Recent Comments

    றென் ஹாங்: வித்தியாசமான புகைப்படக் கலைஞனின் திடீர் இழப்பு

    க.கலாமோகன்

             புகைப்படங்கள் எமது வாழ்விலும் செய்தி உலகிலும் வாழ்வன. இவைகள் இல்லையேல் செய்திகள் இல்லை, ஆம்! வாழ்வுகளும் இல்லை எனலாம். புகைப்படங்கள் இல்லாமல் உலகின் கொண்டாட்டங்களும் இல்லை. இந்தக் கலை எமது இன்றைய நிகழ்வுகளை நாளை காட்டுவது. முன்பு ஓர் தொழில் கலையாக இருந்த இது இப்போதுள்ள வணிக விருத்திகளால் ஒவ்வொருவரும் புகைப்படக் “கலைஞர்களாக”. கமெரா இல்லாமல் இப்போது வீடுகள் இல்லாத வேளையில் இந்தத் துறைக்குள் கலைத்துவம் கொண்டுவரும் சிலர் உலகில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    அண்மையில் 29 வயதில் மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்துகொண்ட சீன புகைப்படக் கலைஞர் றென் ஹாங் வித்தியாசமான முறையில் படங்களை எடுப்பவராக இருந்தார். இவரது படங்கள் சர்ச்சைக்குரியதாகப் பலருக்குப் படும். அனைத்து முறைகளையும் மீறி இவர் நிர்வாணத்தைப் பல கோணங்களில் காட்டியவர். இவரது கண்ணின் பிடிப்புகள் எங்கள் கவனத்தை ஈர்ப்பன.

    ஒர் புகைப்படப் புத்தகத்தை Taschen வெளியீட்டால் தந்த இவர், தனது இளம் வயதில் ஓர் வித்தியாசமான படக் கலைஞராக சீனாவுக்கு வெளியாலும் ரசிக்கவும் விமர்சிக்கவும் பட்டுள்ளார்.

    எது இமேஜாம்? எமது உலகில் உள்ள இமேஜ் வடிவங்கள் எண்ண முடியாதன. இமேஜ் கொள்கைகளுக்கு தடுப்புகள் உள்ளனவா? இல்லைகள் இருப்பினும் இது வாழ்கின்றது. நாம் படங்களால் மூடப்பட்டவர்கள். படம் இல்லையேல் கூட்டம் இல்லை. கூட்டம் நடக்காது கமெரா இல்லாமல். இப்போது படம் இல்லாமல் இலக்கியம் நடக்குமா? இந்த இமேஜ் கொள்கைகளால் நடத்தப்பட்டனவே எமது வாழ்வுகள்.

    இப்போது படங்களின் சுதந்திரம் உலகின் எந்த மூலைகளிலும். ஓர் போன் முன் உலகின் படங்கள் பலதும் தெரிகின்றன. அண்மையில் துருக்கியின் புகைப்படக் கலைஞர் Burhan Ozbilici, இந்த நாட்டின் சோவியத் அம்பாசடெரைக் கொலை செய்த காட்சியைப் படம் எடுத்ததால் World Press Photo நிறுவனத்தினால் பரிசும் வாங்கியுள்ளார்.

    நிறைய படங்கள் சமூகத்தின் விழிகளில் மட்டுமல்ல இதயங்களிலும் உள்ளன. படங்களை ஓர் சமூக இயக்கத்தின் வெளிப்பாடாகக் காட்டுவோர் ஆதிக்க அரசுகளால் தண்டிப்பினையும் கண்டிப்பினையும் காணும் வேளைகளில் இவர்களுக்குக் கைகள் கொடுத்தல் மனித விடுதலை விருப்பர்களின் நோக்கமாக இருத்தல் சிறப்பானது.

    றென் ஹாங்கினது விழிகள் நிர்வாணத்தை படங்களுக்குள் புதைப்பதைக் கொண்டதாகும். இவரது உழைப்புக்குள் முலைகளையும், தொடைகளையும் காணுதல் ஓர் போர்னோகிராபி என நான் நினைக்கவில்லை. இவரது படங்கள் சீன அரசுக்குக்குப் போர்னோகிராபியாகப்பட்டதால் சில தடவைகள் கைதுசெய்யப்பட்டார். “எனது படங்களில் காட்டப்படும் அரசியல் கருத்துகள் சீனாவுடன் சம்பந்தப்படடனவல்ல. சீனாவில் அரசியலையே நான் எனது கலையில் நுழைகின்றேன். ‘செக்ஸ் சந்தேகம்' எனும் நோக்கில் எனது ஓர் கண்காட்சி சீன அரசினால் தடைசெய்யப்பட்டது" என்கின்றார் தனது ஓர் பெட்டியில் றென் ஹாங்.

    “இது புதியது என்பதால்தான் நான் இந்தப் படங்களை எடுக்கின்றேன். எனது வெறுமையாகிக் கிடக்கும் இதயத்தை இது நிரப்புகின்றது” எனவும் சொல்கின்றார்.

    மனச் சிக்கல்களோடு பல ஆண்டுகள் இவர் வாழ்ந்தார் எனச் சொல்லப்படுகின்றது. தனது இணையப் பக்கத்தில் இவரது கவிதைகளும் உள்ளன. ஓர் கவிதையைத் தருகின்றேன் சீன மொழியில். இந்த மொழியைத் தமிழில் தெரிந்த ஒருவர் தமிழில் மொழிபெயர்ப்பது நல்லது.

    Poem 2007

    《只言片语》

    我是死去的诗人

    双目已盲

    一只眼中是日食

    一只眼中是月食

    我愿用所有的性交

    换回只言片语

    我愿用所有的光彩

    换回苍白

    2007.08.13

    《青春》

    青春很瘦

    一阵微风就把它吹走了

    回来的时候

    带着肥胖的棺材

    2007.12.21

    《短诗》

    你的鸡巴

    又短又湿

    2007.12.26

    《失眠》

    我在床上

    你在上床

    2007.12.30

    《吻别的清晨》

    太阳如果是月亮就好了

    舌头如果是阴茎就好了

    2007.12.30

    மனச் சிக்கல் இவரது தினங்களைக் கடித்தது. “My Depression” எனச் சீன மொழியில் இவர் தனது இணையத்தில் எழுதியது தமிழில் வருதல் இவர் உள்ளத்தை நாம் விளங்க உதவும்.

    விழுதலும் வாழ்வாக இருக்கும் எனக் கருதிய இந்த இளம் கலைஞனின் சில படைப்புகள் உங்களது விழிகள் வாசிப்புக்காகவும்.

    Save

    Save

    Save

    Save Save

    Postad



    You must be logged in to post a comment Login