Recent Comments

    அட, நம்ம தேசியத் தலைவரும் குப்பை கொட்டியிருக்கலாமே!

    Prabaharanவாங்க, ரொறன்ரோவில் குப்பை கொட்டலாம் என்று நாம் எழுதிய தகவல் கட்டுரையை வாசித்து ரொறன்ரோ எங்கும் இலவசமாய் வீட்டுத் தோட்டத்திற்கு உக்கிய குப்பை அள்ள பல தாயகம் வாசகர்கள் சனிக்கிழமைகளில் செல்கிறார்கள் போல. எம்முடன் தொடர்பில் இருக்கும் தாயகம் வாசகர் ஒருவர் கடந்த வருடம் சுவடியில் வெளிவந்திருந்த கட்டுரையை ஞாபகப்படுத்தி, தான் இந்த வருடம் அள்ள இருப்பதாக மின்னோலை அனுப்பியிருந்தார். இம்முறை ரொறன்ரோவில் குப்பை கொட்டும் கட்டுரையை எழுதியதும் அவருக்கு அதன் இணைப்பை அனுப்பியிருந்தோம். இணைப்புக் கிடைக்க முன்பே அவர் அதை வாசித்தும் விட்டிருந்தார். இன்று காலை ஏழு மணிக்கே குப்பை அள்ளச் சென்ற வாசகர் முன்னால் 200 கார்கள். அவர்களெல்லாம் தாயகம் வாசித்து அதிகாலையே குப்பை கொட்டச் சென்ற தமிழர்களாக இருக்கக் கூடும். களமுனையிலிருந்து வாசகர் நேரடியாகவே எங்களுக்கு மின்னோலை அனுப்பியிருந்தார். I didn't do recki before I go. 7.15 there were about 200 cars in front of me. I withdraw the mission. பிறகென்ன? நமது பதில்... Better live to fight another day! கிளிநொச்சிக்குள் இராணுவம் நுழைந்த போது, இனிமேல் புலிகளுக்கு ஆயுதங்கள் தேவையில்லை, இராணுவத்தை கிழுவந் தடிகளாலேயே அடித்துக் கொல்வார்கள் என்று இங்கே முழங்கிய அரசியல் நோக்கர்களையும், அமெரிக்கா  கப்பல் அனுப்புகிறது என்ற விண்ணர்களையும் நம்பாமல், யுத்த முனையிலிருந்து இவ்வாறாக இறுதி வரை நம்மோடு தொடர்பிலிருந்திருந்தால், இப்படிக்கொத்த ஆலோசனைகளைக் கேட்டு. 'உயிர் தமிழுக்கு, உடல் மண்ணுக்கு' என்று வெற்றி அல்லது வீரமரணமாக அனாவசியமாக உயிரை இழக்காமல், வெற்றிகரமாகப் பின்வாங்கி, இன்றைக்கும் நம் தேசியத் தலைவர் வன்னியில் குப்பை கொட்டியிருக்கலாம். அப்பாவித் தமிழ் மக்கள் உரங்களாகவும், மாவீரர்கள் விதைகளாகவும், பல துரோகிகள் களையெடுக்கப்பட்டும் விளைத்த தம்பியின் சிறுபிள்ளை வேளாண்மையை நம் புலன் பெயர்ந்த தமிழர்கள் அறுவடை செய்து வீடு கொண்டு சேர்த்திருக்கலாம். ஹ்ம்!  ஒரு நல்லவன் வல்லவன் கதையை யாரும் கேட்க மாட்டேங்குறாங்க! (கியூறியஸ் ஜியின் ஒரு முகப்புத்தக ரேஞ்ச் புலம்பல்!)

    Postad



    You must be logged in to post a comment Login