Recent Comments

    பெண்ணியத்தை நேசிப்போம்

    க.கலாமோகன்

    thayagam featured-women'sdayலெனினுக்கு நன்றி சொல்வோம். இந்தத் தினம் சர்வதேசப் பெண்கள் தினம். இந்தத் தினத்தை 08 மார்ச் 1921 இல் பிரகடனம் செய்தவர் லெனின். Pétrograd இல் 8 மார்ச் 1919 இல் புரட்சிக்காகப் போராடிய பெண்களின் நினைவாகவே இந்தத் தினம் உருவாக்கப்பட்டது. பெண்களின் உரிமைக்காக இந்தத் தினத்தை உருவாக்கிய லெனின் வீடுகளில் பெண்கள் அடிமைகளாக இருக்கும் கொடுமையை உடைக்க அவர்கள் தொழில் செய்யவேண்டும், இதனால் அவர்கள் ஆண்களுக்கு நிகராக வருவார்கள் எனச் சொன்னார். இன்றுவரை இந்தத் தினம் தொடர்கின்றது. பெண்களுக்கான உரிமைகள் பூரணமாகக் கிடைக்காது விட்டாலும், பெண்களின் வரலாற்றில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பெண்ணுரிமையை அழிக்கத் தயாராக உள்ளது எது? அது ஆண்களின் அரசியலும், அதிகாரமுமே. இன்றும் இவைகள் நிலைப்பில் உள்ளன. இன்றும் முதலாளித்துவ நாடுகளில் பெண்களுக்கு சில நிறுவனங்கள் குறைந்த சம்பளத்தையே கொடுத்து வருகின்றன. முதலாளித்துவ நாடுகள் பெண்கள் உரிமையைப் பேசியபடி, அவர்களது உரிமைகளை அடக்கியும் வருகின்றன. Malala-Yousafzaiசில நாடுகளில் பெண்களின் வாய்களுக்கு இன்றும் பூட்டுபோட்டு உள்ளது. வாயும் இல்லை, வாக்குரிமையும் இல்லை. கணவன் தவிர்ந்த ஆண்களுடன் பேசக்கூடாது என்றும் தடை. வேறு சில நாடுகளில் பெண்களின் தலையை பார்க்கவும் முடியாது. இந்தக் கொடுமைகளை எதிர்ப்போர் சிறைக்கும் போகலாம், அவர்களது தலைகள் வேறு வெட்டவும் படலாம். பெண்களின் மீதான அடக்குமுறைகள் மீது நிறைச் செய்திகள் வருகின்றன. இந்தச் செய்திகள் மீண்டும் மீண்டும் செய்திகள் ஆக்கப்படவேண்டும். Satya NadellaMicrosoft இன் முதலாளியான Satya Nadella பெண்களை அடக்குவதில் தனக்குள்ள அக்கறையை “Was inarticulate re how women should ask for raise. Our industry must close gender pay gap so a raise is not needed because of a bias” என்று ஒரு பேட்டி மூலம் காட்டி, பல அமைப்புகளின் கண்டனங்களால், தான் சொன்னதற்கு மன்னிப்புக் கேட்டுள்ளார். “பெண்கள் சம்பள உயர்வைக் கேட்கக்கூடாது.” அவரது பேட்டியின் முழு அர்த்தம். “குடும்பத்துள் ஆண் பூர்ஜுவாவாக உள்ளான், பெண் பட்டாளியாக!” எனும் கார்ல் மார்க்ஸின் குறிப்பு Satya Nadella உக்குத் தெரிந்திருக்காது என நினைக்கின்றேன். ஆனால் பெண்கள் உலகத்தில் நிச்சயமாகப் புரட்சிகள் நடக்கின்றன. redcoat women தினமும் நான் Simone de Beauvoir இன் வீட்டுக்கு முன்னால் எனது வேலைதளத்துக்குள் இறங்குமுன்னால் போவதுண்டு. அந்த வேளை களில் பெண்களது உரிமைகள் மீதான மீதான கேள்விகள் எனக்குள் எழும். Simone de Beauvoir இன் பெமினிஸம் (feminism) புதுப் புது வழிகளால் உலகினை மீளவும் தொடவேண்டும் என்று நினைப்பதுண்டு.

    Postad



    You must be logged in to post a comment Login