிறையத் தமிழ் இளைஞர்களது போராட்ட உலகைத் தெரிந்தாலும் அது பற்றி நிறையக் கதைத்து பிரபலம் தேடாதவர். தமிழ் அரசியல் அவரது உயிர். தமிழில் எது நடந்தாலும் அவை சபாலிங்கத்துக்குத் தெரியும். செய்தியை அவர் எப்போதும் எங்கும் தேடினார். இந்தத் தேடலால்தான் அவரை மிகப்பெரிய தமிழ் ஆவணச் சேமிப்பாளனாகச் சொல்லலாம்.

    பாரிசில் உள்ள பிரபலமான தமிழ்க் கடையான “மாலா”வுக்கு ஒவ்வொரு ஞாயிறுகளிலும், பின்னேரம் நிச்சயமாக வருவார். தமிழ், ஆங்கிலம் மொழிகளுள் வந்த அனைத்துப் புத்தகங்களையும் வாங்குவார். இந்த வாசிப்புகளும், வாசிப்பின் பின்னாலான பதிவுகளும் இவரைத் தமிழின் சிறப்பான ஆவணனாகவும் காட்டுகின்றது.

    அவருடன் அண்மிப்பவர்களை வரவேற்பார், நிச்சயமாக நிறையப் பேசமாட்டார். அந்த வேளைகளில் அவரது தலை முன்னும் பின்னும் ரகசியமாக அசைவதைக் கண்டுள்ளேன். அவரது படுகொலையின் பின்னர், அப்போதே அவரது நிழல் பயமாக உள்ளதா எனும் கேள்வி எழுந்தது. நிச்சயமாகப் பயத்தை அவரால் ஒவ்வொரு நாளிலும் வாழமுடிந்திருக்கும். அவருக்குத் தமிழ் இளைஞர் அரசியலின் முழுக் கோலங்களும் தெரிந்திருந்தால் எப்படிப் பயமில்லாமல் வாழமுடிவது?

    நிறையத் தமிழ் இளசுகள் ஆயுதக் கலாசாரத்தில் அங்கும் வாழ்கின்றது, இங்கும் வாழ்கின்றது என்பதைத் தெரிந்திருந்தவர், “ஆசியா” பதிப்பகத்தைத் தொடங்கியவருமான சபாலிங்கம். இந்தப் பதிப்பகம் சில தமிழ் இளைஞர்களின் தரமான கவிதைப் புத்தகங்களை வெளியீடு செய்துள்ளது.

    neg-10 02“ஈழவிடுதலைப் போராட்டத்தில் எனது சாட்சியம்” என்ற நூல் ஆசியா பதிப்பகத்தின் நூலாக வரவேண்டியிருந்தது. சி.புஷ்பராஜாவின் இந்த நூலுள் சபாலிங்கம் நிறையத் தகவல்களைக் கொடுத்திருப்பார் என்பதும் இவரது படுகொலைக்குக் காரணம். “ஈழவிடுதலைப் போராட்டத்தில் எனது சாட்சியம்”, அடையாளம் பதிப்பாக 2003 இல் வெளிவந்தது.

    கொல்லுதல் உலக நாடுகளின் கலையாக உள்ளது. இலங்கையில் பயங்கரவாதத்தை அரசும், இயக்கங்களும் நடத்தின. இந்த இனிய தீவை இன்றும் பொருளாதார நெருக்கடிகளுக்குள் வைத்துக்கொண்டுள்ளன. பயங்கவாதம் கருத்துரிமையை உடல் அழிப்பால் ஒழிப்பது. கருத்துரிமை இல்லையேல் வாழ்வு இல்லை. இந்தப் பயங்கரவாதம்தான் சபாலிங்கத்தைக் கொன்றது. அவருக்கு மீண்டும் எமது அஞ்சலிகள்.

    Postad



    You must be logged in to post a comment Login