Recent Comments

    மஞ்சள் ஜாக்கெட் போராட்டம் – பிரான்சு

    நித்தியானந்தன் நிருஷ்கன்

    மூன்றாம் மண்டல நாடுகளுக்கு உரியவை என்று என்னப்பட்டுக் கொண்டு இருப்பவையே மக்கள் போராட்டம், மக்கள் புரட்சி இப்படியான மாய தோற்றத்தை தகர்த்து ஏறிய போகும் நாள் 2019 நவம்பர் 17ம் திகதி என்று யாரும் கற்பனை செய்து கூட பாத்திருக்க மாட்டார்கள் .

    குறிப்பாக அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளிடையே அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் தங்கள் நலன் மற்றும் பாதுகாப்பு சார்த்த விடயங்களுக்கு எதிராக அரசாங்கத்தால் கொண்டுவரும் சட்டங்கள், பரிந்துரைகளுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டங்கள் , போராட்டங்களில் ஈடுபடுவது வழமை இவ்வாறான சம்பவங்கள் வளர்த்த நாடுகளாகிய பிரான்சில் ஏற்றப்பட்டமை புதிய ஒரு விழிப்புணர்வை மக்களிடம் வெளிக்கொண்டு வந்துள்ளது .

    பிரான்சு அரசாங்கம் தங்கள் மக்களுக்கு வழங்கும் எரிபொருளுக்கான குறிப்பிட்ட வீதம் அதிகரித்தமையே இப்போராட்டத்திற்கான முக்கிய காரணமாகும். பொதுவாக பிரஞ்சு நாட்டில் வாகனங்களில் பயணிக்கும் போது அவர்களின் வாகனத்தில் பழுது அல்லது திருத்தம் வேலை செய்ய வாகனத்தை வீதியோரமாக வாகனத்தை நிறுத்தும் சாரதிக்கு ஒரு மஞ்சள் ஜாக்கெட் அணிந்தே இறங்கி திருத்த வேலையை மேட்கொள்ள வேண்டும். காரணம் அந்த மஞ்சள் ஜாக்கெட்டின் நிறம் தோலைவில் வரும் சாரதிகளுக்கான சமிஞ்சைகளாகவே இந்த நடைமுறைகள் இருந்து வந்துள்ளது. இங்கே இந்த போராட்டம் மஞ்சள் ஜாக்கெட் போராட்டம் (YELLOW VEST PROTEST ) என அழைக்கப்பட காரணம் போராட்டகாரர் அனைவரும் போராட்டத்தின் போது இந்த மஞ்சள் ஜாக்கெட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் . இது போராட்டத்திற்கான அடையாளமாக அனைவரும் பார்க்கப்பட்டதால் YELLOW VEST PROTEST என அழைக்கப்பட்டது .

    பொதுவாக போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் போன்றவற்றிற்கு கட்சி அல்லது அமைப்பு சாத்தே நடைபெறுவது வழமை ஆனால் இப்போராட்டத்தில் சிறப்பு எந்த ஒரு அரசியல் கட்சியோ அமைப்போ சாராது பொதுமக்க்ளவே முன் நின்று நடத்திய போராட்டம் இதுவாகும்.

    இது உலக முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு ஒரு அதிர்ச்சியாகவே பார்க்கப்பட்டது.

    இந்த மஞ்சள் ஜாக்கெட் போராட்டம் வெறும் 10 000 பேருடனேயே ஆரம்பிக்கப்பட்டது சில மணித்தியாலங்களில் மக்களின் ஆதரவுடன் நாடு பூராகவும் பரவலாக ஆரம்பித்த இந்த போராட்டத்தின் வடிவத்தையும் வேகத்தையும் பார்த்த பிரான்சு அரசு அவர்களின் மறுநாள் தங்களின் பிரதம மந்திரி பிலிப் மூலம் இப்போராட்டத்திற்காக தீர்மானத்தை பின்வாங்கப்போவதில்லை என்பதை ஆணித்தனமாக உத்தியோக பூர்வ அறிவிப்பை வெளியிடுகின்றனர்.

    ஆனால் அவர்களின் எதிர்ப்பை தவிடு பொடியாகிறது. பிரதம மந்திரியின் அறிவிப்பை தொடர்ந்து போராட்டம் இன்னும் மக்கள் பலத்துடன் பலம் பெறுகின்றது. இதை பார்த்து அதிர்ந்து பூனா பிரான்ச்சு அரசு தனது அமைச்சுக்களுடன் அவசர கலந்துரையாடல் மேற்கொண்டு அவசர அவசரமாக அறிவிப்பை வெளியிடுகிறார்கள் அதாவது இந்த எரிபொருளுக்கான வரி உயர்வு தீர்மானத்தை ம.மாநாடுகளுக்கு பிற்போடுவதாக பிரான்ச்சு பிரதம மந்திரி அறிவிப்பை வெளியிடுகிறார். ஆனால் போராட்டக்காரர்கள் போராட்டத்தை நிறுத்துவதாக இல்லை அவர்கள் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றனர். இது பிரன்ச்சு அரசுக்கு பெரிய தலையீடாகவே பார்க்கப்பட்டது.

    இச்சந்தர்ப்பத்தில் பிரஞ்சு அரசு எப்படியாவது போராட்டத்தை நிறுத்துவதாக இல்லை அவர்கள் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றனர். இது பிரன்ச்சு அரசுக்கு பெரிய தலையீடாகவே பார்க்கப்பட்டது.

    இச்சந்தர்ப்பத்தில் பிரஞ்சு அரசு எப்படியாவது போராட்டத்தை நிறுத்த வேண்டிய கட்டுப்பாட்டுக்கு தள்ளப்பட்டார்கள் அதுமட்டுமல்ல மக்களை அரசு சார்பாகவும் கவர புதிய தீர்மானத்தை வெளியிட்டார்கள். அது யாதெனில் இந்த எரிபொருள் உயர்வு வரி அதிகரிப்பு தீர்மானத்தை முற்று முழுதாக வாபஸ் வாங்குவதுடன் , இதுவரை பிரஞ்சுச்சு சட்டத்தில் இருந்த அகக்குறைந்த சம்பளமாக இந்த தொகையை மேலும் 100 EURO ஆக அதிகரிப்பதாகவும் அந்த தீர்மானத்தை வெளியிடுகிறார்கள் இருந்தும் போராட்டாதாரர்கள் போராட்டத்தை நிறுத்தவில்லை.

    இங்கு இந்த போராட்டத்தின் முக்கிய கருப்பொருளே எரிபொருளுக்கான வரியை அரசு அதிகரித்தமையே காரணமாகும். எத் தீர்மானத்தை அரசு வாபஸ் பெற்றும் போராட்டத்தரர்கள் போராட்டத்தை கைவிடவில்லை. இதை ஆழமான கண்ணோட்டத்தில் சிந்தித்தல் ஒரு உண்மையை ஊகிக்கா முடியும். அது கடந்த காலங்களில் பிரஞ்சு அரசின் நடவடிக்கைகள் மீது மக்கள் கொண்ட அதிர்ப்தியின் உச்சக்கட்டமே இந்த போராட்டத்தின் மூலம் வெளிப்படுத்துகிறது என்பதை ஊகித்து கொள்ள முடியும்.

    பிரஞ்ச்சு நாட்டில் உள்ள பெட்ரோல் நிரப்பு நிலையத்திற்கு எரிபொரு விநியோகிக்கும் பாதைகளில் தடை ஏற்படுத்தியமையால் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டது மற்றும் மக்களும் வாகனங்களை பயன்படுத்துவதை குறைக்க எரிபொருளுக்கான கேள்வி குறைவடையாச்செய்தனர். அது மட்டுமல்லாது பிரான்சு பிரதான பல்பொருள் அங்கடிக்கன வீதிகளிலும் தடையை ஏற்படுத்தினர் மற்றும் HIGHWAY TOLL BOOTHS கதவுகளை செயலிழக்கச்செய்தனர் இதன் மூலம் பெருமளவு வருமானத்தை கூட அரசு இழக்க நேரிட்டது. இது குறுகிய காலத்தில் பெரிய பொருளாதார தடுமாற்றத்தை ஏற்படுத்தியது.

    இந்த எரிபொருள் வரி அதிகரிப்பு குறிப்பிட்ட சில கார்ப்பிரட் நிறுவனங்களுக்கு இலாபத்தை ஏற்படுத்துவதற்காக இருந்த போதும் இந்த மஞ்சள் ஜாக்கெட் போராட்டத்தினால் என்னைய கார்ப்பிரேட் நிறுவனங்களுக்கு போராட்டத்தின் வழியால் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிட்டது. இதன் காரணமாக இந்த கர்பிரட் நிறுவனங்கள் அழுத்தமும் அரசுக்கு இந்த தீர்மானத்தை குறுகிய காலத்தில் வாபஸ் வாங்க காரணமாக அமைந்தது. என்பது நாம் அறிந்திருக்க முடியாத மறைமுக நகர்வாக இது பார்க்கப்படுகிறது .

    குறிப்பாக போராட்டங்கள் உணர்ச்சியின் உச்சக்கட்டத்தில் வன்முறையாக மாற்றமடைவது வழமையானது ஒன்று. ஆனால் போராட்டம் ஒன்று வன்முறையாக மாற்றமடையும் போது அது போராட்டத்தின் தன்மையை திசை திருப்பி அதற்கான வலுவை இலக்கச் செய்ய முடியும். அதாவது வன்முறை வெடிக்கும் போது அது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக அரசு அறிவித்து தனது உச்சக்கட்ட பலத்தை பயன்படுத்த அரசு இயந்திர சாதமாகவே அமையும். ஆனால் இந்த YELLOW VEST PROTEST ல் ஆங்காங்கே சிறிய வன்முறை நிகழ்ந்தாலும் கூடியளவு வன்முறையில்லாது நடந்ததது என்பது இப்போராட்டத்தின் இன்னுமொரு சிறப்பியல்பாகும் .

    இப்போராட்டத்தில் இன்னும் சில சிறப்புகள் நடந்தேறியுள்ளது . அதாவது இப்போராட்டத்தரர்கள் வன்முறைகளில் ஈடுபட்டு சொத்துக்களுக்கு சேதம் ஏற்றப்படுத்தியுள்ளனர் என்பதை அரசு மற்றும் அவர்கள் சார்ந்த முதலாளித்துவ ஊடகங்களின் மூலம் குறிப்பிட்ட காட்சிகளை திரும்ப திரும்ப ஒலி ஒளிபரப்பு செய்து போராட்டத்தைப் பற்றி பிழையான விம்பத்தை கூட ஏற்படுத்த பிரஞ்சு அரசு பின்புறமாக முயற்சிகளை மேற்கொண்டு அதிலும் தோற்றுப்போனது காரணம் போராட்டங்களில் நின்ற போராட்டகாரர்கள் மற்றும் மக்கள் தங்களின் கைத்தொலைபேசி மூலம் உண்மையான தகவல்கள் சமூக வலைத்தளம் மூலம் பதிவேற்றிக்கொண்டிருந்தனர் இதனால் உண்மையான தகவல்கள் மக்களை சென்றடைய அது கூட போராட்டத்திற்கு மக்களின் ஆதரவை வலுப்பெற்றுக்கொள்ள காரணமாக அமைந்தது.

    மேலும் குறிப்பிட்டு சொல்ல கூடிய முக்கிய விடயம், சில போராட்டங்களில் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து பிரஞ்சு நாட்டு காவல்துறை தங்களது தலைக்கவசங்களை கழற்றி போராட்டக்காரர்களுடன் கைகுலுக்கி அவர்களது ஆதரவினை வெளிப்படுத்தியிருந்தார். பொதுவாக போராட்டக்களத்தில் போராட்டக்காரர்களுக்குக்கு எதிராக அரச இயற்றிய காவல் துறை செயற்படுவது வழமை அதற்கு மாறாக இந்தப்போராட்டத்தில் ஆதரவினை காவல் துறை தெரிவித்தது ஒரு வியப்பான விடயம் கூட எனலாம்.

    இறுதியாக இங்கே கவனிக்க பட வேண்டிய விடயம் யாதெனில் இப்படியான மக்கள் சக்தி போராட்டத்தின் உண்மை மற்றும் நியாயத்தன்மைகளை வெளி உலகத்திற்கு காட்ட வேண்டிய ஊடகங்கள் இவற்றை பற்றி பெரிதும் அலட்டிக்கொள்ளாமல் நகர்ந்து சென்றது அவர்களின் ஊடக மாபியா வியாபாரத்தின் உச்சக்கட்டம் என்பதை இங்கே பதிவிடலாம்

    பொதுவாக இவ்வாறான ஊடகங்கள் ஆசிய, மத்தியகிழக்கில் மக்கள் தமது நியாயமான கோரிக்கையை முன்வைத்து போராடும் போது அச்செய்தியை கூட திரிவுபடுத்தி மாதக்கணக்கில் செய்தியாக வெளியிட்டு வியாபாரம் செய்யும் இவ்வாறான ஊடகங்கள் அமேரிக்கா, ஐரோப்பாவில் மக்களால் மேற்கொள்ளும் நியாயமான போராட்டங்களை வெளிப்படுத்தவில்லை. மக்களின் விழிப்புணர்வு தங்கள் நாட்டிற்குள் ஏனைய இடங்களிலும் பரவக்கூடும் மற்றும் ஏனைய முதலாளித்துவ நாடுகளும் பாதிப்படையும் என்ற காரணங்களுக்கா மட்டுமே இந்த பல ஊடகங்கள் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றமை ஒரு மனவேதனையான விடயமாகவே பதிவிடுகிறேன் .

     

    Postad



    You must be logged in to post a comment Login