Recent Comments

    குப்பை உலகம்

    thayagam featured-trashக.கலாமோகன்

    இன்று நாம் மிகவும் அதிகமாக வெளியால் கொட்டுகின்றோம். நிறைய உற்பத்திகள், நிறைவைக் காட்டிலும் பெரிதான விளம்பரங்கள். எனது கடிதப் பெட்டிக்குள் நான் கடிதங்களைக் காணுவதில்லை. நிறைய விளம்பரங்கள், அவைகளது பேப்பர்களின் மணத்தால் மயக்கம் வேறு வந்துவிடும். நாம் நிறைய வாங்கவேண்டும் என்று சொல்லுகின்றது எங்களது முதலாளித்துவ உலகம். எமக்குத் தேவையில்லாதபோதும் எங்களை மீண்டும் வாங்க வைக்கின்றது. இது எமக்குத் தருவது குப்பை உலகத்தையே. செல்வநாடுகளின் அபாயத்தைத் தரும் குப்பைகள் குறிப்பாக வறுமை நாடுகளிற்கு களவாக அனுப்பப்படும் வித்தைகள் இப்போதும் நடந்து வருகின்றன. சட்டம் இவைகளைத் தடைசெய்துள்ளது. ஆனால் சட்டங்களுக்கு எதிராக எப்போதும் அநீதிகள் நடக்கும் என்பதை நாம் தினம் தினம் கண்டு வருகின்றோம். trashingBale இல் தயாரிக்கப்பட்ட உடன்படிக்கையின் மூலமாக Waste Electrical and Electronic Equipment (WEEE) ஏற்றுமதிகளை வேறுநாடுகளுக்குச் செய்தல் தடைசெய்யப்பட்டுள்ளது. சில வறுமை நாடுகள் WEEE ஐ களவாகப் பெறுவது, அவைகளின் மீள் தயாரிப்புக்காகவே. இந்தப் பொருள்கள் நிச்சயமாக ஆபத்தானவை. Ivory Coast இல் இந்த WEEE தயாரிப்புகளால் நிறையப் பேர் காலமாகி உள்ளனர். நைஜீரியா, கானா போன்ற நாடுகளுக்கு நிறை WEEE அனுப்பப்படுகின்றது. Trafigura, இது ஓர் சுவிஸ் நிறுவனம். Ivory Coast இற்கு களவில் குப்பைகளை அனுப்பியமைக்காக நெதர்லாந்தில் இது கடுமையாகத் தண்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பங்களூர் கணனிக் கலையில் முன்னுள்ளது. இங்கு பாவிக்கமுடியாத Electronic பொருள்கள் ஏராளம். இந்தப் பொருள்களை புதுப்பொருட்கள் ஆக்கும் வேலைகள் நிறைய நடக்கின்றன. ஆனால் இந்த வேலைகள் சூழலியலுக்கும், சுகாதாரத்துக்கும் கேடுகளைத் தருகின்றனவாம்.waste in india அதீத உற்பத்தி கலாசாரத்தில் வாழ்வு குப்பை இல்லாமல் கிடைத்துவிட முடியாது. தேவைக்கு மீதான உற்பத்தியால் நுகர்வுக் குறைவு ஏற்பட்டால், மீதி குப்பைக்குள்தான் செல்லவேண்டும். பல நாடுகளிலிருந்து இந்தக் குப்பைகள் மனிதாபிமான நோக்கோடு, சட்டப்படி ஏற்றுமதி செய்யப்பட்டால் வறுமைக் கொலைகள் நிச்சயமாகக் குறையும். முதலாளித்துவ உற்பத்தி உலகம் வறுமையைப் பார்ப்பதில்லை. அது லாபத்தைப் பார்ப்பதே. எமது தேவைக்கு மீறிய உற்பத்திகள் அழியும் தருணத்தில்தான் உலகில் குப்பை மணம் குறையும், உலகு கொஞ்சமாவது சுவாசிக்கும்.

    Postad



    You must be logged in to post a comment Login