Recent Comments

    விழித்தேன்

    awokeகுஞ்சன் இன்றும் மீண்டும் நான் விழித்தேன் அகதியாக ஒரு நிலத்தில் அங்கு எனக்கு மொழிநீர் அந்நியமாக இருந்தது பின் அது என் மொழியாகலாம்….. நாடுகள் மொழிகள் பாதைகள் தடுப்புகள் விடுப்புகள் விருப்புகள் விருப்பின்மைகள் பேசுதல் பேசாதிருத்தல்கள் ஒருமைகள் பன்மைகள் இந்தப் பாலங்களைக் கடந்து விழித்தேன் மீண்டும் அகதியாக கடத்தல் சுலபமானதா? ஒவ்வொரு நாடுகளிலும் சொர்க்கமும் நரகமும் இவைகளே இந்த நாடுகளின் பெற்றோர்கள் ஆம்! எமது பெற்றோர்கள் நாடுகளின் கைதிகள் மொழிகளின் அடிமைகள் வெறித்துவம் மொழித்துவத்தால் மீறி மீறிப் பெருகும்போது நாடுகள் சிறிதாகுகின்றன அன்று நான் ஓர் நாட்டில் இருந்தேன் அந்த நாட்டில் இருந்தேன் அகதியாக அது என் நாடு என எனக்குச் சொல்லப்பட்டது அது என் நாடு என எனக்குப் படவில்லை என் நாடு உன் நாடு ஏன் இந்தப் போலிச சூத்திரங்கள்? ஒவ்வொரு நாடுகளும் எனது நாடாக இருக்கும் விருப்பு என்னுள் எழுந்த கனவு இந்தக் கனவு உடையும் கனவு என்பது பிந்திப் புரிந்தது ஏன் இது என் நாடா நான் இருக்கும் நிலம்? இனவாதிகளும் உள்ளே வந்தோரும் பல மொழிகளும் பல இனங்களும் எனக்கு நிச்சயமாக நிலத்துக்கு ஓர் நிறம் உண்டு என்பதைக் காட்டவில்லை ஆம்! ஓர் தொலைவில் நான் விழித்தேன் அங்கு நிறங்கள் இல்லை… சில மிகவும் சில இலைகள் நிறங்களை மறுத்து என்னை வரவேற்றன .

    Postad



    You must be logged in to post a comment Login