Recent Comments

    இந்தோனேசியா: Joko Widodo, ஓர் கொலையாளி

    Sukuக.கலாமோகன்

    இன்று 7 அந்நியர்களையும், ஒரு இந்தோனேசியப் பெண்ணையும், இந்த அரசின் ஜனாதிபதியான Joko Widodo கொலை செய்துள்ளார். எனது கடைசிப் பக்கம் மீது மரண தண்டனைக் கொடுமையைப் பற்றி எழுதி இருந்தேன். சில தினங்களில் நீதியின் பெயரால் கொலைகள் இந்தோனேசியாவில். Joko Widodo தான் இந்தக் கொலையைச் செய்தார். இவருக்கு மரண தண்டனை கிடைக்குமா? இந்தத் தண்டனை இவருக்கு வழங்குவது என் கோரிக்கை இல்லை. ஆனால் எனது கலாசாரத்துள் இவரைக் கொலையாளி என்று பார்க்கின்றேன். மரண தண்டனைகளை சுவாசிக்கும் ஒபாமாவுக்கு இப்போது சுகமாக இருக்கும் என்பது சிறு குறிப்பு.Time பத்திரிகை Joko Widodo வை “இந்தோனேசிய ஒபாமா” என்றும் புகழ்ந்ததுண்டு.Myuran Sukumaran Joko Widodo மீது நிறையைக் குறிப்புகளை செய்திகளில் பார்க்க முடியாது. கொலை வெறியை உருவாக்கும் எதிராக எப்படி எழுதுவது? 2014 இல் தான் இவர் பதவிக்கு வந்தார். இவருக்கு எதிரியாகப் போட்டியிட்ட பழைய ஜெனரல் Prabowo Subianto, இவர் தேர்தலில் ஊழல்களைச் செய்தார் என்று சொன்னாலும் பதவியைப் பெற்றார். Sukumomஆம் Rock இல் அல்ல, இவருக்கு hard-rock இல் நிறைய இவருக்கு விருப்பமாம். இன்று நடந்த கொலைகளை கலைகளாக்க முடியுமா? ஆஸ்திரேலியா, பிரேசில், பிரான்ஸ் போன்ற நாடுகளும், உலகின் பல மனிதாபிமான நிறுவனங்களும் கெஞ்சிக் கேட்டவேளைகளில், இந்த hard- Rock பீதி பிடித்தவருக்கு மனிதக் கருணை வரவேயில்லை. ஆம் இவர் hard ஆகவே இருப்பது பெரிய உண்மை. இந்தக் கருணை இல்லாதோர் கைகளில் தாம் அரசியல் நிச்சயமாகக் கைதிகளாக உள்ளது.INDONESIA AUSTRALIA DEATH ROW 2 அவுஸ்ரேலியர்கள், 1 பிரேசிலியன், 4 நையீரியர்கள், 1 இந்தோனேசியர் கொல்லபட்டுள்ளனர். மியூரன் சுகுமாரன் தமிழர். இவர் ஆஸ்திரேலியாப் பிரஜை. இந்த சுகுமாரன் போதைக் கடத்தலில் இருந்தும், சிறைக்குள் போனதும் திருந்த முடிவேடுத்துளார். அவர் ஒவியராக வந்துள்ளார். சிறைகளுள் போவோர் திருந்த நினைக்கும் நினைவுகளைக் கவனமெடுக்காமல், கொலைகளைக் கவனமெடுக்கின்றது எமது குப்பைத் தனமான அரசியல் போக்குகள்.Joko Widodo பிரான்சு Libération பத்திரிகையில் பணி புரியும் இந்தோனேசியரான Gurvan KRISTANADJAJA இன்று எழுதிய கட்டுரை உலக மரண தண்டனைகள் மீதான காத்திரமான செய்திகளைத் தருகின்றது. Chan இந்தத் தண்டனைகள் கொடுமையானவை. மிகவும் பெரிய நாடு எனக் கருதப்படும் அமெரிக்காவிலும் இது அழியவில்லை. இன்று இந்தோனேசியாவில் இறந்தோருக்கான அஞ்சலிகள் நிச்சயமாகத் தேவை.

    Postad



    You must be logged in to post a comment Login