Recent Comments

    உலகம் ஓர் அகதிக் கதையா?

    Refugeeகுஞ்சன்

    Ref11980 இல் நான் அகதியாக தாமிரபரணியின் தலை நகரான கொழும்பில் இருந்தேன். நானும், நிறையப் பேரும் அகதிளானபோது இது கொலை நகரமாகப்பட்டது . இந்தப் நிறையப் பேரில் தமிழ் மக்களைக் காக்க வந்த சிங்களவர்களும் உள்ளனர் என்பதைக் குறித்தல் அவசியம். ஆனால் அரசு தமிழர்களின் அழிப்பை ஊக்குவித்தது. இந்த அழிப்பின் பின்னணியில் ஜனனித்தவைகளே எமது அகதிக் கதைகள். எமது நாட்டில் நாம் அகதிகளாக இருப்பது சரியா? தமிழ் மக்கள் தமது தேசத்தில் அகதிகளாக இருந்தது இலங்கை அரசியலின் போலித் தன்மைகளது வெளிப்பாடு. இந்த நாட்டில் இருந்த இரண்டு மொழிகளையும் பேசும் மக்களுக்கு மனிதப் பெருமையைக் காட்டியதல்ல இலங்கை அரசு, ஆம்! நாட்டைப் பிரிக்கும் வெறியில் இருந்த தமிழர் கோஸ்டிகளும் இந்தப் பெருமையைக் காட்டியதல்ல. மொழிகளது தேசிய வெறிகளால் உடைந்தது எங்கள் அழகிய தீவு. இப்போது “உடைப்பு” வெறி இல்லை எனப்படுகின்றது. கொடூரம், உல்லாசப் பிரயாணிகளின் அடிமையாகிக் கொண்டுள்ளது இந்தத் தீவு. இன்று உலகம் ஓர் அகதி வலயமாகிக் கொண்டுள்ளது. ஒவ்வொருவரும் “பொருளாதார நெருக்கடி” எனச் சொல்கின்றனர். முன்பு பணம் இருந்தது, இப்போது இல்லை. எது இதனது காரணம்? முதலாளித்துவம் இப்போதும் மூர்க்கத்தனமாக உள்ளது என்பதே காரணம். முன்பு “மூன்றாம் உலகம்” என்று வறுமை நாடுகளை அழைத்தார்கள். இப்போதோ முதலாளித்துவ நாடுகளும் மூன்றாம் உலகமாக மாறிக்கொண்டுள்ளது.Ref2 இது எப்படி எமது சம்பளப் பறிப்புகளை வெளிப் போர்களுக்குச் செலவழிக்கின்றது? போர்களை இந்தத் தேசத்தின் மக்கள் கேட்கவில்லை, இவைகளது எதிரிகளாகவும் உள்ளனர். முதலாளித்துவத்தின் மேன்மைத்துவம் ஏழ்மை வயல்களையே பிறப்பிக்கும். இப்போதும் அப்பிளுக்கு செயற்கையான அழகைப் புகுத்தும்போது எப்படி எமது வீடுகளில் அழகிய பூக்களைப் பார்க்க முடியும்? உலக நாடுகளின் மக்களில் பலர் இன்றும் அகதிகளாகி வருகின்றனர். பொருளாத, அரசியல் காரணிகளை இந்த இருப்புக் கொண்டிருந்தாலும் இவர்கள் அகதிகளே. உலகமயத்துவம் மீது மாலைகளைப் போடலாமா? இதனைத் தொடக்கிய வேளையில், இது ஓர் புரட்சி எனப் பேசப்பட்டதில் உண்மை இருந்தால் ஏன் ஒவ்வொருவரும் அகதிளாகிக் கொண்டிருப்பர்? முதலாளித்துவமும், மனிதக் கொடுமைகளும்தாம் உலகில் அகதி வயல்களைத் தோற்றுவித்துக் கொண்டிருக்கின்றன. இந்த நூற்றாண்டில் தான் அகதிகள் நிறையப் பெருகியுள்ளனர். 52.9 மில்லியன் பேர் தமது நாடுகளை விட்டு 2015 இல் வெளியில் வந்துள்ளனர் என்று HCR (Office of the High Commissioner for Refugees) சொல்கின்றது. 11.7 மில்லியன்களுக்கு அதிகமான சிரியர்கள். இந்த சிரியா நாடு தந்தை ஆட்சியில் கொடூரமாக இருந்தது, மகன் இந்தக் கொடூரத்தை அதிக அபிவிருத்தி செய்துள்ளார். இது பெட்ரோல் சங்கசங்கள். இவை மக்களையும், நாட்டையும் பிரிப்பது. முதலாளித்துவ, இராணுவக் கொடுமைகளை மாஸ்கோவுக்காக, இதனது பெட்ரோல் வணிகத்துவத்காக காக்கின்றார் மகன் எனும் மக்கு. 6.4 மில்லியன் கொலம்பிய மக்களும், 4.1 ஈராக்கிய மக்களும் அகதிகள் ஆனார்கள் எனச் சொல்கின்றது HCR. Syriarefugeeமனித மேன்மையை ஒவ்வொரு நாட்டின் அரசியல் பூதங்களும் சொல்லிவருகின்றன. ஆம்! மக்களுக்கு வாழ்வின் உரிமையை அழித்தபடி. கறுப்புகளும் வெள்ளைகளும் “முதலாளித்துவக்” கொடுமையை மீண்டும் நிறுத்த போலிப் பள்ளிகளையும், போலித் தத்துவங்களையும் கோரமாக நிறுவும் நிலைக்குள் புத்தர்களாக வராது நினைத்தல் மேலானது. ஆம்! வெளியினைப் பார்த்ததால் ஓர் அகதியாக வந்தவர்தான் புத்தர். இவரினை வணங்கும் பூமியில் பிறப்பதால் நாம் அகதிகளாக வருதல் சாலம் என்பது பொருத்தமானது. புத்தர் பூமிதான் அகதியைத் தோற்றுவித்தது எனச் சொல்லமாட்டேன். கார்ல் மார்க்ஸ் வாழ்ந்த இடங்களில் நிறைய அகதிகள் தோன்றுகின்றனர், அந்த இடங்களில் வாழ்வோர் தாம் அகதிகள் எனச் சொல்லாமல் நாட்டைக் கடக்கின்றனர் வறிய நாடுகளை நசுக்குவதக்காக. நிறைய முதலாளிகளது தோற்றம் எமது அரசுகளினது நிந்தனை. இவர்களது பெருப்புகளே அகதிகளினது பெருப்புகளுக்கும் காரணமாக இருக்கும் என்பது என் கருத்து. முதலாளித்துவக் கலாசாரமே எமது உலகில் அகதி வயல்களைச் செய்து கொண்டுள்ளது. இன்றும் நவ காலனித்துவம் மேலாகப் போகும் வேளையில் அகதிகள் இல்லாமல் போவார்களா? ஆபிரிக்க நாடுகளின் தலைவர்கள் தாம் இறக்கும் வரை தமது பதவிகளில் இருப்போம் என்ற முடிவை எடுத்தும், இந்த முடிவை எடுத்தோர் வெள்ளை முதலாளித்துவ நாடுகளால் பாதுகாக்கப்பட்டுக் கொண்டிருப்பதாலும் அகதிக் கொடுமைகளை அழிக்க முடியுமா? இந்த அகதிகள் முதலாளித்துவ நாடுகளின் புதிய அடிமைகள் என்பதைக் குறிப்பிடாமல் இருக்க முடியுமா? உலகமயமாதல் முதலாளித்துவத்தால் பொய்த்துவமாகின்றது. எமது உலகின் பெரிய கோவிலாக வருகின்றது அகதித்துவம்.

    Postad



    You must be logged in to post a comment Login