Recent Comments

    மஞ்சள் பத்திரிகையான சுவடி!

    பாதுகாப்பு உறையுடன் மஞ்சள் பத்திரிகையாக வெளிவந்த கடந்த சுவடி இதழுக்குப் பாராட்டுக்கள் நிறைந்ததில் என்ன ஆச்சரியம்? வழமை போல பயன்தரு விடயங்கள் மட்டுமே நிறைந்த சுவடி, கனடிய தொழிலிடங்களில் தொழிலாளர்களுக்கான உரிமைகள் பற்றிய விடயங்களையும் இம்முறை தாங்கி வருகிறது. நம்மவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய எத்தனையோ விடயங்கள் தயாராக உள்ளன. ஆனால் கடுகு அளவில் காரத்துடன் வரும் பிரசுரத்தில் குறித்தளவு விடயங்களையே உள்ளடக்க முடியும். சுவடியின் வளர்ச்சிக்கு நீங்கள் உதவும் பட்சத்தில், பக்கங்களையும் விடயங்களையும், ஏன், பிரசுர தினங்களையும் அதிகரிக்க முடியும். விளம்பரமாகவோ, இணைப்புப் பிரசுரமாகவோ, எமது அச்சு நிறுவனத்தில் அச்சகச் சேவைகளைப் பெறுவதன் மூலமாகவோ சுவடியின் வளர்ச்சிக்கு நீங்கள் உதவலாம். சுவடி கருகாமல் செழிக்க, கண்ணீரும் செந்நீரும் வேண்டியதில்லை. உங்கள் திருவுளமே போதும்!

    Postad



    You must be logged in to post a comment Login