Recent Comments

    முகமும், முகங்களும், முகப்புத்தகமும்

    facebookக.கலாமோகன்

    முகப் புத்தகத்தின் முன்னர் முகமும் முகங்களுமான சேதிச் சந்தைக்குள் வாழ்ந்தோம். முகம் செய்திகளைத் தருவது. முகங்களுள் செய்தி வலயங்கள் இருக்கும். சிலருக்குப் பல முகங்கள் பிடிப்பதில்லை. சில முகங்களே பிடிக்கும். வேறு சிலருக்குப் பல முகங்களும் பிடிக்கும்.

    Electronic cables are silhouetted next to the logo of Facebook in this illustration photo in Sarajevo

    வெளியால் வந்த பலருக்கு இப்போதும் தம்பியின் முகம்தான் பிடிக்கும். இந்த முகம் இப்போதும் கடைகளின் கதவுகளைப் பாதுகாப்பதாக உள்ளன. எனக்கு ஓர் கடையைத் தெரியும். அந்தக் கடையின் கதவில் தம்பியின் வீர உருவம். ஆனால் தம்பியால் கொல்லப்பட்டவர்களின் ஒரு முகவும் இல்லை வெளியால் வந்த சிலருக்குத் தம்பியின் முகம் பிடியாது. இவர்கள் தம்பியின் முகத்தைத் தெரிந்தவர்களுக்கு எதிரிகளாக இருப்பர். அவ்வப்போது இந்த எதிர், ஆதரவு முகங்களுக்கிடையில் போர் நடக்கலாம். சில வேளைகளில் சமாதானமும் நடக்கும், பின் போரில் முடியும்.

    Hitlerஇந்த மனித உலகு கொள்கைகளால், சொல்களால் நடத்தப்படுவதில்லை. இது முகத்தினாலும், முகங்களினாலுமே நடத்தப்படுகின்றன. ஹிட்லரின் முகத்தால் நிறையப்பேர் பயப்படுவர். இந்த நாஷியின் முகத்தைக் கொண்டு பிறப்போரை சிலர் வெறுக்கும் போக்கு போலிக்குள்ளது. சில தீவிரவாத இன உரிப்பு அரசியல்வாதிகளுக்கு ஹிட்லரின் முகமும் பிடிக்கும், மீசையும் பிடிக்கும். மக்களின் எதிர்பால் இந்த மீசையை பலர் வைக்காது உள்ளனர். ஆனால், இந்த ஹிட்லரின் முகத்தை ரகசியமாக வழிபடுபவர்கள் பலர்.

    அண்மையில் இவரது இனவாதப் புத்தகமான “Mein kampf” (எனது போராட்டம்), பிரசுரமாகப்படலாம் என ஜெர்மனி அரசு அண்மையில் அறிவித்தது. இந்த புத்தக வாசிப்பு வரலாற்றை அறிய உதவும் என்பதில் எவ்வாறு உண்மை உள்ளதோ, இது நிறைய சின்ன மீசை முகங்களையும் தோற்றுவிக்கும் என்பதே உண்மை. சிலர் முகத்தில் தாடி இருக்கும். இவர்களை நிச்சயமாக சாமிகளாகவும், இஸ்லாமியவாதிகளாகவும்

    Marx

    கருதமுடியாது. இவர்கள் மார்சிஸ்ட்துகளாக இருத்தலும் சரி. முறைப்படி தாடி ஓர் தெளிவான முகம் மீதான முடிவைத் தருவதில்லை. தாடியைக் கொண்டிருப்பவர் சாமியாகவும், தீவிர இஸ்லாமியராகவும், மார்சிஸ்ட்டாகவும் இருப்பார். இது நமது தேடலில் சிக்கல்களை வைப்போம். Facebook நிச்சயமாக சுப்பர் ஆனது. இதில் நிறைய முகங்களையும், குறைவான தீர்வுகளையும் காணலாம். ஆனால் சின்ன இளைஞரான Mark Zuckerberg இதனால் கோடீஸ்வரனாக வந்துள்ளார். ஆம், இவர் இந்த நிலைக்கு வந்தது எங்கள் முகங்களின் லாபத்தால்தான். இந்தப் “பெடியன்” முகங்களால் நிறையச் சுவீகரிக்கலாம் எனக் கருதி வென்றுள்ளார். ஆனால் Facebook நிறைய தனிநபர் உரிமைகளை மீறுகின்றது, இது நிச்சயமாக உலகின் பெரிய உளவாளியாகவும் இருக்கின்றது.

    Burka

    பிரான்சில் இஸ்லாமியப் பெண்களை முகம் காட்டவேண்டும் என்கின்ற சட்ட விதி ஒன்று உள்ளது. ஆம்! burqa போடுவது தடைசெய்யப்பட்டபோதும், நான் இப்போதும் burqa பெண்களை (அவர்கள் ஆண்களாகவும் இருக்கலாம் முகம் தெரியாததால்) வீதிகளில் பார்க்கின்றேன். முகம் காட்டாத இந்தப் பெண்களிடம் போன்களும், Tablet களும் இருக்கலாம். அவை நிச்சயமாக Facebook இல் முகங்களைப் பார்க்க உதவியாக இருக்கலாம் என்று கருதுகின்றேன்.

    Postad



    You must be logged in to post a comment Login