Recent Comments

    மூடுலிங்கப் பெரியார் பற்றி…

    நீங்கள் எல்லாம் ஆர்? உங்களுக்குக் கனக்கத் தெரியுமே? அவர் எப்பேர்ப்பட்ட பெரிய மனிசன் எண்டு இந்தியாவில போய்ப் பார்த்தீங்களெண்டால் தெரியும். அவரைக் கண்டவுடன இலக்கியக்காரங்கள் எல்லாம் காலில விழுவாங்கள். இல்லாட்டி எழும்பி நிண்டு கும்பிடுவாங்கள். முதலில தமிழ்ல இலக்கியத்துக்கு நோபிள் பிறைஸ் கிடைக்கிறதெண்டால் அவருக்குத் தான் எண்டு அங்க எல்லாருக்கும் தெரியும். உங்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய தேவை அவருக்கும் இல்லை. எங்களுக்கும் இல்லை. நாங்கள் இருவத்தியைஞ்சு வரியமா இலக்கியம் செய்யிறம். எங்களை ஒருத்தரும் உப்பிடிக் கேக்கேலை. நாங்கள் எங்கயோ போயிட்டம். நீங்கள் உங்க நிண்டு கொண்டு, எங்களையும் கவனியுங்கோ எண்டா எங்களுக்கு வேற வேலை இல்லையே. அவரும் நாங்களும் உலக இலக்கியம் படைச்சுக் கொண்டிருக்கிறம். அதுக்குத் தான் இப்ப எங்கடை படைப்புகள் இங்கிலிசில மொழிபேத்துக் கொண்டிருக்கிறாங்கள். உங்களுக்கு எங்களைப் பாத்துப் பொறாமை எண்டால் அதுக்கு நாங்கள் என்ன செய்யிறது? அவரிட்டை விருது வாங்கிறதுக்கு இண்டைக்கு தமிழ்நாட்டில இலக்கியக்காறங்கள் இடிபட்டுக் கொண்டிருக்கிறாங்கள். அவருக்கு விருது குடுக்கிறதுக்கு அரசாங்கங்கள் றெடியாய் நிக்குது. இண்டைக்கும் உந்தக் கதைக்கு ஆனந்தவிகடனில விருது வாங்கிக் குடுக்க எங்களாலை ஏலும். அதுக்கு பாராட்டு விழா நடந்தா, அங்க ரசினியைக் கூப்பிடுறதுக்கும் முடியும். உங்களாலே ஏலுமே? சும்மா நீங்கள் பேஸ்புக்கில எழுதினாப் போல, உங்களயும் இலக்கியகாறர் எண்டு நாங்கள் அங்கீகரிக்கேலுமே. உங்களையெல்லாம் நாங்க கணக்கெடுக்கிறேலை எண்ட கோவத்தில நீங்கள் புலம்பித் திரிஞ்சாப் போல, நாங்கள் உங்களை எங்களோட சேர்க்கேலுமே. எங்கட விருது விழாவுக்கு டிக்கட் தரவே தகுதியில்லாத உங்களுக்கு, விருது தரேலுமே. உங்களுக்கெல்லாம் பதிலளிச்சு உங்களைப் பெரியாளாக்கேலாது. நல்ல பிள்ளையளா இருந்திங்கள் எண்டா, நாங்கள் வெளியிடுற மொழிபேப்புத் தொகுப்புகளில உங்களையும் சேர்ப்பம். அதைக் கெடுக்கிற நோக்கம் எண்டா, சும்மா கத்திப் போட்டுக் கிடவுங்கோ. (உதெல்லாம் உந்த சுகனாலை வந்த வினை. வாசிச்ச கதை பிடிக்காட்டி, புத்தகத்தைத் தூக்கி எறிஞ்சு போட்டு வேறு வேலை பாக்காமல், முகப்புத்தகத்தில கொமண்ட் போடப் போக... உலக இலக்கியம் படைத்துக் கொண்டிருக்கும் மூடுலிங்கப் பெரியாருக்கு கேட்பார் இன்றி தர்ம அடி விழுதல் கண்டு, அவரது கோட்டுவாலில் தொங்கி பிழைப்பு நடத்தி, அவரைச் சிவிகை காவித் திரிந்தவர்கள், அவரை பொத்தென்று போட்டு விட்டு, தலை மறைவானதால், காவித்திரிந்தவர்கள் பொது அறிக்கை விடும் எண்ணமிருந்தால் அந்தச் சிரமம் இல்லாமல் வெறும் கையெழுத்து வைப்பதற்கு வசதியான அறிக்கை இது. இந்த இலக்கிய சர்ச்சையில் கருத்துச் சொல்லா விட்டால், நம்மையும் இலக்கிய வாதியாக ஏற்றுக் கொள்ள மாட்டார்களோ என்ற பயத்திலும், அவசரத்திலும்.... ஏதோ நம்மாலானது!)

    Postad



    You must be logged in to post a comment Login