Recent Comments

    அதிகாரக் கோடுகள்

      Capitalismகுஞ்சன்

    8 வருடங்களின் முன்னர், JÉRÔME SEYDOUX,  Pathé சினிமா நிறுவனத்தின் முதலாளி, முதலாளித்துவத்தின் மீது சொன்ன கருத்துகள் குறிப்பிடத்தக்கன. “முதலாளித்துவம் சிறப்பானதல்ல, ஆனால் இதனை விட்டு வேறு ஒன்றும் கிடைக்கவில்லை.” என்கின்றார். “நெருக்கடி” யைக் காட்டி “உலக வணிகத்துவ முறைகள் கொடூரமான நோய்களைக்  காட்டிக்  கொண்டுள்ளன. இவை சுகப்படுத்தபட வேண்டும். எவரும் கடன் கொடுப்பதற்குத் தயங்குகின்றார்கள். பொருளாதார விநியோகம் சடுதியாக நிறுத்தப்படும்.”  என நீடிக்கப்படுகின்றது இவரது கருத்து.

    par44995இவர் மார்க்ஸ் அல்லர். இந்த முதலாளி சொல்லும் கருத்து “முதலாளித்துவத்தின்” சிறிய எதிர்ப்பாக உள்ளது.

    ஆம்! அதிகாரக் கோடுகள்! இந்தக் கோடுகளாலேயே மனிதம் மனிதத்தைப் பிரித்துக் கொண்டுள்ளது. இந்தக் கோடுகளை நீட்டி நீட்டிக் கொள்ளும் கலையைக் கொஞ்சுகின்றது முதலாளித்துவம். இன்று முதலாளித்துவ நாடுகளில் சிறிய முதலாளிகள் அரசின் சட்டங்களாலும், வணிக வட்டித்துவங்களாலும், வங்கித்துவங்களாலும்  கொடுமைப் படுத்தப்படுவதை நாம் மறுக்க முடியாது. எது இந்தக் கொடுமைத்துவத்தின் காரணி? இந்த அரசுகள் பெரிய முதலாளிகளை, தமது அரசியல் பேதமைத்தனத்தின் நீட்சிக்காக வணங்குகின்றனவே என்பதுதான் காரணம்.

    முன்பு இந்த முதலாளித்துவ நாடுகளில் சின்னக் கடைகள் இருந்தன.  இவைகள் உள்ளன இப்போதும். ஆம்! பெரிய கடைகளின் சின்னக் கிளைகளாக. இந்தப் போக்கு “சின்ன முதலாளிகளை” அழித்து அவர்களைப்  பெரிய முதலாளிகளின் அடிமைகள் ஆக்கியுள்ளது.

    currencyமுதலாளித்துவ அரசின் அதிகாரக் கோடுகளைப் பக்கம் பக்கமாகக் காட்டிய கார்ல் மார்க்ஸினது   அனைத்து எழுத்துகளும்   உலகின் மொழிகளில் தரமாகவும் தரமில்லாமலும் அரசியல் நோக்குகளுக்காக மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவைகளை எதிர்த்தல் எப்போதுமே  முதலாளித்துவப் புத்திகளினது இலக்கு. பல முதலாளித்துவப் பத்திரிகைகள் “மூலதனம்” ஆசிரியரின் எழுத்துக்கள் மீளவும் தொடப்படலாம் எனச் சொல்வன.

    ஒவ்வொரு உடலும் ஒவ்வொரு அரசு எனும் எனும் நினைப்பை அழித்தல்தான் மார்க்ஸ்ஸினது  போராட்டம்.  இன்றும் தனித்த  உடல்த்துவம் முதலாளித்துவ வெறிகளுக்குள் நின்று அதிகாரக் கோடுகளை விலங்குகளாக்கி முழு மனிதத்தையும் அடிமைப்படுத்தி வருகின்றது. இந்த அடிமைத்துவம் ஒவ்வொரு நிறங்களுக்குள்ளும் பல இனப்  பிரிவுகளில்  நிச்சயமாக உள்ளது.

    எனது சிறு குறிப்பில் பல தரவுகளைத் தர முடியாது. ஆனால் ஆபிரிக்கா எனும் கறுப்புக் கண்டம் “அடிமைத்துவம்” எனும் அக்ரோசத்தை இன்னும் வாழ்கின்றது. இந்தக் கண்டத்தில் நிறையப் புத்திஜீவிகள், சாதனையாளர்கள், பெண் விடுதலை வாதிகள் உள்ளனர் என்பது சிறப்பானது, ஆனால் இவர்கள் இந்தக் கண்டத்தின் அடிமைத்துவ அரசியலை மௌனமாக வாசிப்பவர்களே. வெள்ளைத்துவம் தூண்டியதா ஆபிரிக்க அடிமைத்துவம்? இது கறுப்பின் முதலாளித்துவ வெறிகளால் தோன்றியதென்பதை இப்போதும் சொல்லுவதில் என்ன அச்சம்?

    எது ஆபிரிக்காவின் அரசியல்? அப்பா  ஜனாதிபதியாகின்  மகன் அவரது இடத்தில் நிச்சயமாக்கப்படுவார் அப்பாவின் அரசியலால். கொங்கோவில் தகப்பன் முடிந்தபின் மகன், காபொனில் போங்கோ இறந்தபின் மகனும்… பல கறுப்பு நாடுகளில் ஜனாதிபதிகள் ஆயுள் காலம் வரை…..  இந்த சூழலில் ஜனநாயகம் ஒருபோதும் கறுப்புக் கண்டத்துள் நுழைந்து செத்துள்ளது.

    இன்றைய ஆபிரிக்க அரசியல் முதலாளித்துவ வெள்ளை நாடுகளால் நடத்தப்பட்டாலும்,  வெள்ளையர்கள் ஆபிரிக்க அடிமைகளை வெள்ளை நிலங்களுக்கு தள்ளியவேளைகளின் முன் அங்கு அடிமைத்துவம் ஓர் கொடூர கலாசாரமாக இருந்தது.

    முதலாளித்துவத்தின் நோக்கு எது? நெருக்கடி நெருக்கடி எனக் கத்தும் இந்தக் காசுப்புளிப்பு நாடுகளின், அரசியல் அதிகாரங்கள் இப்போதும் ஊழல் இசையை விட்டுக்கொண்டுள்ளன. இவைகளது தத்துவம் அடிமைத்துவமே, ஆம்! பிற கோலங்களில்.  Michel Foucaut எனும் பிரான்ஸின் தத்துவஞானி முதலாளித்துவ கலாசாரத்தில் பல கோலங்களில் அடிமைத்துவம் எழுதப்படுகின்றதென்று. இந்த எழுத்துக்கள் “அதிகாரக் கோடுகள்” ஆட்சிகளை நடத்துபவனவே.

    hqdefaultமனிதனின் வாழ்வு ஓர்  தற்காலிக வாழ்வு. இந்த நிலையை முதலாளித்துவம் காட்டாது.  மூலதன  வேட்டைகளால் “தற்காலிக வாழ்வு” எனும் உண்மையை மறைப்பதால்தான் “அதிகாரக் கோடுகள்” எமது உலகின் உயிர்களை நிறைய எரித்துக் கொண்டு உள்ளது.

    மீண்டும் மார்ஸ் பிறக்கவேண்டியது அவசியம். அவர் நிச்சயமாக வேறு பெயரில் தனது கருத்தைத் தருவது அவசியம். ஏன்? பல மார்க்ஸூகள்  இன்றும் “அதிகாரக் கோடுகள்” இயக்கத்தில் இன்றுவரை உள்ளனர்.

    இந்தக் கோடுகள் அழிக்கப்படவேண்டும்.

    இவைகள் அனைத்து மொழிகளில், கலாசாரங்களில், சாதிகளில் , சமயங்களில், வீடுகளில், வீதிகளில்…  இன்னும் பிற நிலைகளில் இருந்தாலும்….

    வாழ்வை எரிப்பது முதலாளித்துவம்.

    Postad



    You must be logged in to post a comment Login