Recent Comments

    சவூதி அரேபியா: Ali Mohammed Al-Nimr தப்புவாரா?

    Mecca   க.கலாமோகன்

    Raif-Badawi_

    சவூதி அரேபியா மனித அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் நாடுகளில் முதலிடம் பெறுவதாக இருக்கும் என்பது என் கருத்து. இந்த நாட்டில் நிறையச் செல்வர்கள் உள்ளனர், இவர்களது அடிப்படைத் தத்துவம் மனித அடிப்படை உரிமைகளை அழிப்பதிலும், ஒழிப்பதிலும்தான் நிறைய அக்கறையை எடுக்கின்றது. அங்கேயுள்ளது முஸ்லீம்களினது புனித நிறுவனமான மெக்கா. இந்த நாட்டில்தான் முகம்மது பிறந்தார் என வரலாற்று நூல்கள் தெரிவிக்கின்றன. இந்த நாட்டில்தான் அரசின் கொடுமைகள் ஒவ்வொருநாளும் நடந்துகொண்டிருக்கின்றன. ஆம்! மரண தண்டனைகளைப் பற்றிக் குறிப்பிடுகின்றேன். இன்று மெக்காவுக்குப்போன 717 இக்கு மேற்பட்டோர் மக்கள் நெருக்குவாரத்தால் காலமானோர் எனும் செய்தி கவலையானது. ஆனால், 20 வயதுப் பையனான Ali Mohammed Al-Nimr தலைவெட்டப்படுவார், பின்பு சிலுவையில் ஏற்றப்படுவார் எனும் செய்தி நிச்சயமாகக் கவலையை ஏற்படுத்துவது, இந்த நாட்டில் மனிதாபிமானம் உள்ளதில்லை என நம்ப வைப்பது. இந்த இளைஞனின் மரண தண்டனைக்கு எதிராக பல நாடுகள், பல நிறுவனங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால், சவூதி அரேபியா கண்டனங்களைக் கவனத்தில் எடுக்காததைத் “தர்மமாகக்” கொண்டுள்ளது. இந்த நாட்டில் இந்த வருடத்தில் 134 மரண தண்டனைகள் வெறியுடன் நடத்தப்பட்டுள்ளன. 1985 இருந்து இன்றுவரை 2208 மரண தண்டனைகள் மெக்காவை வைத்திருக்கும், நபி பிறந்த நாட்டில். இந்தத் தண்டனைகள் இந்த அரசை நிச்சயமாகப் பயங்கரவாத அரசாகக் காட்டுகின்றது. ஆனால் பெட்ரோல் பெய்யும் நாட்டை வேறு அரசுகள் பயங்கரவாத நாடாகப் பார்க்க மாட்டாது என்பது எமது அரசியல் கதை.

    li-al-nimr-condamne

    Raïf Badaoui, இவர் ஓர் blog மனிதர். இவரும் இந்த நாட்டிலேயே பிறந்தவர். இவர் தனது நாட்டில் விடுதலையை விரும்பியவர். அரசில் மதவாதிகளின் இணைப்பை எதிர்த்து எழுதியவர். இவருக்குக் கிடைத்தது 10 வருட சிறைத் தண்டனை, 1000 தடவைகள் இவரது உடல்மீது சவுக்கு வீச்சு. நீண்ட காலங்களின் பின்னர் இங்கே பெண்கள் வாக்களிக்கலாம், ஆனால், வாகனம் ஓட்ட முடியாது. இது பெண் உரிமையின் இலக்கா? அந்நியர்கள் இங்கே தொழில் மூலமாகக் கொடுமைப் படுத்தப்படுகின்றனர். இவர்களில் பலர் தமது நாடுகளுக்குத் திரும்ப முடிவெடுத்தால், இவர்களது உடைமைகளை முதலாளிகள் பறிக்கின்றனர். இந்த நாட்டில் நிறைய அந்நியர்கள் பொய்க் காரணங்களால் தலை வெட்டப் படுகின்றனர். இது ஓர் நாடா? (வேறு பல நாடுகள் அசுத்தமானதாக உள்ளன என்பது என் கருத்து).

    pic34

    Ali Mohammed Al-Nimr இந்த இளசு தட்டப்படலாம் எனச் சொல்லப் படுகின்றது. ஆனால், UNO வும் சவூதி அரேபியா அரசியலை விரும்புகின்றதா? UNO வினது மனித உரிமைகளது ஆலோசனைச் சபையின் “ஆலோசனைக் குழு"வின் தலைமை சவூதி அரேபியாவினது Faisal Trad இக்குக் கிடைத்துள்ளது, இவர் ரியாட்டின் தூதுவர். இந்தத் தலைமையை பல மனித நிறுவனங்கள் கண்டித்துள்ளன. இவரது பதவி UNO வினால் தட்டப்படுமா? அது தெரியாது. ஆனால் சவூதி அரேபியா நாட்டில் எப்போது தட்டல்கள் நிறுத்தப்படும்? இந்த நாடு சொர்க்கம் அல்ல, நரகம்.

    Postad



    You must be logged in to post a comment Login