Recent Comments

    கென்யா: பல்கலைகழகக் கொலைகள்

    Kenya-murdersக.கலாமோகன்

    சில தினங்களின் முன் பயங்கரவாதம் மீது சிறு குறிப்பை எழுதியிருந்தேன். இந்த வாதம் மிகவும் பலமாகிக் கொண்டுள்ளது என்பதைக் கென்யாவின் பல்கலைக்கலகத்துள் நடந்த 147 கொலைகள் காட்டுகின்றன. இந்தக் கொலைகள் மனிதத்துவத்தின் மீதிப்பகுதி கொலையினுள்ளும், அழிவினுள்ளும் உறங்குகின்றது என்பதையே விளக்குகின்றது. பயங்கரவாதம் மீதான சிறப்பான ஆய்வுகளை சிலர் செய்து மனிதத்துள் வெறித்துவம் நிறைய உள் அடங்கியது எனக் காட்டியுள்ளனர். மனித வரலாறு, கொலைத்துவத்தின் முன்னால் நிற்பது என்பதையே நாம் இப்போதும் கண்டு வருகின்றோம்.

    Kenya1

    கொலைத்துவம் சில மக்கள் குழுவினருக்கு சுகமான செய்தியாகவும் படுவதுண்டு. இஸ்ரேல் மிகவும் பலமான நாடு, நாட்டைப் பறித்து நாடாகியது. இது யூதர்களின் நாடு. எவருமே ஹிட்லர் அரசு யூதர்களை அழித்த கொடுமையை அங்கீகரிக்க முடியாது. Mein Kamp ஆசிரியர் மக்கள் அழிப்பில் சுவையைக் கண்டவர். இவர் யூதர்களை மட்டும் அழிக்கவில்லை, நிறைய ரூமானியோரையும் அழித்தவர். கம்யூனிஸ்டுகளையும் கொன்றவர். ஹோமோசெக்சுவல்களையும் அழிப்பதில் இவருக்கு இருந்த உறுதியை ஆவணங்களில் காணலாம். இந்த ஹிட்லர் முன்பு கலைஞராக இருந்து பின்பு கொலைஞராக வந்தவர். இந்த ஹிட்லரால் நிறைய அழிக்கப்பட்ட யூத மக்களின் அரசு மிகவும் கொடுமையாக பாலஸ்தீனிய மக்களை அழித்துக்கொண்டுள்ளது. பல வருடங்களாக, ஹிட்லர் பாணியில் நடத்திக் கொண்டிருக்கும் இந்த அழிப்பு நிறுத்தப்படாது இருக்கின்றது. இதனது உளவுப் பிரிவான Mossad சர்வதேசரீதியாக விற்றுக்கொண்டிருப்பது பயங்கரவாதமே. புதிய இருப்பின் பிறப்புகளை அழிப்பதுதான் பயங்கரவாதம். இதனது கருத்து இயக்கம் குப்பைக்குள்தாம் தோன்றுவது. இந்தக் குப்பைத் தனம் “புதுக் கொள்கைகளை”த் தருவோம் எனத் தொடக்கப்படும் கட்சிகளிடமும், குழுக்களிடமும் உள்ளன. இந்த வன்முறை பல கோட்பாடுகளுக்குள் அரசியல் கோட்பாடுகளுள் மறைவாகக் காக்கப் படுகின்றது. கென்யாவில் நடத்தப்பட்டது “அறிவுக்கு எதிரான படுகொலை!” எனக் குறிப்பிட்டுள்ளது Le Monde இல் பிரசுரமான ஆசிரியத் தலையங்கம். சோமாலிய Shebab எனும் இஸ்லாமியப் பயங்கரவாத இயக்கத்தால்

    Kenya3

    கிறிஸ்தவ மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தப் படுகொலை மதப் போர்களை கென்யாவில் மீண்டும் தூண்டாதிருக்கும் எனச் சொல்லலாமா? Shebab இயக்கம் மீண்டும் கொலைகளைத் தொடருவோம் என அறிக்கைகளைத் தந்துள்ளது. 5 ஆம் திகதி 2015 ஆம் ஆண்டு பாப்பாண்டவர் இந்த அழிப்புகளை நிறுத்துவோம் எனும் பிரகடனத்தை நிறுத்துவோம் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தக் குறிப்பு பயங்கரவாத வெறிக்குள் உள்ளோரால் விளங்கப்படுமா? “எந்தக் காரணத்தைக் காட்டியும் பயங்கரவாதத்தை நிரூபிக்க முடியாது” எனக் Kofi Annan குறிப்பிட்டுள்ளார். மனித யுகம் பல கருத்துகளுடன் வாழக் கூடியது. இந்த வாழ் கருத்தை அழிப்பது பயங்கரவாதம்.

    Postad



    You must be logged in to post a comment Login