Recent Comments

    ரோபர்ட் முகாபே : ஒரு கறுப்பு கிட்லரா?

    thayagam featured-Mugabeக.கலாமோகன்

    35 வருடங்கள் ரோபர்ட் முகாபே ஆட்சியில் இருக்கின்றார். இந்த ஆட்சி நிச்சயமாக ஜனநாயக ஆட்சியாக இருக்கும் எனச் சொல்லமுடியாது.  ஜனநாயகம் என்பது  பல நாடுகளில் விக்கி விக்கித்தான் வாழ்கின்றது. ஆபிரிக்காக் கண்டத்தில் இந்த அரசியல் கொள்கையைக் காணுவது கடினம். கறு ப்புக் கண்டத்தின் நாடுகளது  ஜனாதிபதிகள் சாகும்வரை தங்கள் பதவியைப் பிடிக்கும் போக்கு உள்ளது.

    கமேருன் ஜனாதிபதி Paul  Biya  30 வருடங்களுக்கு மேல். அவர் தனது நாட்டை நடத்துவது வெளிநாடுகளில் இருந்துதான். சில ஜனாதிபதிகள் சாகும் வயதுக்கு வந்தாலும் ஜனநாயகம் பிறத்தல் பொய். அவர்களது பிள்ளைகளே பதவியைப் பிடித்துக் கொள்வார்கள்.

    இது ஆபிரிக்காவின் தலைவிதி. இந்தக் கண்டத்தில் புதிய எழுச்சிகளை, பதவிகளில் இருப்போர் அழித்து வருகின்றனர். முகபேயும் சாகும் வரை தனது பதவியில் இருப்பது முடிவு, அவருக்குப் பின் அவரது மனைவி…  Equatorial கினியா ஆவின் ஜனாதிபதியான  Teodororo Obiang  Nguema  Mbasogo 38 வருடங்கள் மக்களினதும், மாற்றுக் கட்சிகளினதும் உரிமைகளை நசுக்கிக் கொண்டிருக்கின்றார்.  Gabon  இல் Omar  Bongo  30 வருடங்களைத் தாண்டியவர், காலமாகிவிட்டார், அவர் மகன் பதவியில். Omar  Bongo பிரான்சின் “அரசியலையும்” நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆம், தனது லாபங்களுக்காக மிகப் பெரிய பிரான்ஸ் அரசியல்வாதிகளை ஆட்டிப் படைத்தவர்.

    Congo விலும் Gabon  நிலையே. இந்த நாட்டில் நிறைய மனிதக் கொலைகளும் நடக்கின்றது,  மிருகக் கொலைகளும் நடக்கின்றன.

    photo-1-robert-mugabe-sleepsஆபிரிக்க உலகின் நீள் பதவி வெறிகள் மனிதக்  கலாசாரத்தை மிகவும் வெ ருட்டிக்கொண்டுள்ளன, இந்தக்  கண்டத்தின் பொருளாதாரப் பெறுமானங்களை சாக் கிடங்கில் தள்ளுகின்றன. இந்த நீள் ஆட்சிகளால் ஆபிரிக்கர்கள் மீளவும் அடிமைகளாக  வருகின்றனர், அகதிகளாக வந்து கடல்களிலும் நிறையப்பேர் சாகின்றனர்.

    ரோபர்ட் முகாபே, காலனித்துவ ஆட்சியை எதித்தவர். தனது அரசியல் “மார்க்சிஸம்” என்று சொல்லி தன்னை “மார்க்ஸிட், லெனினிஸ்ட், மாஒஇஸ்ட்” என்று பிரகடனப்படுத்தியவர். நான் மார்க்சிசத்தை நிறைய விரும்புகின்றவன். ஆனால் இவர்  தனது நாட்டில் பிறந்த வெள்ளையர்களை எதித்துள்ளார். இது இவரது இனவாதம். இவர் கறுப்பு மக்களையும் வறுமையில் வாடுகின்றார். இந்த வாதத்தை வைத்துக்கொண்டு மார்க்சிஸ்ட்  ஆக முடியாது.

    இன்று மீண்டும் ரோபர்ட் முகாபேயின் படத்தைப்  பார்த்தேன். அது கறுப்பு  ஹிட்லர்போல பட்டது.Mugabe

     

    Save

    Postad



    You must be logged in to post a comment Login