Recent Comments

    தமிழுணர்வாளருடன் மல்யுத்தம்!

    daffodilஒரு பூந்தோட்டக் காவல்காரனின் நாட்குறிப்பிலிருந்து! (2)

    வேலையிடத்தில் வேலையின் ஆயுள் முடியப் போகிறது என்று நீண்ட காலமாய் அறிவித்ததால், வீட்டில் பழமர, பூக்கன்று வியாபாரம் செய்யும் எண்ணத்துடன் பல்வேறு வகை, இனக் கன்றுகள் சேர்க்கத் தொடங்கி... கடைசியில் விதி வேறெங்கோ கொண்டு போய் மாட்டி வைத்திருக்கிறது. தமிழுணர்வாளர்களுடன் மல்லுக் கட்ட வேண்டியிருக்கிறது. பிறந்த ராசி. சனி நம்மை விட்டகலாது! haskap2ஹஸ்காப் பெரிகள். Haskap Berries. பூத்திருக்கிறது. இன்னமும் பழம் ருசித்துப் பார்த்தில்லை. கனடா, ரஷ்யா, ஜப்பான் பக்கத்தில் வளர்வது. பல்வேறு சத்துகள் அதிகளவு  இருக்கிறதாம். இன்னமும் நாவில் பழம் பட்டதில்லை. குளிரில் இறக்காத தாவரம் என்பதால், இப்போது அல்பேட்டா, சஸ்கச்சேவன் மாகாணங்களில் பெருமளவில் பயிரிடப்படுகிறது. புளூபெரி போல நீலப் பழங்கள். இங்கே கன்றுகள் கிடைப்பது அபூர்வம். சஸ்கச்சேவனில் இருந்து தபாலில் பெற்றது. கொஞ்ச நாளில் நம்மிடம் இருந்தும் விற்பனையாகலாம். பழுத்துக் கொட்டட்டுமே! படத்தைப் போட்டே விற்று விடலாம். தமிழர்களுக்கு அல்ல! (உது என்ன பழம்? நஞ்சோ? வாங்கிப் பழுக்காட்டி, காசு திருப்பித் தருவியளோ? குறைக்க மாட்டியளோ? துண்டை முறிச்சுக் கொண்டு போய் நாங்கள் வைச்சா முளைக்குமோ?) இந்தக் குளிருக்கு இங்கே கிழுவை வளர்க்க முடியாது. முடிந்தால் கிழுவந் தடியால் இந்த வைரவ வாகனங்களுக்கு....! சனி! எங்கு போனாலும் விடாது! கொஞ்ச நாளில் இந்த வேலிகள் எல்லாம் திராட்சை மூட, ( படத்தில் கன்றுக்கு அருகில் திராட்சை) இவற்றுக்கு ஒளி கிடைக்காது மட்டுமல்ல, நான் உள்ளே போகக் கூட முடியாதபடிக்கு எல்லாம் மூடி மறைத்திருக்கும். அதற்குள் குளவிகள் வேறு கொட்டகைக்குள் குடிபுகுந்து விடும். ஒரு தடவை விசயம் தெரியாமல் உள்ளே நுழைந்து கடி வாங்கிய பயம். இந்தப் பற்றைக்குள் இன்னும் சில சிறுபழச் செடிகள். பூத்தபடி இருக்கும் அப்ரிகொட். Apricot. முதலில் பூக்கும் பெரிய பழ மரம். ஒரிஜினல் மரம்apri உக்கிப் போக, வேர்களிலிருந்து கிளர்ந்து வளர்ந்த கிளைகளில் நான் ஒட்டிய மற்ற இனங்கள் கொப்புகளாய் பெருத்துள்ளன. மூன்று வகைப் பழங்கள் ஒரே மரத்தில். முழுமையான கோடை வர முன் பூப்பதால், இடையில் குளிர்ந்து உறைந்தால் பூக்களும் அம்போ! பழம் கிடைக்காது. கிட்டத்தட்ட பழம் apricotசாப்பிடுவது Hit and miss தான். 'ஸ்காபரோவில தமிழ்ச் சனத்தோட மனிசர் இருக்கேலாது' என்று நிலவுக்குப் பயந்து வடக்காக பரதேசம் போகும் தமிழர்கள் அப்ரிக்கொட், செரி போன்றவற்றை நட்டுப் பழம் சாப்பிட நினைப்பதைத் தவிர்ப்பது நல்லது. இவை பூக்கும் காலத்தில் குளிர் வருவதற்கான சந்தர்ப்பங்கள் ஒன்ராறியோ ஏரியை விட்டு அதிக தூரத்தில் இருக்கும் பகுதிகளுக்கு அதிகம். எனவே குளிரில் பூக்கள் உதிரலாம். ஆனால் அப்ரிக்கொட் இலைகள் அழகானவை. grapesதந்தை போல பாசம் மிக்க பக்கத்து வீட்டு இத்தாலிக்காரர், நான் சேர்த்து வளர்க்கும் 14 வகை திராட்சைகளையும் நறுக்கி விட்டார். குப்பை பொறுக்கி கட்டி வைக்கும் வேலை உண்டு. ஒரு தடவை வேலைக்குப் புறப்படும் போது,  வழமை போல பின்னால் போய் தோட்டத்தைப் பார்த்து ரசிக்கப் போனால்... அதிகாலையிலேயே அவரும் இத்தாலியிலிருந்து வந்த மைத்துனரும் ஏணியில் ஏறி திராட்சைக் கிளைகளை நறுக்கிக் கொண்டிருந்தார்கள். போதாக்குறைக்கு திராட்சையை அருகில் உள்ள நாவல் பழ சைஸ் கசப்புப் பழம் grapestreeeதரும் Crab அப்பிள் மரத்தில் வேறு ஏற்றி விட்டார். பழங்கள் நிறைந்து கொல்லைப்புறம் பழமுதிர் சோலையாகும். அவ்வளவையும் தனியே சாப்பிட முடியாது. வீட்டாருக்கும் அதில் பெரிதாய் நாட்டமில்லை. எனவே நானும் அணில்களும் தான் பங்குபோடுவோம். இதன் சாறு பிழிந்து குடிக்க, சட்டி, பானைகள் வாங்கி அமர்க்களமாய் அடுப்பில் வைத்து ஒரு தடவை சாறு பிழிந்தேன். இப்போது அந்தச் சட்டி, பானை எல்லாம் எங்கே என்று தெரியாது. கடைகளில் வாங்கும் கலிபோணிய, தென்னமெரிக்க சுவையில், சதைப்பிடிப்பில் இவை இருக்காது. குளிரைத் தாக்குப் பிடிக்கக் கூடிய இனங்கள் இவை. தோலோடு கடிக்க, வாய் கடிக்கும். எனவே தோலை அழுத்தி பழத்தை வழுக்கியபடியே வாய்க்குள் தள்ள வேண்டியது தான். திராட்சைகள் இந்த வருடம் புதிதாக வளரும் கிளைகளில் தான் பூக்கும். இதனால் தான் இவற்றை வருடா வருடம் நறுக்க வேண்டும். குளிர் முடிந்து இலைகள் துளிர்க்க முன் நறுக்கினால் போதும். பந்தலும் போடலாம். வேலியிலும் படர விடலாம். வேகமாய் வளர்ந்து நிழல் தரும். பழுத்து முடியும் போது, எஞ்சிய பழங்களை பக்கத்து வீட்டுக்காரர் பிடுங்கி, வைன் செய்து அவ்வப்போது அன்பளிப்பார். ஒரு வைன் போத்தலை முடிக்க நமக்கு ஆறு மாதமாவது எடுக்கும். அவ்வப்போது நித்திரை வராத போதும், பசிக்காத போதும் பாதிக் கிளாஸ். கடும் வெயில் காலத்தில் இதன் நிழலில் கதிரையைப் போட்டு உட்கார்ந்தபடியே, உழைப்பின் பயனை ரசிக்க வேண்டியது தான். அல்லது கணனியோடு உட்கார்ந்து தமிழுணர்வாளரோடு மல்லும் கட்டலாம்!Tulipyel

    Postad



    You must be logged in to post a comment Login