Recent Comments

    செவ்வந்திப் பூ முடிக்க சின்னக்கா!

    சரி, ராஜகுமாரி கிடைக்கும் வரைக்கும் புதிரை ஒத்திப்போட வேண்டியதாயிற்று!

    நண்பர்கள் பலர் ராஜகுமாரி பரிசிலாகக் கிடைக்காது என்றவுடன் போட்டியாளர்களாக மறுத்து விட்டார்கள்.

    நல்ல காலம், ராஜகுமாரி இருந்திருந்தாலும், பெண்ணை பண்டமாக்குவதாக பெண்ணியவாதிகள் சண்டைக்கு வேறு வந்திருப்பார்கள்!

    சரி, ராஜகுமாரி கிடைத்தாலும், வெற்றியாளர்களுக்கு சுயம்வரத்தில் கலந்து கொள்ளும் தகுதி மட்டுமே வழங்கப்படும்.

    ராஜகுமாரி மாலை சூடுபவருக்கே ராஜ்யத்தில் பாதி!

    சரி, புதிரைப் போட்டு குழப்பாமல், நம்ம அறுவடை பற்றிப் பேசுவோமே!

    இடப்புறமாய் குமிழாய் இருப்பது Kohlrabi. கோவா இனத்தைச் சேர்ந்த இதன் தண்டு குமிழாகி வளரும். பச்சையாகவே சாப்பிடலாம். சமைத்தும் சாப்பிடலாம்.  முற்றினால் பலகை போல ருசிக்கும்! தமிழ்நாட்டில் இதற்கு ஏதோ பெயருண்டு. ஞாபகம் இல்லை.

    பக்கத்தில் நமீதா, குஷ்பு, தற்போதைய பானுப்பிரியா சைஸ்களில் உள்ளது கத்தரிக்காய். முகப்புத்தக நண்பர் மலரமுதன் அனுப்பிய விதையில் விளைந்தது.

    சுரைக்காய் பெயர் தெரியாது. எங்கோ கிடைத்த விதை. இம்முறை நிறையக் காய்த்துக் குலுங்கியது இது தான். பின்வேலியில் படர்ந்து வேலியின் பின்புறமாய் தொங்க, பின் வீட்டுக் கிழவி இரண்டு காய்களை வேலிக்கு மேலால் கொடியோடு தூக்கி வீசியிருந்தது. அதையும் மீறி இது காய்க்க, பிஞ்சிலேயே பிடுங்கி எறிந்து கிடந்தது.

    மூன்று வகையான பீட்ரூட்கள். வழமையான சாயம் நிறைந்த சிவப்புடன், தங்க நிறம், சாயமில்லாத வெள்ளை நிறம் என மூன்று வகைகள்.

    அதன் மேலே Turnip.

    நடுவில் பூசணி. வெட்டுவதற்கு ஆவா குறூப்பின் உதவி தேவைப்படலாம். அதுதான், வாள் தேவைப்படலாம்.

    அதன் இடப்புறம் பச்சை வெங்காயம். பல்லாண்டு வாழி. நிறையக் குட்டி போடும்.

    மேலே Dill. விதைக்காமலே அறுவடை செய்வது. முன்பு விதைத்து பூத்துக் குலுங்கி நிறைந்து தற்போது தானாகவே முளைப்பது.

    அடுத்து Lemon Balm. தேசிக்காய் மணம். தேநீருக்கு பயன்படும். இறைச்சிக் கறிக்கு தேசிக்காய்க்கு பதிலாகப் போடலாம் போல இருக்கிறது.

    அடுத்தது Kale. Black, Dinosaur, Italian Kale என இதற்கு பல பெயர்கள்! தற்போது இங்கே சத்துகள் நிறைந்த Super Food என்று பிரபலம் பெற்றது.

    குளிர் தொடங்கி விட்டது.

    தோட்டம் மெதுமெதுவாய் வாடத் தொடங்குகிறது.

    தோட்டம் பூராவும் நட்ட செவ்வந்திகள், பூ முடிக்க ஒரு சின்னக்காவுக்காக காத்திருக்கின்றன!

    Save Save

    Postad



    You must be logged in to post a comment Login