Recent Comments

    விண்ணிலே பறக்க வைத்த விஞ்ஞானி !

     

    Kalam2வனிதா தேவா

    கனவுகளை நனவாக்கி விண்ணிலே பறக்க வைத்த விஞ்ஞானி ! எளிமையின் படி ஏறி சிகரம் தொட்ட செம்மல் ! ஆசிரியத்துவத்தின் இலக்கணம் ! அறிவுச் சுடர் ஏற்றிய விடிவெள்ளி ! வாழும் வழி வகுத்து வாழ்ந்து காட்டிய மகான்! இன,மத ,மொழி கடந்து மனிதம் படைத்த மாமேதை! உயரிய சிந்தைகளை உலகுக்கு விதைத்த வித்தகன் ! உலக அரங்கிலே தமிழுக்கு ஒளி ஏற்றிய தமிழ் மகன் அவனி அழகுற அமைதி நிலைபெற உறுதி மொழி வழி மொழிந்த அமைதிப்புறா ! நாமும் பகர்கின்றோம் உறுதி மொழி ! அன்பில் வளர்வோம் அறிவில் உயர்வோம் பசுமை படைப்போம் புது உலகம் காண்போம்

    உம் கனவுகளை நனவாக்கி நிலைபெறும் அமைதியில் சொர்க்கம் காண்போம் !

    Postad



    You must be logged in to post a comment Login