Recent Comments

    வாங்க! ரொறன்ரோவில் குப்பை கொட்டலாம்!

    compostகுளிர் காலம் முழுவதும் முகப்புத்தகத்தில் இருந்து குப்பை தானே கொட்டியிருப்பீர்கள். இப்போது மெதுவாக சூரியன் தலை காட்ட, வெப்பநிலை கூடிக் கொண்டே வர, கொல்லைப்புற விவசாயிகள் செல்போனில் முகப்புத்தகத்தை அவ்வப்போது பார்த்தபடியே கொத்த ஆரம்பிப்பீர்கள். மண்ணுக்குப் பசளையாய் உக்கிய இலைக்குப்பை போட்டால், வெங்காயப்பூ விளைத்து, தமிழ்க்கடையில் விற்று பெரும் காசு அள்ளும் எண்ணம் வந்திருக்கும். (இப்படிப் பல பேர் புறப்பட்டு, தமிழ் மகன் நிர்வாகக் கடைகளில் விற்கப் போய், காசுக்கு அலைவதைக் கண்டு அந்த எண்ணம் எப்போதோ நமக்கு போய் விட்டது) அதிலும் ரொறன்ரோவில் ஓசியில் குப்பை அள்ளும் விசயத்தை சுவடி கடந்த வருடம் போடப் போக, இந்த வருடமும் எங்கே அள்ளலாம் என்று பலர் ஆர்வத்துடன் கேட்ட வண்ணம் உள்ளார்கள். இதோ அநேகரின் வேண்டுகோளுக்கு இணங்க, தமிழ் மகன் நிர்வாகத்தில்... ஹ்ம்.. பழக்க தோசம்! இந்த வருடம் ஏப்ரல் முதல் அக்டோபர் 3ம் திகதி வரை சனிக்கிழமைகளில் காலை ஏழு மணி முதல் மதியம் 12 வரையும் பின் வரும் இடங்களில் ஓசியில் குப்பை அள்ளலாம். எற்றோபிக்கோவில்,3350 Victoria Park Ave, (between Finch Avenue and McNicoll Avenue.) 50 Ingram Dr.(east of Keel St. between Lawrence Avenue West and Eglinton Avenue West) ஸ்காபரோவில் 1 Transfer Place (Markham Road, north of Sheppard Avenue East) ரொறன்ரோ மையப்பகுதியில் 400 Commissioner St.(south of Lake Shore Boulevard East, between Don Roadway & Carlaw Avenue - enter off Bouchette Street) இவற்றை விட, உங்கள் வீடுகளுக்கு அருகில் நடைபெறும் சுற்றாடல் நாட்களில் அள்ளலாம். இது பெரும் நீண்ட பட்டியல். இங்கே கிளிக்கி, அதை முழுமையாக வாசிக்கலாம். ஆங்கிலம் புரியாது போனால், வீட்டில் உள்ள குழந்தைகள் ஆபத்துக்கு உதவுவார்கள். ஆபத்துக்குப் பாவமில்லை! ஹம்பேர்கர் லஞ்சம் கொடுத்தால் மொழிபெயர்ப்புக்கு மட்டுமன்றி, கூடி வந்து அள்ளவும் உதவுவார்கள். இதற்கெல்லாம் வாகனம் தேவை. இதை விட, தள்ளுவண்டிலில் தள்ளி வர வசதியாய், உங்கள் நகராட்சி உறுப்பினர் உங்களிடம் வாக்கு வேட்டைக்காய், வீட்டுக்கு அருகில் உள்ள பாடசாலைகள், சனசமூக நிலையங்கள் போன்றவற்றின் கார் தரிப்பிடங்களில் கொட்டுவார்கள். அது பற்றி உங்கள் தபால் பெட்டிகளில் செய்தி வரும். விரைவாகச் செல்லுங்கள். நம்ம வீட்டுக்கு அருகில் பத்து மணி போல, ஆங்காங்கே எஞ்சியதை சில சீனர்கள் கூட்டி அள்ளிக் கொண்டிருந்தார்கள். இந்த இடங்களில் அள்ளப் போகும் போது எந்த வகையான தயாரிப்புகளுடன் செல்ல வேண்டும் என்பது பற்றிய பழைய தாயக தகவலை http://www.thayagam.com/ இல் வாசிக்கலாம். அள்ளிக் கொட்டிய பசளை நிறைந்த மண்ணில், பயிர் நாட்டுங்கள்.குஷ்வு சைஸில் பூசணிக்காய் என்ன, நமிதா சைஸில் குண்டுக் கத்தரிக்காயே கிடைக்கும்!
     துன்பத்தை விலை கொடுத்து வாங்கி, வானத்தில் போகும் சனியனை ஏணி வைத்து இறக்கும் தமிழன், ஓசியில் கிடைத்தால் நாறும் குப்பையைக் கூட தெருவிலிருந்து அள்ளி வந்து வீட்டில் கொண்டு வந்து கொட்டுவான் என்பதை நிரூபியுங்கள்.
     

    Postad



    You must be logged in to post a comment Login