Recent Comments

    அப்பவே சொன்னேன், கேட்டியா!

    snail38ஒரு பூந்தோட்டக் காவல்காரனின் நாட்குறிப்பிலிருந்து! (5)

    அட, நீங்க ஒண்ணு! இது ஒன்றும் அரசியல் தீர்க்கதரிசனம் பற்றியதல்ல. எங்கள் தீர்க்கதரிசனத்தின் பெருமையை நாங்களே சொல்ல தன்னடக்கம் விடுவதில்லை. மற்றவர்கள் சொல்வார்கள் என்று பார்த்தால், 'இப்படியெல்லாம் சொன்னார்களே!' என்று யாரும் சொல்வதாயும் காணோம். இல்லாவிட்டால், 'அதெல்லாம் இப்போ எதற்கு?' என்று இன்னொரு கூட்டம்! தமிழர்கள்! எந்தக் காலத்தில் மனம் நிறைந்து மற்றவர்களைப் புகழ்ந்தார்கள்? எல்லாமே தங்களைப் பற்றிய பெருமைப் பீற்றல் தான்! அல்லது உண்மை தெரியாமல் ஈரச்சாக்குப் போட்டு அமுக்கல்! உண்மை தெரிந்து விடக் கூடாது என்பதில் தமிழனுக்கு இருக்கும் அக்கறை வேறு யாருக்கும் இருக்காது! அதுவும் தனக்கு, தன்னைப் பற்றிய உண்மை! அதிருக்கட்டும். சப்ஜக்ட்டுக்கு வருவோம்!

    பருவத்தே பயிர் செய்!

    படிச்சுப் படிச்சு சொல்லியும்... ரொறன்ரோவில் மே மூணாம் வாரத்தின் பின்னர் தான் நம்ம ஊர் மரக்கறிகள் நாட்ட வேண்டும், அதற்கு முன்பாக அவ்வப்போது கால நிலை வெப்ப வலயம் போல கொதித்தாலும், திடீரென்று காலநிலை காலை வாரும் என்று! திடீரென்று இரண்டு நாள் குளிர். நம்மிடம் புடலங்கன்று வாங்கிய ஒருவர், இன்னும் கையிருப்பில் இருக்கிறதா என்று கேட்டு அலைபேசியில் அலை(ழ)த்தார். அவருக்கே கொடுக்கும் போது, தற்போதைக்கு நட வேண்டாம் என்று சொல்லிக் கொடுத்திருந்தேன். தன்னுடையது பத்திரமாக இருப்பதாகவும், அவரது நண்பர் நட்ட கன்றுகள் குளிரில் இறந்து விட்டதாகவும் சொன்னார். நீசக்கிரகன் பார்வை வாழ்நாள் பூராவும் அள்ளிக் கொட்டுவதால், இம்முறை போட்ட விதைகளில் ஒரு சிலவே முளைத்து, வழமையான வாடிக்கையாளர்களில் மிகச் சிலருக்கே கன்று கொடுக்க முடிந்தது. வீட்டுத் தோட்டப் பயிர்ச் செய்கை என்பது கிட்டத்தட்ட Race against time  தான். ஒரு சீனில் ஏழையான தமிழ்ப் படக் கதாநாயகன் அடுத்த சீனில் பணக்காரனான மாதிரி, குளிர் ஒரு சீனோடு விட்டு, மறுசீனில் கோடை பிறக்காது. இதற்குள் மழை வேறு சொல்லாமல் கொள்ளாமல் வரும். தோட்டத்தில் உள்ள புற்களும் களைகளும் 'காட்டுறன் வேலையை!' என்று இதற்குள் பூத்துக் குலுங்கி, விதை பரப்ப ஆலாய் பறக்கும். இதுவும் போதாதென்று, நமக்கென்றுள்ள புல் வெளியும், வெட்ட வெட்டத் தளைக்கும், வேகமாக! இதற்குள் குப்பை கொட்டி, உழுது, கன்று நாட்டி, அதற்குள் மூணு தடவை புல்லும் வெட்டி... இடையில் வரும் குளிரில் எதுவும் செய்ய முடியாமல் கையைப் பிசைந்து... மழையில் உழ முடியாமல் உழன்று... வேலை முடிந்து மிஞ்சிய நேரத்தை வைத்துக் கொண்டு நேரத்தோடு போட்டி போட வேண்டியது தான். இதற்குள் சனி பகவானும் 'உள்ளேனடா!' என்று வக்கிரப் பார்வை பார்த்து வழி பண்ணுவார். பின்னே என்னவாம்? இரண்டு நாளில் மழை என்றதும் அதற்குள் தோட்டத்தை உழுவோம் என்று, மண்வெட்டி கொண்டு கொத்தி மாளாது என்று கனரக ஆயுதங்களை வெளியே எடுத்தால்... குளிருக்குள் இறுகியிருந்த பெரும் ஆயுதத்திற்கு இயந்திரங்களின் சர்வரோக நிவாரணியான WD-40 ஐ விசிறி, இழுக்க, கிளச் கேபிள் அறுந்தது. சிறியதை தூக்கி வந்தால், அது முரண்டு பிடிக்க... மறுநாள்  ஸ்பார்க் பிளக் வாங்கி வந்து, ஒருவாறாக, கால்வாசித் தோட்டத்தை உழ... Tilled2 சனி பகவான் பொறாமை கொண்டு... அது பெரிய செலவு! ஆக மொத்தத்தில் நமக்கு வாழ்வே நேரத்திற்கு மட்டுமல்ல, சனீஸ்வரனுக்கும் எதிரான போட்டியாகத் தான் ஓடிக் கொண்டிருக்கிறது! Tilled1கொத்திப் பண்படுத்திய நிலத்தில் வீச வேண்டிய விதைகள் எல்லாம் வீசியாயிற்று. நீண்ட நாட்களுக்கு முன் வாங்கி, மிஞ்சி இருந்த பல விதைகள் தங்கள் முளைதிறனை இழந்தாலும், முளைப்பது முளைக்கட்டும் என பலவற்றின் விதைகள்... மறுநாள் மழை என்று மாய்மாலம் காட்டி, அதற்கு அடுத்த நாள் மழை பொழிந்தது. சிவப்பு மட்டுமன்றி, மஞ்சள், வெள்ளை என பீட்ரூட், கரட், நம்ம கீரை, நடுவில் சிவப்பாயும் சூழ பச்சையாயும் இலை உள்ள சீனக் கீரை, பசளி, சிறு முள்ளங்கி, பக் சோய் எனும் சீன இலை, சலாட் இலை என்று பலதும் பத்தும். இதில் Cherry Belle எனப்படும் பெரிய மார்பிள் சைஸ்  சிவப்பு முள்ளங்கி, சலாட்டுகளில்Cherrybelle போட, ஒரு சாதுவான வாய்க் கடி தந்து ருசியாய் இருக்கும். பதினெட்டு நாட்களில் அறுவடை செய்யலாம். கொஞ்சம் கொஞ்சமாக விதைத்தால், அறுவடை செய்து கொண்டே இருக்கலாம். முற்றும் வரை விட்டால், நாராகி, கடைசியில் பூத்து வீணாகி விடும். மற்ற முள்ளங்கிகள் முழுமையான அளவுக்கு வர நாள் எடுக்கும். இதை முயற்சித்துப் பாருங்கள். (நாராய்ப் போன முள்ளங்கி படத்தில்!) முள்ளங்கிகளில் அப்பிள் சைஸ் உருண்டை முதல் மரவள்ளி சைஸ் நீண்டது வரை பலதும் உண்டு. மரவள்ளி சைஸ் நீண்டது ஆழத்துக்கு போனால், கிண்டுவது சிக்கல். எதுவாயினும் கோடையில் கடும் வெயிலுக்குப் பூக்கும். அதன் காய்களை அவரை போல இருக்கும்போது பிடுங்கிச் சமைக்கலாம். முள்ளங்கி இலை வறுக்க நல்லது. முயற்சித்துப் பார்த்ததில்லை. பீட்ரூட் விதை என்பது உண்மையில் பழம். அதன் உள்ளே சில விதைகள் இருக்கும். எனவே முளைக்கும்போது, ஒன்றாக மூன்று, நான்கு கன்றுகள் வரும். பிரித்து அருகில் நடலாம். பீட்ரூட் இலைகள் வறுக்க சுவையானவை. முழுதாக முற்றும் வரைக்கும் விடாமல், பிஞ்சுப் பருவத்தில் பிடுங்குவது நல்லது. முற்றியது போல, கட்டித் தன்மையாய் இல்லாமல் மெதுமையாக இருக்கும். பீட்ரூட் போன்றே, மல்லியும் பழம். உள்ளே விதைகள். விரும்பினால் இரண்டாக frontஉடைத்தும் விதைக்கலாம். முளைக்கும்போது, பிரித்து நட வேண்டும். மல்    லி இலை, சலாட்டுகளுக்கும் ரசத்திற்கும் சுவை சேர்ப்பது! கரட் பிடுங்கி நடுவதற்கு உகந்த ஒன்றல்ல. எனவே, விதைகளை வீச வேண்டியது தான். அதுவும் பிஞ்சிலே பிடுங்கினால், பச்சையாகவே உண்ணலாம். (கழுவிய பிற்பாடு தான். கல்லெறிந்து விழுத்தும் நம்ம ஊர் மாங்காய் மாதிரி இல்லாமல்!). சலாட் இலைகள் விதைகளை வீசி விட்டு, முளைப்பவற்றில் நெருக்கமானவற்றைப் பிடுங்கி இடம் விட்டு ஐதாக நடலாம். இவையெல்லாமே, ஒரேயடியாக ஒரு தடவை வீசி விட்டு, அறுவடை செய்வதை விட, இரண்டு வார இடைவெளிகளில் தொடர்ந்து விதைக்க, அறுவடை செய்யச் செய்ய, புதியவை வந்து கொண்டே இருக்கும். இங்குள்ள வளியில் நீர்த் தன்மை கூடி, உடம்பை எரிக்கும் வெயில் கொண்ட கால நிலையால், பல கன்றுகள் வேகமாகப் பூத்து முற்றிப் போகும். இதில் நம்ம கீரையும் அடக்கம். முளைத்து மூணு இலை விடுவதற்கு முன்னால் முத்திப் போகும்... நம்ம டீன் ஏஜ் பிள்ளைகள் மாதிரி என்று யாராவது சொன்னால் அதற்கு நாம் பொறுப்பல்ல! எனவே, ஞாபகம் இருக்கட்டும். கத்தரி, மிளகாய், தக்காளி, புடோல், பாகல் என நம்ம ஊர் மரக்கறிகள் எல்லாம் விக்டோரியாதின நீண்ட வார இறுதிக்குப் பின்னால் தான். சில நேரம் அதன் பின்னாலும் குளிர் வரலாம். அதற்கான பாதுகாப்பு முறைகள் தாயகத்தில் உண்டு. விரைவில் மழை பெய்யலாம். அதற்கு முன்னதாக உழுது முடித்தால், நடத் தயாராகவிருக்கும் கன்றுகளை நடலாம். எதற்கும் சனீஸ்வரன் வழி விட்டால் தான் உண்டு!tulipye

    Postad



    You must be logged in to post a comment Login