Recent Comments

    பாதுகாப்பு உறையுடன் சுவடி!

    சுவடி பாதுகாப்புக் கவசத்துடன்! வித்தியாசமாய் இருக்கும். விளம்பரப் பிரசுரங்கள் வீணாகாமல், வாடிக்கையாளரைச் சேர, சுவடிக்குள் வைத்து வினியோகிப்பது விளம்பரதாரர்களைக் கவர்ந்து விட்டது. அறிமுக அட்டைகள், விளம்பர அட்டைகளை உள்ளே வைத்து வினியோகிப்பதற்கு வசதியாக உறைக்குள் வைத்து வினியோகிக்கிறோம். மற்ற வர்த்தகர்களும் எங்கள் சேவைகளைப் பயன்படுத்துவார்கள் என நம்புகிறோம். விளம்பரதாரர்களை ஆதரியுங்கள், அச்சுத் தேவைகளுக்கு எங்களை அணுகுங்கள் என்று திருப்பித் திருப்பிச் சொல்லத் தேவையில்லாத புத்திசாலித் தமிழர்கள் நீங்கள்! வழமை போல, 'உவரை விட நான் திறமாய் செய்வன்' என்று புறப்பட்டு, பாதுகாப்பு உறை என்பதைத் தவறாக விளங்கி, விபரீதமான எதற்குள்ளாவது வைத்து பிரசுரங்களை வினியோகிக்கும் புத்திசாதுர்யம் யாராவது தமிழர்களுக்கு ஏற்படக் கூடாது என்பதற்காக... இறைவனைப் பிரார்த்திப்போம்!

    Postad



    You must be logged in to post a comment Login