Recent Comments

    நாங்கள் சொல்வது உண்மைகளா?

    Truthகுஞ்சன்

    மனித வாழ்வு முறைப்படி எதிர்ப்பிலும், ஆதரிப்பதிலும்தான் உள்ளது. இன்று ஆதரிப்பதை நாளை எதிர்க்கின்றோம், இன்று எதிர்ப்பதை நாளை ஆதரிக்கின்றோம். இந்த உண்மையைச் சொல்ல நாம் கஷ்டப்படுகின்ற வியாதி எமக்குள் உள்ளது. உண்மையான வரலாறு எப்போது கிடைக்கும்? ஓர் நாட்டில் 1000 பேர் வாழ்கின்றோர் எனச் சொல்வோம். 400 பேர் முற்போக்கு, 400 பேர் பிற்போக்கு, 200 பேரும் வேறு போக்குகள். இந்த அனைத்துப் போக்குகளும் “உண்மை” எனும் “சொல்”லைத் தியானிப்பனவே. இந்தப் போக்குகள் போக்குகளைத் தேடாத மக்கள் மீது திணிக்கப்படுவது. எந்த விதமான போக்குகளையும் திணித்தல் கலையாக உள்ளது என்பதே என் தனி அபிப்பிராயம். போக்குகளின் படகுகளில் உண்மை பயணம் செய்தல் என்பது பொய்யா? அது பொய் இல்லை. அவைகளில் பொய்களும் பயணம் செய்வன என்பது உண்மை. இடதும், வலதும் முதலாளித்துவ நாடுகளின் “அரசியல் உண்மை”ப் படகுகள். இந்தப் படகுகளில் தாவித் தாவி விழுபவர்கள் தாம் உண்மையின் சுத்த புத்திரர்கள், புத்திரிகள் எனக் கத்துபவர்கள். பின்பு பதவி முடிந்ததும் அவர்கள் மீது வழக்குகள், அவர்களது சுவிஸ் களவான கணக்குகளும் தெரியவரும். உண்மையை நிச்சயமாக அறிய நாங்கள் சுவிஸ் போகவேண்டும். அங்கு சுலபமாக வெள்ளைப் பணங்களை வங்கியில் களவாகப் போடுதல் ஈசி. இந்த நாட்டில் களவுக் காசு சுத்தமானது மட்டுமல்ல, “உண்மை”யானதும் கூட. a-03சரி எப்படிக் களவுக் காசு இல்லாமல் சுவிஸுக் போவது? களவுக் காசு தேவையானால் இயக்கம் தொடங்குவது, அரசியலில் நிச்சயமாகத் தேசிய வாதம், இனவெறிவாதம் சொல்வது, தூள் விற்பது, ரிசீத் தராமல் பொருள்களை விற்பதற்காக கடைகளை நடத்துவது என்பது போன்ற நிறையப் பல. கடைத்துவம் நிச்சயமாக இலக்கியம்போல. இலக்கியத்துவத்திலும் கடைத்துவத்திலும் போலிகள் “உண்மை”யாக வாழ்கின்றன. உண்மையை வாழ முடியுமா? இந்த களவால்தான் எமது கண்டங்களில் போக்கிரிகளால் நிறைய அரசியல் நடத்தப்படுவதென்பது உண்மை. எப்படி உண்மையைப் பேசுவதாம்? கணவனின் உண்மைகள் மனைவிகளால் பொய்யாகப் பார்க்கப்படலாம். தூங்கும் கணவர்கள் தமது மனைவிகள் 5 நிமிடம் களைப்போடு பிந்தி வந்தாலும் அது வேலைக் களைப்பல்ல யாரோடும் கிடந்துவிட்டதால் தோன்றிய களைப்பெனக் கருதி இரவுகள் சண்டைக் களங்களாகும். தத்துவம் என்றாலும் பெரிய சண்டைகள். நிறையத் தத்துவஞானிகளை வாசித்துள்ளேன். ஹ்ம்ம்… உண்மையும் ஞானமும் எனக்குள் விழிக்கவில்லை. எப்படி உண்மைத்துவத்தை வாழ்வதாம்? நல்ல நண்பர்களோடு உண்மைத்துவத்தை வாழ முடியாது. நீ உனது நண்பரோடு உண்மையைச் சொல்லின், இந்த உண்மையை உனது நண்பர் தனது பிற நண்பருக்குச் சொல்லி உன்னைத் தட்ட நினைப்பார், பின் அவர் தமிழ் இலக்கியத்தின் முன்னோடியாகவும் பேய்க்காட்டுவார்… அவர் பின்பு பின் தமிழும் முன் தமிழும் பேசுவார்… “அட! நாரி உளையுது! கதிரை தாரும் தம்பி… அண்ணா… அண்ணா… அக்கா … ஆச்சி…” எனக்குத் கதிரை தந்தது ஆச்சி……. “ஆச்சி! எனது எழுத்துகள் உண்மையா?” என நான் கேட்கின்றேன். “அட! சுவிசுக்குக் கூட்டிக் கொண்டு போ. எனது வங்கியின் முன் உனக்கு உண்மை சொல்வேன்.” நான் ஆச்சியின் கன்னங்களில் மெதுவான முத்தம் இட்டேன். பின்பு சுவிஸ் கனவுகளோடு இரவுத் தூக்கம் வந்தது. a-02

    Postad



    You must be logged in to post a comment Login