Recent Comments

    ஆப்கான்: சிதையும் சிறுவர்கள்

     Pasha baachiக.கலாமோகன்

    bachaஆப்கானிஸ்தான் சிறுவர்களை நிறைய விரும்பும் நாடு போல எனக்குக் படுகின்றது. கடந்த “தாயகம்” பக்கத்தில் சிறுமிகளை ஆண்களாக்கும் Bacha Posh மீது எழுதியிருந்தேன். ஆனால் இந்த நாட்டில் Bacha bazi உம் இருக்கின்றது. பெண் உடைகளை அணிந்து நடனமாடும் சிறுவர்களை Bacha bazi என்பதுண்டு. இது மத்திய ஆசிய நாடுகளில், குறிப்பாக ஆப்கானிஸ்தானிலும் கலாசாரமாக இருந்தது. சட்டத்தால் இந்தக் கலாசாரம் தடைசெய்யப்பட்டாலும், சிறுவர்களை செக்ஸ் தேவைகளுக்காகப் பயன்படுத்தும் வகையில் இது இன்றும் களவாகவே நடத்தப்படுகின்றது. bacha_baziBacha bazi மீது நிச்சயமாக நிறைய எழுதலாம். ஆண்கள் பெண் வேடம் போடுதல் இந்த உலகின் பழைய கலாசாரம். யாழ்ப்பாணத்தில் பழைய நாடகங்களைப் பார்த்தபோது, பெண்கள் நடிப்பதில்லை. ஆண்கள்தாம் பெண்கள் வேடத்தைப் போடுவதுண்டு. இந்த ஆண்களாகிய பெண்களினது நடிப்புகள் செம்மையானவை. அந்த ஆண்கள் நிச்சயமாக பெண்களைப் போலவே இருப்பர். யாழ்ப்பாணத்தில் பெண்ணாகிய ஆண் நடிகர்கள் செக்ஸ் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டார்களா என்பது எனக்குத் தெரியாது. Bacha bazi மீது நாம் அறிய Pédéraste எனும் பதத்தை விளங்கிக் கொள்ளுதல் bachabaziஅவசியமானது. homosexual என்பதை பிரான்சில் Pédé என்றும் சொல்லுவதுண்டு. Pédé என்னும் சொல் இழிவுச் சொல்லாக இப்போது கணிக்கப்பட்டாலும், சரித்திரபூர்வமாக இது காத்திரமான சொல்லாகும். Pédéraste என்னும் பழைய கிரேக்கிய சொல்லே pédé என்று சுருங்கியுள்ளது. Pédéraste என்பது சிறுவர்களுடன் விளையாடுவதையும், சிறுவர்களை விரும்புவதையும் குறிப்பது. Bacha bazi என்பது நிச்சயமாக Pédéraste எனும் கருத்துக்கு அருகில் நிற்பதைக் காணலாம். socrateதத்துவஞானி Socrate ஒரு Pédéraste ஆக இருந்தாராம். இவர் சிறுவர்களை விரும்பியவரா அல்லது அவர்களுடன் வன்முறையான செக்ஸ் தேவைகளைச் செய்தவரா என்பது எமக்குத் தெரியாது. சிறுவர்களுடன் விளையாடுதல் ஒரு பழைய கலாசாரமாக இருந்தபோதும், இந்த விளையாட்டின் பின்னணியில் செக்ஸ் ஒரு பக்கமாகவும் இருந்திருக்கலாம் எனக் கருத முடிகின்றது. பிரான்சின் மிகப்பெரிய தத்துவஞானி Michel Foucaut மறோக்காவில் சிறுவர்களுடன் செக்ஸ் செய்தார் என்பது ஒழிக்கப்படவில்லை. ஆப்கானிஸ்தானில் Bacha bazi களைப் பொறுப்பெடுக்க முதலாளிமார்கள் உள்ளனர். இவர்கள் இந்தக் கலாசாரத்துக்குள் தள்ளப்படுவதற்கு வறுமைதான் காரணம். கிராமங்களில் இருந்தே சிறுவர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். இந்த சிறுவர்கள் முதலாளிகளின் அடிமைகளே. களவான அரங்குகளில் இவர்கள் பெண்ணாகி “பெரிய மனிதர்களின்” முன் ஆடுவதுண்டு. ஆடும் கலை நின்றபின் “பெரிய மனிதர்களின்” செக்ஸ் தேவைகளுக்கு இவர்கள் அடிமைகளாக்கப்படுகின்றனர். Zadzi ஆல் எழுதப்பட்ட “Boys in Afghanistan Sold Into Prostitution, Sexual Slavery” ஆப்கான் வறுமைச் சிறுவர்கள் மீதான அவசியமான குறிப்புகளைத் தருகின்றது. தாடி இந்தச் சிறுவர்களுக்கு வளரத் தொடங்கும்போது, இவர்கள் ஆடுவது தடுக்கப்படும். இந்த சிறுவர்கள் தாடியுடன் பிறப்பார்களா என்பது எனக்குள் எழும் கேள்வி.

    Postad



    You must be logged in to post a comment Login