Recent Comments

    ஜனநாயகம் எங்கும் உண்டா?

    Abeக.கலாமோகன் Mohamed Morsi, ஓர் இஸ்லாமியவாதியாக இருக்கலாம். ஆனால் எகிப்தில் ஜனநாயக ரீதியாகவே 2012 இல் ஜனாதிபதி ஆனவர். “இஸ்லாமிய சகோதரர்கள்” எனும் அமைப்பால் (இந்த அமைப்பு புதிதான இஸ்லாமுக்கு ஆதரவாகவும், மேலை நாட்டு நெருக்கல்களுக்கு எதிராகவும் இருந்தது) தொடக்கப்பட்ட “நீதி, சுதந்திரக் கட்சி”யின் பெயரால் ஜனாதிபதியாக வந்தவர். இந்தப் பட்டம் சில கிளர்ச்சிகளால் கிழித்தெறியப்பட்டது. இராணுவமே இவரது பதவியைப் பறித்தது. இப்போதும் “இஸ்லாமிய சகோதரர்கள்” அமைப்பைப் பயங்கரவாத இயக்காமவே கருதிக்கொண்டுள்ளது இராணுவம். இவர் ஓர் சிறைக்குள் தள்ளப்பட்டார். இவருக்கு மரண தண்டனை தரப்படும் எனப் பேசப்பட்டது. தற்போது, 20 வருட கால சிறையைத் தண்டனையாகக் கொண்டுள்ளார்.mohamed morsi Mohamed Morsi இன் பதவி பறிப்பு எது எமது உலகத்தில் ஜனநாஜகம் எனும் கேள்வியைக் கேட்க வைக்கின்றது. இவர் நிச்சயமாக ஜனநாயகத்தை ஆதரிப்பவர் என்று சொல்ல முடியாது. ஆனால் இதனது பெயரில்தான் ஜனாதிபதியானார். ஆனால் 2014 இல் Morsi சிறையிலிருந்தபொது ஜனாதிபதியாகின்றார் இராணுவத்தின் பெரிதான பொறுப்பில் உள்ள Abdel Fattah al-Sissi. பதவியைப் பறித்த இராணுவம் நிச்சயமாக ஜனநாயகத்தைச் சுவாசிக்கும் எனக் கருதமுடியுமா?இந்த இராணுவம் ஜனநாயகத்தை மறுதலித்து Mohamed Morsi இன் பதவியைப் பறித்ததின் பின்னர், அவரது ஆதரவாளர்களான 1400 பேரைக் கொன்றுள்ளது,15000 பேரைச் சிறைவைத்துள்ளது. இந்த சூழலில் எகிப்தில் ஜனநாயகம் உள்ளதென்று சொல்லலாமா? இதனது இராணுவம் ஜனநாயகத் தேர்த்தலை நடத்தியது மிகவும் போலியான தனம். இந்தப் போலியான தனத்துக்குள்ளேயே உலகின் நிறைய நாடுகள் வாழ்ந்து கொண்டுள்ளன.mohamed morsi with army இன்று உலகில் ஜனநாயகத்தை அழித்துக் கொண்டிருப்பது இராணுவ ஆட்சிகளே. பல ஜனநாயக அரசியல்கள் ஆயுதங்களினாலேயே நடத்தப்படுகின்றன. ஆபிரிக்க நாடுகளும், அராபிய கலாசாரத்தைக் கொண்ட நாடுகளும் இராணுவ அதிகாரத்தால் மக்கள் அடிப்படை உரிமைகளை துண்டு துண்டாக வெட்டிக்கொண்டுள்ளன . காந்தித்துவ நாடும், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு எனவும் கருதப்படுகின்ற இந்தியாவில் வறுமைக் கிராமங்களில் இன்றும் சாதிக் கொலைகளும், கொடுமைகளும் நடந்துகொண்டுள்ளன. ஆகவே இந்திய உபகண்டம் போலி ஜனநாயகத்தையே உடுத்துக்கொண்டுள்ளது. urlமக்களுக்கே அதிகாரம் உள்ளது என்பது ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடு. இன்று மக்களைச் சுத்துமாத்துச் செய்வதற்கே இது பயன்படுகின்றது. எகிப்தில் இன்று எப்படி ஜனநாயகம் இராணுவ பலத்தால் அழிந்ததோ, இராணுவமற்ற தேசங்களில் பதவி வெறிகளாலும், ஊழல்களாலும் இந்த சிறப்பான மக்கள் நல அரசியல் சிந்தனை கெட்டுக்கொண்டேயுள்ளது . அமெரிக்காவின் 16 ஆவது ஜனாதிபதியான ஆபிரகாம் லிங்கன் Gettyburg இல் நடத்திய உரையில் “ஜனநாயகம் என்பது மக்களின் அரசு, மக்களால் உருவாக்கப்பட்டது, மக்களுக்காக உருவாக்கப்பட்டது” என்கின்றார். இப்போது வருத்தம் சொல்வோம் ஆபிரகாம் லிங்கனுக்கு. இன்று முதலாளித்துவ வலைகளிலும் , இராணுவ பலத்திலும் வாழ்வதே ஜனநாயகம்.democracy

    Postad



    You must be logged in to post a comment Login