Recent Comments

    கட்டியணைத்து ஒரு முத்தம்!

    கட்டியணைத்து புதுமணத் தம்பதிகள் ஆடும் கலாசாரம் நம் புலன் பெயர்ந்தவர்களிடமும் தற்போது ஆரம்பித்துள்ளது. ஊரில் அதெல்லாம் கிடையாது... கோட் போட்டு கேக் வெட்டுவது போல, இதெல்லாம் புலன் பெயர்ந்த நாடுகளில் ஆரம்பித்த தமிழ் கலாசாரம். ஐயர் கேக்கை ஆசீர்வதித்து மந்திரம் சொல்வதும் இன்னும் கொஞ்ச நாளில் ஆரம்பிக்கலாம். மணமக்கள் ஆடி முடிய, சூழ இருப்பவர்களே இதழோடு முத்தம் கொடுக்குமாறு கூச்சல் போடுவார்கள். புலன் பெயர்ந்து சென்றாலும் கொத்துரொட்டியையும் சல்வாரையும் தன் கலாசாரமாக்கி பூரிக்கும் தமிழன் Be Roman when you are in Rome என்று கைக்கொள்ளும் கலாசாரம் இதுவாகத் தான் இருக்கும். அதுவும் தமிழ்ப் பாடலுக்காகத் தான் இருக்கும். முன்பு ஊரில் இதெல்லாம் நடந்திருந்தால், கலாசாரச் சீரழிவு என்று மித்திரனுக்கு வாசகர் கடிதம் எழுதியிருப்பார்கள். தற்போது இணையத் தளங்கள் 'இந்த புதுத் தம்பதிகள் ஆடி முடியச் செய்த வேலையைப் பாருங்கள்' என்று தலையங்கம் போட்டு முகப்புத்தகத்தில் போடுகிறார்கள். முன்னைய பதிவில் போட்ட Richard Max இன் I will be right here waiting for you பாடல் திருமண நிகழ்வுகளில் புதுமணத் தம்பதிகள் கட்டியணைத்து நடனமாடுவதற்காக இங்குள்ள டிஜேக்கள் அவிழ்த்து விடும் முதற் பாடல். இதற்கு முன்னால் எண்பதுகளின் இறுதிப் பகுதியில் Chris DeBurgh இன் Lady in Red பாடல் இது போலவே பிரபலமானது. when you turned to me and smiled, it took my breath away, And I have never had such a feeling, Such a feeling of complete and utter love, as I do tonight; என்று பாடும் பாடல் உங்களுக்காக!    

    Postad



    You must be logged in to post a comment Login