Recent Comments

    புறநானூறு காட்டும் சங்க மறவர் போர்வெறி

    Pro.Velupillai(போரின் அழிவுகளை தமிழினத்திற்கு விபரிக்க வேண்டிய அவசியமேயின்றி, அனைத்துத் தமிழர்களும் அதன் கொடூரத்தை அனுபவித்து உணர்ந்துள்ளனர். ஆனால், தீர்க்கதரிசனமாக இந்த போர் ஏற்படுத்தப் போகும் அழிவை முன்கூட்டியே எமது சமூகத்திற்கு தெரிவித்தவர்கள் மிகச் சிலரே. தாயகம் கால் நூற்றாண்டுக்கு முன்பாக இந்தப் போர் எமது இனத்திற்கு ஏற்படுத்தப் போகும் அழிவை தீர்க்கதரிசனமாக முன்கூட்டியே அறைகூவி வந்தது. துரோகிகளாக முத்திரை குத்தப்பட்ட நாங்கள் சொன்ன தீர்க்கதரிசனங்கள் இன்று உண்மையாகக் கண் முன்னே தெரிந்தாலும், அதை வீம்புக்காக ஏற்றுக் கொள்ள மறுப்பவர்களாகவே எமது இனம் இன்றும் இருக்கிறது. எம்மைப் போலவே, எமது இனத்திற்கு அழிவை ஏற்படுத்தும் போரைப் பற்றிய முன்கூறல்களை, எங்களைப் போல மூர்க்கமாகக் கூறாவிட்டாலும், எமது இனத்திற்கு புரிய வேண்டும் என்பதற்காக சூசகமாகவேனும் சொன்ன அறிஞர்களின் கட்டுரைகளை நாங்கள் அப்போது தேடிப் பிரசுரித்திருந்தோம். சமீபத்தில் காலமான தமிழ்ப் பேராசிரியர் கலாநிதி ஆ.வேலுப்பிள்ளை அவர்கள் எழுதிய கட்டுரையை, தாயக எழுத்தாளரான எஸ்.கௌந்தி தொகுத்து, 22 வருடங்களுக்கு முன்பாக,30.7.1993 வெளிவந்த தாயகத்தில் பிரசுரித்திருந்தோம். புறநானூற்றுக் காலத்தில் சங்க மறவர்களின் போர்வெறி பற்றியதாக பேராசிரியரின் கட்டுரை இருந்தாலும், அது சம காலத்தில் தமிழ் இயக்களுக்கு இடையிலான மோதல், தனிமனிதனின் தலைமை வெறி போன்றன பற்றிய விமர்சனமாகவே நாங்கள் அதைக் கருதியிருந்தோம். தற்போது வாசிக்கும் போது, இன்று யுத்தம் முடிந்த நிலையில் எங்கள் இனம் படும் அவலத்தை அச்சொட்டாக அன்றே விபரிப்பது போல இருக்கிறது. அன்றைய புறநானூற்று மன்னர்கள் பற்றிய விவரணம், நம் புறநானூற்றுத் தலைவனுக்குப் பொருந்துகிறது. ஒரு போர்வெறியனின் தலைமை வெறிக்கு இளம் தலைமுறை பலியிடப்படுவதால் சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகள் பற்றி பேராசிரியரின் கட்டுரை, புறநானூற்றுப் பின்னணியில் புலப்படுத்துகிறது.) பேராசிரியரின் மறைவு குறித்த நினைவாக மீண்டும் எஸ்.கௌந்தியின் முன்னுரையோடு இக்கட்டுரை மறுபிரசுரமாகிறது.

    மன்னர்கள் தமிழ் வாலிபர்களைப் பலியிட்டனர்

    புறநானூறு காட்டும் சங்க மறவர் போர்வெறி

    முனைவர் வேலுப்பிள்ளை,முனைவர் தாமசுபர்ரோ,பொன்.பூலோகசிங்கம்(1964)பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை

    (தமிழ்த் துறைத் தலைவர், யாழ்.பல்கலைக்கழகம்)

    தமிழின் காத்திரமான பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை இந்த வாரம் காலமானார். இவரது இலக்கிய அறிவும், விமர்சனப் போக்கும் புதிய வாசிப்புகளைப் பலருக்குத் தந்தன. இவரின் தமிழ் ஆய்வினால் மன்னர்கள் தமிழ் வாலிபர்களைக் கொலைசெய்தனர் என்ற சேதி  இவருடைய “தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும்” என்ற நூலை 20 வருடங்களுக்கு முன்னர் வாசித்தபோது கிடைத்தது.  அவருக்கு அஞ்சலிகளைக் கொடுக்குமுகமாக மீள் பிரசுரம் செய்யப்படுகின்றன. எஸ்.கௌந்தி 6/11/2015.   (தமிழ் இலக்கிய வரலாற்றை ஐந்து காலங்களாகப் பகுத்து பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை எழுதிய 'தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும்' என்ற நூல் வரலாற்று ஆய்வாளர்களுக்கு உதவும் மிகச் சிறந்த உசாத்துணை நூல் மட்டுமல்ல, சாதாரண வாசிப்பிற்கும் இலகுவானது. பேராசிரியரின் வரலாற்றுப் பார்வை ஆழமானது, அகலமானது மட்டுமல்ல துணிச்சலானதும் கூட. பிரஸ்தாப ஆய்வு நூலில், தமிழர்களினது இயற்கை நெறிக்கால வாழ்வியலில் போரினது யதார்த்தம் பற்றிப் பேராசிரியர் எழுதியவைகளே இங்கு மறுபிரசுரம் செய்யப்படுகின்றன. எமது சமகால போர் யதார்த்தத்தை விளங்க உதவும் எனலாம். மறுபிரசுரத்திற்கான தலைப்பு பேராசிரியருடையதல்ல, தொகுப்பாளருடையது. எஸ்.கௌந்தி 30/7/1993) சங்க காலத் தமிழ்நாட்டில் மன்னர் பலர் இருந்து பல போர்களில் ஈடுபட்டனர். சங்க காலத்திய வள்ளல்களுட் பெரும்பாலோர் மன்னராக இருந்திருக்கின்றனர். அக்காலத் தமிழகத்திலே சேர, சோழ, பாண்டிய மன்னர் குலங்கள் மேம்பட்டிருந்தன. சேர,சோழ குலங்களில் ஒரே காலத்திற் பல்வேறு மன்னர் பல்வேறு பகுதிகளிலிருந்தாண்டனர். வௌ;வேறு பகுதிகளிலிருந்தாண்ட சோழ குலத்து மன்னர் இடையிடையே ஒருவரோடொருவர் பகைத்துப் பொருதினர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சிற்றரசர் பலர் ஆங்காங்கிருந்து பணிந்து வாழ்ந்தனர் எனக் கருதுவதற்கு புறநானூற்றுச் செய்யுள்கள் இடமளிக்கவில்லை. மன்னர் பலர் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆண்டமையால் புறநானூற்றுக் காலத் தமிழகத்தை ஆண்டவர்கள் பெரும்பாலும் குறுநில மன்னர்களெனலாம்.
    சிறுசிறு நிலப்பரப்புகளை ஆண்ட மன்னர்களுக்கு உலகம் முழுவதிலும் தம் ஆணையைச் செலுத்த வேண்டும் என்ற ஆசை மடடுமே மிதமிஞ்சி இருந்திருக்கிறது. அதனாலேயே அக்காலத் தமிழகமெங்கும் போர்கள் தொடர்ந்து நடைபெற்றிருக்கின்றன. வென்று மேம்படும் ஆசையால் உந்தப்பட்டு மன்னர் மோத, அவராட்சியில் அடங்கிய மக்களும் மோதினர்.
    புறநானூற்றுச் செய்யுட்களுட் பெரும்பாலானவை போரைப் பற்றிய செய்திகளைக் கூறுவன. சிறுசிறு நிலப்பரப்புகளை ஆண்ட மன்னர்களுக்கு உலகம் முழுவதிலும் தம் ஆணையைச் செலுத்த வேண்டும் என்ற ஆசை மடடுமே மிதமிஞ்சி இருந்திருக்கிறது. அதனாலேயே அக்காலத் தமிழகமெங்கும் போர்கள் தொடர்ந்து நடைபெற்றிருக்கின்றன. வென்று மேம்படும் ஆசையால் உந்தப்பட்டு மன்னர் மோத, அவராட்சியில் அடங்கிய மக்களும் மோதினர். புறநானூற்றுக் காலத்திற் புகழும் பெருமையும் வீரத்தின் வழி வந்தன. 'வெற்றி அல்லது வீரமரணம்' என்ற நிலைக்கு ஒரு தனிக்கவர்ச்சி இருந்ததாகத் தெரிகிறது. மன்னர் தலைமையில் ஒன்று கூடி ஒற்றுமையாக நின்று போராடுவதிலும் மன்னனுக்கு தம் சேவை தேவையென்றுணர்வதிலும் புறநானூற்றுக்கால மக்கள் மகிழ்ந்தனர். தம்முடைய நாட்டை ஆபத்துச் சூழ்ந்துள்ள நிலையிலே தமது தனிப்பட்ட துன்பங்களையும் கோபதாபங்களையும் மறந்து, நாட்டின் நன்மை கருதி ஒன்றுபட்டு உழைக்க ஏற்பட்ட சந்தர்ப்பம், போரால் ஏற்படுகின்ற நன்மைகளில் ஒன்று. தம்முடைய மனத்திலிருந்து தீய இயல்புகள் யாவும் பொருந்தியவராக எதிரிகளைப் பாவித்து அவரை அழிக்க முயலும் போது, வீரருக்கு சுயதிருப்தியும், தம்மவர் மேல் பற்றும் ஏற்படுத்துகின்றன. எனவே மன்னர்களுக்கு இடையில் ஏற்பட்ட போரில் மக்களும் முழுமனதோடு ஈடுபட்டனர்.

    புறநானூற்றுக் காலத்திற் புகழும் பெருமையும் வீரத்தின் வழி வந்தன. 'வெற்றி அல்லது வீரமரணம்' என்ற நிலைக்கு ஒரு தனிக்கவர்ச்சி இருந்ததாகத் தெரிகிறது. மன்னர் தலைமையில் ஒன்று கூடி ஒற்றுமையாக நின்று போராடுவதிலும் மன்னனுக்கு தம் சேவை தேவையென்றுணர்வதிலும் புறநானூற்றுக்கால மக்கள் மகிழ்ந்தனர்.

    போரால் நாடு அடைந்த சீர்கேட்டை வெளிப்படையாகக் கூறும் செய்யுட்கள் சில. மறைமுகமாகச் சுட்டுவன வேறுசில. 'பகைவருடைய நாட்டைச் சுடும் நெருப்பினால் உன் தலைமாலை வாடுவதாக' என்று மன்னன் வாழ்த்தப்பட்டான். பகைவர் ஊரைத் தீயிலிட்டு, அவ்வெளிச்சத்தில், ஊர்மக்கள் அழுது ஓலமிடக் கொள்ளையடித்துப் பகைவர் நாட்டைச் சிதைத்தான் மன்னன். யமன் உயிர்களைக் கவர்வது போல, பகைவரை அழித்தவன் நெடுஞ்செழியன். பகைவருடைய அரணை முற்றுகையிட்டு, நீரில்லாமல் மக்கள் வாடவும், பாலில்லாமற் குழந்தையலறவும் கொடுமை செய்யப்பட்டது. போர்கள் நடைபெற்ற போது, பகைவர் ஊர்களுக்கு தீ வைக்கப்பட்டது. கொள்ளையடிக்கத்தக்க செல்வங்கள் கொள்ளையிடப்பட்டன. எடுத்துச் செல்ல முடியாத பொருட்கள் அழிக்கப்பட்டன. அல்லது வெளியில் வீசப்பட்டன. தோற்ற பகைவர் அவமானப்படுத்தப்பட்டதைப் பல செய்யுட்கள் எடுத்துப் பொழிகின்றன. பகைவருடைய அரணகத்தேயுள்ள தெருக்களிலே கழுதையை ஏர் பூட்டி உழுது பாழ்படுத்திய பெருமை, பகைவருடைய நீர் நிலைகளில் யானையை விட்டு அவற்றைச் சிதைத்த வீரம், விளைந்த பயிர்களைக் குதிரை பூட்டிய தேரால் உழக்கிக் கெடுத்த சிறப்பு என்பன போற்றப்பட்டது.

    போர் நிகழுங் காலத்தில் அப்போரில் பங்குபற்றுவோரின் உணர்ச்சி மரத்து விடுகின்றது என்ற உண்மைக்கு சங்க காலம் விதிவிலக்கல்ல என்பது தெரிகிறது.

    புறநானூற்றுப் பாடல் ஒன்று வருணிக்கும் களவேள்வி குரூரமானதாகக் காணப்படுகிறது. வெட்டப்பட்ட பகைவர் தலைகளையே அடுப்பாகக் கொண்டு, உத்திரமே உலை நீராகத் தசை, மூளை முதலாயினவற்றை இட்டுத் தோள்களைத் துடுப்பாகக் கொண்டு துழாவி அடப்பட்ட உணவால் அடுகளத்தின் கண்ணே பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் அத்தகைய வேள்வியைச் செய்தான். போர் நிகழுங் காலத்தில் அப்போரில் பங்குபற்றுவோரின் உணர்ச்சி மரத்து விடுகின்றது என்ற உண்மைக்கு சங்க காலம் விதிவிலக்கல்ல என்பது தெரிகிறது.

     பிறரெல்லாம் தமக்கு அடி பணிய வேண்டும் என்ற அவாவால் உந்தப் பெற்று அக்கால மன்னர், தமிழ் வாலிபர்களைப் பலியிட்ட கதையே புறநானூற்றிற் பெரும்பான்மையாகக் கூறப்படுகின்றது.

    போரால் ஏற்பட்ட அழிவுகளை எடுத்துக் கூறும் புறநானூற்றுச் செய்யுட்கள் இன்னும் பல. புறநானூற்றிற் காணப்படும் போர்களுட் பெரும்பாலானவை தமிழ் மன்னகளுக்கிடையே நடைபெற்றவை. கொலையையும் கொள்ளையையும் உள்ளடக்கியதே போர். போரிற் கொலையையும் கொள்ளையையும் நிறையச் செய்பவனே வீரன் எனப் போற்றப்படக் கூடிய சூழ்நிலை நிலவியது. மன்னராற் போற்றி பரிசில் வழங்கப்பட்ட வீரரும் இத்தகையோரே. பிறரெல்லாம் தமக்கு அடி பணிய வேண்டும் என்ற அவாவால் உந்தப் பெற்று அக்கால மன்னர், தமிழ் வாலிபர்களைப் பலியிட்ட கதையே புறநானூற்றிற் பெரும்பான்மையாகக் கூறப்படுகின்றது. வெற்றி தோல்வி எவரடைந்த போதிலும் இரு கட்சியிலும் சிந்தியது தமிழ் இரத்தமே. போர் என்றாற் கொலையும் கொள்ளையும் ஒரு புறம், கண்ணீரும் இரத்தமும் மறுபுறம். பகைவருந் தமிழரே என்ற ஈவு இரக்கங் காட்டி நடந்ததற்கு புறநானூற்றிற் சான்றரிது. தமிழரில் ஒரு சாரார் இரத்தஞ் சிந்த, மற்றொரு சாரார் வெற்றி விழாக் கொண்டாடினர். போர்க்களங்களில் வீரர் கொல்லப்பட்டு இறந்து கிடப்பதைப் பாடும் செய்யுட்கள் பல. போர்வெறி காரணமாக மன்னரும் படை வீரரும் மாள, அவர்களுடைய பெண்டிர் அக்களத்தே சென்று மாண்ட கணவரைத் தழுவித் தம்முயிரை நீக்குதலைப் புறநானூற்றுச் செய்யுளொன்று குறித்துள்ளது. மன்னரும் படைவீரரும் மாண்டு விட்டதனால், நாட்டின் கதி என்னவாகுமோ என்று அங்கலாய்க்கிறது அடுத்த செய்யுள். காதலர் இறந்த துயரம் பெறாது கனையெரி மூழ்கினர் மங்கையர் என்கின்றது மற்றொரு செய்யுள். இயற்கை நெறிக் காலத்திலேயே கணவனை இழந்த பெண்கள் கைம்மை நோன்பு நோற்றுத் தம்மைத் துன்புறுத்தியவாற்றைப் புறநானூற்றுச் செய்யுட்கள் தெளிவாக் குறிக்கின்றன. கணவனையிழந்த பெண்டிர் அறிவு மயங்கி, அழுகை மிக்குக் கூந்தலைக் கொய்து கைம்மை நோன்பு தொடங்கினர்.

    வெற்றி தோல்வி எவரடைந்த போதிலும் இரு கட்சியிலும் சிந்தியது தமிழ் இரத்தமே. போர் என்றாற் கொலையும் கொள்ளையும் ஒரு புறம், கண்ணீரும் இரத்தமும் மறுபுறம். பகைவருந் தமிழரே என்ற ஈவு இரக்கங் காட்டி நடந்ததற்கு புறநானூற்றிற் சான்றரிது. தமிழரில் ஒரு சாரார் இரத்தஞ் சிந்த, மற்றொரு சாரார் வெற்றி விழாக் கொண்டாடினர்.

    வீரவாலிபர்களைப் பெருந் தொகையாகப் பலி கொடுக்கும் சமுதாயம் அப்பலியால் இளம் பெண்களைப் பெருந்தொகையாகக் கைம்மை நோன்பில் புகச் செய்தல் இயல்பாகும். அத்தகைய சமுதாயத்திலுள்ள மக்கள் தம் வாழ்க்கையில் சலிப்படைதல் உண்டு. வாலிபர்களும் இளம் பெண்களும் சமுதாயத்தில் முதியோரையும் குழந்தைகளையும் காப்பாற்றிச் சமுதாய ஒழுங்கை நிலைநாட்ட வேண்டியவர்கள். அவர்கள் போரின் காரணமாக அழிவுப் பாதையில் செல்வது தெரிய வருகிறது. ஆ.வேலுப்பிள்ளை(கல்வெட்டுக் களப்பணியில்)போரால் சமுதாயத்திற்கு ஏற்படக் கூடிய கேடுகள் பற்றி அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் நன்கு உணர்ந்திருக்கவில்லை என்பது புறநானூற்றுக் கால வீரர்கள் கூற்றுக்கள் சிலவற்றினாலும் வீரத்தாய்மார்கள் கூற்றுக்கள் சிலவற்றினாலும் புலப்படுகிறது. சமுதாயம் இடம் கொடுத்திராவிட்டால் மன்னர் போர் செய்தலையே தொழிலாகக் கொண்டு வாழ்ந்திருக்க முடியாது. ஆனால் மன்னர் ஏவியதாலேயே போர்கள் பெரும்பாலும் நடைபெற்றன. போரால் ஏற்படும் அழிவு அதனால் ஏற்படும் நன்மையிலும் அதிகம் என்பது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. போர் ஒரு கோணத்திலிருந்து பார்க்கும் போது பயனுள்ளதாகத் தெரிவதாற்றான் இது இன்னும் உலக வாழ்க்கையிலிருந்து அற்றுப் போகவில்லை.

    சமுதாயம் இடம் கொடுத்திராவிட்டால் மன்னர் போர் செய்தலையே தொழிலாகக் கொண்டு வாழ்ந்திருக்க முடியாது. ஆனால் மன்னர் ஏவியதாலேயே போர்கள் பெரும்பாலும் நடைபெற்றன.

    ஆனால் போர் நடக்கும் காலத்திலும், போர் முடிந்த அண்மைக் காலத்திலும் மக்கள் மனம் அமைதியை நாடுகிறது. போரால் ஏற்படும் அழிவு உலகில் போரேற்படுவதையே இல்லாமல் செய்து விட வேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்குகிறது. படம் 1. முனைவர் தாமஸ் பர்ரோ, பொன் பூலோகசிங்கத்துடன் படம் 2. பேராசிரியர் கல்வெட்டுக் களப்பணியில்    

    Postad



    You must be logged in to post a comment Login