Recent Comments

    மத்தியதரைக் கடல் பெரிய சுடலையா?

    mediterraneanக. கலாமோகன்

    மிகவும் அண்மையிலே அந்நியர் வெளியால் வருவதில் உள்ள நெருக்கடிகள் மீது எழுதியிருந்தேன். இந்த வாரத்தில் மத்திய தரைக் கடலில் கிடடத்தட்ட இரண்டு படகுகள் சரிந்ததில் 800 க்குமேல் காலமகியுள்ளனர். இது கொடுமையான செய்தி. இறப்பு கொடுமையானது, இறந்தவர்கள் இழப்பும் அதிகமானது. அண்மைக் காலங்களாக மத்திய தரைக் கடல், நாடு கடக்கும் பகுதியாக உள்ளது. வறுமை நாட்டின் மக்கள் இந்தக் கடலால் அபாயக் கடப்புகளை நடத்துகின்றனர்.Refugees3

    பிரான்சு பத்திரிகை Le Point இன்று தரும் குறிப்பில் இத்தாலி அரசு படகின் பொறுப்பாளர்களான 2 பேரைக் கைது செய்துள்ளது என்கின்றது. ஒருவர் துனிசியர் , மற்றவர் சிரியர். இவர்கள் இந்த அந்நியர்களின் கடலுள் பலிகளுக்குக் காரணமானவர்கள் எனக் குறிப்பிடப்படுகின்றது. Le Monde பத்திரிகையின் குறிப்புகளின்படி , 2013 இல் Lampedusa இல் பலியாகினோர் 366 வெளிநாட்டவர்கள். இந்த ஆண்டில் மட்டும் 35.000 பேர் வெளியே வந்து 1600 பேர் காலமாகினர் என்று UNHCR (United Nations High Commissioner for Refugees) தெரிவிக்கின்றது. IOM (International Organization for Migration) சொல்கின்றது 2000 ஆம் ஆண்டிலிருந்து 22.000 பேர் காலமாகியுள்ளனர் என்று. 2 510 000 கிலோ மீட்டர்களைக் கொண்ட மத்திய தரைக்கடலை எப்படிக் கண்காணிப்பது?Refugees4 வெளியால் வருவோர் நிறைய கடல்களில் உயிரிழப்பைப் பெறுதல் ஐரோப்பிய மக்களையும், ஐரோப்பிய நாடுகளையும் பாதித்துள்ளன. இத்தாலியில் சில மாதங்களின்முன் நடந்தன நிறைய இரக்க கூட்டங்கள். வெளியால் வருவோர் ஐரோப்பிய அறிவையும், தத்துவத்தையும் படிப்பதற்காகவல்ல. அவர்கள் தமது வறுமையைக் கடக்கத்தான் தமது நாடுகளைக் கடக்கின்றனர். வெளியால் வருவோர் இப்போதும் ஐரோப்பாவினை சொர்க்கம் என்றே நினைப்பதுண்டு.படித்தோரும் படிக்காதோரும் வெளியால் தள்ளப்படும் வணிகத்துள் சாம்பலாகுகின்றனர். அவுஸ்திரேலியா தமது நாட்டுக்குள் வருவோரை சிறு தீவுகளில் தள்ளுகின்றது. இது நிச்சயமாக மனித உரிமைகளுக்கு விரோதமானதுதான். இந்த நாட்டில் பிறந்த அபோர்ஜியன்களையும் இது இன்றும் அந்நியராகப் பார்த்துக்கொண்டுள்ளது.Refugees2 பிரான்சில் மீண்டும் இறுக்கமான இடத்சாரித் தத்துவத்தை அழைக்கும் அரசியல்வாதியான Jean-Luc Mélenchon, இந்த இழிவுக்கு ஐரோப்பாவே காரணம் எனச் சொல்கின்றார். “ஐரோப்பிய அரசுகள் தமது நலன்களுக்காக ஏழை நாடுகளில் சந்தைகளைத் திறப்பதால் அங்கு உள் உற்பத்திகள் குறைகின்றன, விவசாயமும் பாதிக்கப்படுகின்றது. இந்த நிலைதான் இந் நாடுகளின் மக்களை வெளியால் போக வைக்கின்றது” என்கின்றார். “ஆபிரிக்காவுக்கு ஐரோப்பா தள்ளும் சுதந்திர சந்தை மோசமானது, இதுதான் கடல்களில் ஏழைகளைத் தள்ளுகின்றது” எனும் இவரது குறிப்பு மிகவும் முக்கியமானது. இது சந்தை விசயமும், நிறையக் கோடிகளைக் களவாடும் ஏயன்சிகளின் விவகாரமுமாகும். மத்திய தரைக் கடல் இன்று பேசுமானால் நாங்கள் நிறைய உண்மைகளை அறிவோம்.

    Postad



    You must be logged in to post a comment Login