Recent Comments

    ஒரு பூந்தோட்டக் காவல்காரனின் நாட்குறிப்பிலிருந்து!(1)

    Tulip1குளிர்காலம் முடிந்து, கோடை தலைகாட்டுகிறது. இந்த பூந்தோட்டக்காவல்காரன் 'என்ன வளம் இல்லை நம்ம கொல்லைப் புறத்தில்' என்று கொத்திக் கிளற ஆரம்பித்து விடுவான். பழையதைக் கொத்திக் கிளறுவது பற்றி உணர்வாளர்கள் கொதித்தால் நமக்கென்ன? நிலம் பண்பட வேண்டுமாயின் கொத்திக் கிளறியாக வேண்டும் என்பது மட்டுமல்ல, பயன் பெற வேண்டுமாயின், பயிர் நாட்டி கவனமாய் நீரூற்ற வேண்டும். களையெடுப்பதில் மட்டும் இன்றும் கவனமாய் இருக்கும் தம்பியின் தம்பியர் நமக்கும் தோள் கொடுத்தால் நாடு சிறக்கா விட்டாலும் நம் தோட்டம் சிறக்கும். எப்படித் தான் களையெடுத்தாலும், மாளாது நம்ம கொல்லைப்புறம். நமக்கு முன்னால் இருந்தவர்களால் கவனிப்பாரற்று, ஆளை மூடும் களைகளோடு கிடைத்த நமக்கென்றோர் புல்வெளி அது. அந்தக் காட்டை வெட்டிக் களனியாக்கியது பெரிய கதை. Hy7மாலை வேலை முடிந்து, போகும் வழியில் கடன் வசூலிப்பு எல்லாம் செய்து, (தமிழர்களுக்கும் சேவை வழங்கும் தமிழ் மகன் நிர்வாகத் தொழில். என்னத்தைச் சொல்ல?) வீடு சேர களைப்பு மிகுந்திருந்தாலும், சூரியன் கொழுத்திக் கொண்டிருப்பான். உற்சாகம் பிறக்க உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை நடக்கும். எனவே இம்முறை அவ்வப்போது நமது கொல்லைப் புறம் பற்றி நாட்குறிப்பு எழுதுவதாய் உத்தேசம். hy3 வீட்டுத்தோட்ட ஆர்வலர்களுக்கு பயன்படக் கூடிய தகவல்களுடன், படங்களுமாய்! படங்கள் நம் கைவண்ணமே! கிட்டத்தட்ட இருபது வருட அனுபவம். பலதும் பத்துமாய் நிறைய இருக்கும். அதென்ன, நாட்குறிப்பு? மனிதர்களும், போராளிகளும், உளவாளிகளும் நாட்குறிப்பு எழுதும்போது, நம்மைப் போன்ற உழவாளிகள் எழுதக் கூடாதோ? hy6வீட்டுத் தோட்ட ஆர்வம் காரணமாய், சந்தா பெற்ற Gardening Catalog களில் கண்ட அழகில் மயங்கி நட்ட Tulip கள், Hyacinth கள்... வெங்காய ரகத்தினவான இவை அக்டோபரில் நடப்பட்டு, ஒரு குளிர்காலத்திற்கு காலங் கழிக்க வேண்டும். (Fall Bulbs). குறைந்தது ஆறங்குல ஆழத்திற்கு நட வேண்டும். மேலே நட்டால் அழுகலாம் என்பது மட்டுமல்ல, அணில்களுக்கும் இரையாகலாம். வெங்காயம் போலக் குட்டி போட்டவற்றை சில வருடங்களில் பிரித்து பல இடங்களில் வைக்கலாம்.Hy5 குளிர் முடிந்து, கொட்டிய பனி உருகிய பின்னால் முதலில் Crocus கள், Muscari என்பன பூக்கும். இவை நில மட்டத்துடன் வளர்வன. நமது சின்ன வெண்காய சைஸ் என்பதால் அதிகளவில் நட வேண்டும். நில விரிப்புப் போல மஸ்காரி நீலமாய் அழகு காட்டும். தொகையாய் வாங்கி நட்ட மஸ்காரிகளில் ஒன்றிரண்டு ஆங்காங்கே தலைகாட்டுகிறது. என்ன நடந்ததோ தெரியாது. hy4அதன் பின்னால் ஹையசிந்த். விலையான குமிழ்கள். பெரிய வெங்காய சைஸ். நறுமணம். அதற்கு நில மட்டத்தில் படுத்திருந்து தான் மணக்க வேண்டும். இவற்றோடு சில Daffodil கள். பெருமளவில் இல்லை. எங்கேயோ தப்பிப் பிழைத்த ஒன்றிரண்டு தான். அடுத்து டியூலிப்புகள். அது அள்ளுகொள்ளையாய் உண்டு. பல்வேறு நிறங்களில். படங்களைப் பார்ப்பீர்கள். இவை ஒரேயடியாகப் பூக்காமல் வேறுவேறு காலங்களில் தொடர்ச்சியாய் பூக்கும். வாங்கும்போது Early Spring, Late Spring, Summer, Late summer என பார்த்து வாங்கவும்.Tu4Daf1 கிட்டத்தட்ட ஆகஸ்ட் வரை கண்ணைப் பறிக்கும். வசந்த கால ஆரம்பத்தில் நட்டு கோடை காலம் முழுவதும் பூக்கும் குமிழ்கள் (Summer Bulbs) Tu3வாங்குவதில் நாட்டம் இல்லை. ஒரு குளிருடன் அவை இறந்து விடும். குமிழ்களைக் கிண்டி நிலக்கீழ் அறையில் பராமரித்து மறுவருடம் நடலாம். இவை குளிர் முடிந்து விதைகள் விற்பனைக்கு வரும் காலத்தில் விற்பனையாவன. பூத்து முடிந்து இதழ்கள் உதிர்ந்ததும், நடுவில் தெரியும் காயை முறித்து விட வேண்டும். அப்போது தான் ஒளித்தொகுப்பில் உருவாகும் உணவு கிழங்கிற்கு சென்று அடுத்த வருடம் முளைக்கும்.Tu5 டியூலிப்புகள் அளவுக்கு மீறியதால், கொல்லைப்புறமும் நீடிப்பு! பின்னால் ஒரு செரி. அல்பேட்டா பக்கத்தினது. பெயர் மறந்து போய் விட்டது. சோக் செரியாக இருக்கலாம். பூத்திருக்கிறது. சிறிய செடி சைஸ் இருக்கும். ஓரிரு பழங்கள் சாப்பிட்ட ஞாபகம்.Choke

    Postad



    You must be logged in to post a comment Login