Recent Comments

    வங்களாதேசம்: Blog படைப்பாளிகளின் படுகொலைகள்

    Bangladeshக.கலாமோகன்

    Ananta Bijoy Das, 33 வயது, வங்காளதேசம், நாத்திகன், blog இயல் ஊடாகச் தேசத்துக்கு விரும்பாத செய்திகளைச் சொல்லி வந்தவர், இந்த மாதம் 12 ஆம் திகதி போக்கிரிகளால் வங்காளதேசத்தில் கொல்லப்பட்டார். இது இந்த நாட்டில் நடந்த கொடுமையான விஷயம். மூன்றாவதாகக் இந்த நாட்டில் கொல்லப்பட்ட blog எழுத்தாளர். இவர் செய்த கொடுமைதான் என்ன? சிறுமிகளைக் கற்பழித்தாரா? வங்கியில் களவு செய்தாரா? களவான பாஸ்போட்டுகளை நிறைய விலையில் வித்தாரா? தனது நாட்டின் ஜனாதிபதியைத் தட்டி அவரது பதவியைப் பறிக்க நினைத்தாரா? தனது நண்பியின் மனைவியைச் சுழட்டினாரா? இந்தக் கேள்விகளின் பதில்கள் தட்டலாக இருக்க முடியாது. வாழ்வு நிச்சயமாக இருப்பது கேள்விகளினது சிகரத்தில்தான் ananta-bijoy-das-fbAnanta Bijoy Das செய்த தவறு எது? மத எதிர்ப்பு எழுத்துகளை விநியோகித்ததாகும். இதில் என்ன தவறு உண்டாம்? உலக மனித வரலாற்றில் இன்றும் மதங்களின் பேரால் கொலைகள் நடந்து கொண்டு இருக்கின்றன. நாத்திகராவதால் தப்பு உள்ளதா? கடவுளே! கடவுளை எதிர்த்து எழுதுவது தப்பா? நிச்சயமாக இந்த உலகின் கடவுள்த்துவம் ஓர் நிதித்துவ நிலைக்குள்ளும், மனிதப் பிரிவினைக் கொள்கைகளுக்குள்ளும் உள்ளது. “Mukto-Mona” என்ற வங்காளச் சொல் “சுதந்திரமான சிந்தனை” என்பதாகும். இது ஓர் Blog பத்திரிகை. பல ஆண்டுகளாக இந்த இதழில் Ananta Bijoy Das மதவிருப்பின்மை மீது எழுதியது ஆயுதம் தூக்கிய இஸ்லாமியர்களுக்குப் பிடிக்காது இருந்தது. கிட்டத்தட்ட வங்காளதேசத்தில் 90 வீதமான இஸ்லாமிய மக்கள் இருக்கின்றனர். இந்த இஸ்லாமியர்களினது “சுதந்திர சிந்தனைகளையும்” ஆயுத வெறியர்கள் அழித்துவருகின்றனர். தனது எழுத்து சிக்கலை ஏற்ப்படுத்தும் என்பது Ananta Bijoy Das க்குத் தெரிந்திருந்தபோதும், தனது சிந்தனையை வெளிப்படுத்துவதற்கு பயம் இல்லாதவராக இருந்தார். அவரது பல நண்பர்கள் அவரின் எழுத்து அவருக்கு ஆபத்தை ஊட்டும் என சொன்னபோதும், அவர் தனது சுதந்திர சிந்தனையை எழுதினார். ஆம்! சுதந்திர சிந்தனைக்கு பரிசு கொலை என்பது அவருக்குத் தெரியாது இருந்தது. “சுதந்திரமான சிந்தனை” என்ற இதழைத் தொடங்கிய எழுத்தாளர் Avijit Roy, 26 Washiqur Rahmanபெப்ரவரி 2015 இல் கொலை செய்யப்பட்டார். இந்த ஆண்டின் மார்ச் மாதம் Washiqur Rahman எனும் இளம் blog படைப்பாளியும் கொலைசெய்யப்பட்டார். இந்த மூன்று கொலைகளும் al qaida எனும் கொடிய, பொய் இஸ்லாம் குழுவால் நடத்தப்பட்டிருக்கலாம் என விசாரணைச் சேதிகள் தெரிவிகின்றன. Avijit Roy01நிறையத் தேசங்கள் சுதந்திரத்துக்கு எதிராக இருப்பதுபோல், வங்காளதேசத்தின் மத வெறியர்கள் blog படைப்பாளிகளைக் கொல்வதில் துடிப்புடன் இருக்கின்றனர் என்பதை இந்தக் கொலைகள் காட்டுகின்றன. உண்மைகளைப் பெட்டிகளுக்குள் நுழைத்து அடிமைகளாக வைத்திருக்க முடியாது. இந்த உண்மைகளின் வீழ்ச்சிக்கு நிறையத் தத்துவங்களும், அரசியல்களும் இப்போதும் உதவி செய்துகொண்டு உள்ளன. மதங்கள் ஒரு வேளை வாழ்வின் இருப்பு நிலையின் தடிகளாக இருக்கலாம். இந்தத் தடிகளுள் தடிப்புகள் ஏற்படக்கூடாது. நீ கடவுள் உண்டு எனச் சொல்லலாம். நான் கடவுள் இல்லை என்பேன். இந்தச் சொல்களால் உலகம் அழிந்துவிடுமா? கேள்விகள் தாம் வாழ்வு. கொலைசெய்யப்பட்ட blog படைப்பாளிகளுக்கு அஞ்சலிகள்.

    Postad



    You must be logged in to post a comment Login