Recent Comments

    மிகவும் அவசரமாய் தேவை! ஒரு தற்கொலைப் போராளி!

     

    Suicideமிகவும் அவசரமாய் தேவை

    ஒரு தற்கொலைப் போராளி

    அறியாப் பருவத்தில்

    அன்னையின் மடியிலிருந்து அடித்து இழுத்து வந்து துப்பாக்கியும் தேவனும் என மாயைகள் காட்டி அடிவயிற்றில் குண்டு கட்டி துடித்துச் சிதறும் போதும் விடுதலைக் கனவுக்கு விதையெனச் சொல்லி காட்போட் கல்லறைக்கு கற்பூரம் கொழுத்துவோம்

    எமது ஈழக் கனவை என்றும் தொடர்ந்திட எமக்கு மிகவும் அவசரமாய் தேவை ஒரு தற்கொலைப் போராளி

    எங்கோ தொலைவில் எதுவோ காரணமாய் எண்ணெயில் தோய்ந்து எரிதழலாய் கருக.. அறியாக் குடும்பம் ஏழ்மையில் உழன்றிடும்...

    அவர் பெயர் சொல்லி சுருட்டிய பணத்து மீதியில் எரிந்த இடத்தை என்றைக்கும் கல்லறையாக்கி எப்போதும் தொழுதிட

    எமக்கு வேண்டும் மிகவும் அவசரமாய் ஒரு தற்கொலைப் போராளி

    அடக்கி ஆளும் ஆக்கிரமிப்பாளனுக்கு அஞ்சா நெஞ்சனாய் பனங்கொட்டை எறிய...

    பொங்குதமிழில் பொங்கி எழுந்து கொடி பிடித்து கோசம் போட்டு வெள்ளை வானில் விடுதலை பெற்றிட...

    இறுதித்துளி இரத்தம் இருக்கும் வரைக்கும் செருப்பால் தன்னும் சீறி அடித்திட...

    வேண்டும் நமக்கொரு தற்கொலைப் போராளி

    குருதியில் குளித்த மாவீரர் பெயர் சொல்லி பிழைப்பு நடத்தியோர் செல்வத்தில் குளிப்பார்

    விடிவைத் தேட வீரத்தைப் பலியாக்கி வாழ்வைத் தொலைத்தவர் வாழ வழியின்றி தற்கொடை செய்வார்

    உடலையும் விற்பார்

    வாழ்வே சூனியமாய் சிறையிலும் வதைவார்

    விருந்து கொடுத்து விருதும் வழங்கியவர் வெள்ளைக் கொடியோடு மண்டியும் இடுவார்

    அவர் வழி தொடர்ந்து வேலையைக் குடுக்க நமக்கு

    மிகவும் அவசரமாய் தேவை ஒரு தற்கொலைப் போராளி

    வேள்விக் கிடாய் போல தாடியும் கடுக்கனும் சேர்ந்தே இருக்கும் மகன்களும் தொடையும் மார்பும் இடையும் பெரிதாய் கண்காட்சி வைக்கும் மகள்களும் கடைசிக்காலத்தில் வெல்பெயர் பணத்தில் வாழ வைக்கும் அம்மாவும் சேர்ந்தே வந்து... உம் தற்கொடைத் தியாகத்தால் மலரப் போகும் ஈழத்தில் நல்லூர் தேரோடு செல்பி எடுத்திட

    மிகவும் அவசரமாய் தேவை ஒரு தற்கொலைப் போராளி

    கூத்தாடிகளோடு குனிஞ்சு படமெடுத்து கூனிப்போன எம்மினத்தை மாற்றானுக்கு மண்டியிடாமல் தலை நிமிர வைத்திட

    தப்பாமல் வேண்டும் ஒரு தற்கொலைப்போராளி

    மாவீரர் தினம் கிட்டடியில் வருகுது

    சனத்தை வரப்பண்ணி விளக்கும் மாலையும் றிசைக்கிள் பண்ணி காசு உழைத்திட

    மிகவும் அவசரமாய் தேவை ஒரு தற்கொலைப் போராளி

    ஊருக்குப் போனால் வெள்ளைவான் பிரச்சனையாம் வெளியே தெரியாமல் மாற்றுப் பெயரில் முகப்புத்தகத்தில் மாவீரர் கனவு பலிக்கும் என வீரவணக்கம் செலுத்த நமக்கு

    மிக மிக அவசரமாய் தேவை ஒரு தற்கொலைப் போராளி

    Save Save

    Postad



    You must be logged in to post a comment Login