Recent Comments

    பயங்கரவாதத்தை ஒழிக்க முடியுமா?

    thayagam featured-terrorக.கலாமோகன்

    Yemen நாட்டில் இரண்டு மசூதிகளுக்குள் 142 பேர் கடந்த வாரம் கொல்லப்பட்டுள்ளனர். இந்தக் கொலைகளை நடத்தியதாக “இஸ்லாமிய அரசு” சொல்லியுள்ளது. இந்த அரசு பயங்கரவாத விநியோகத்தில் தற்போது முன்னிலையில் நிற்கின்றது. பணயக் கைதிகள் கொலைகளை சில மாதங்களாக வெறியுடன் செய்யும் இது, இஸ்லாமியர்களையும் கொல்கின்றது. “இஸ்லாமிய அரசு”, இஸ்லாமியர்களை எப்படிக் கொல்வதாம்? இது நிச்சயமாக “அரசு” ஆக இருக்கமுடியாது. இது கொலையின் தொழில்சாலை. இது பயங்கரவாதத்தைத் தினம் தினம் பாடுவது. இது “இஸ்லாம்” மதத்தை நிராகரிப்பது. இதனது தோற்றமும், வளர்ச்சியும் பல கேள்விகளைக் கேட்க வைக்கின்றன. இதனது தோற்றம் நிச்சயமாக தனித் தோற்றம் அல்ல. இதற்குள் சர்வதேச அரசியலின் ஊழல்களும் இருக்கலாம். terrorismeபயங்கரவாதத்துக்கு நிறைய விளக்கங்கள் உள்ளன. ஆனால் இது மக்களை உடலாலும், உள்ளத்தாலும் அழிப்பது, நாடுகளை உடைப்பது, வீட்டில் வாழும் மக்களை வீதிக்கு வாழத் திணிப்பது. Syria வில் மூன்று வருடங்களாக 150,000 பேர் அரச பயங்கரவாதத்தால் கொல்லப்பட்டுள்ளனர். இந்த அரசின் அப்பாவும் (Hafez el-Assad) மக்களது உரிமைகளின் எதிரியாக இருந்தார், மகனும் (Bachar el-Assad) அப்பாவுக்கு மேல் நிலையில் உள்ளார். 7985 குழந்தைகள் இந்த மூன்று ஆண்டுகளில் கொல்லப்பட்டுள்ளனர். இந்த Syria நாடா நரகமா எனக் கேட்க வேண்டியுள்ளது. நிறைய நாடுகளில் அரச பயங்கரவாதம் இல்லாமல் அரசியல் இல்லை. கியூபா முன்பு “காட்டுமிராண்டித்தனமான” அரசாகக் கணிக்கப்பட்டது. அது சர்வதேசப் பயங்கரவாதத்தை வழங்கியதென்றும் சொல்லப்படுகின்றது.''40 வருடங்களாக கியூபாவுக்குள் பயங்கரவாதத்தைப் பயன்படுத்திய அமெரிக்காவை எப்படி பயங்கரவாத நாடு என்று சொல்லாமல் இருக்கலாம்?” என்று கேட்கின்றார் Noam Chomsky. இந்த கேள்வி வேறு பல நாடுகளுக்கும் ஒத்து வருகின்றது. இஸ்ரேலிய அரசின் உளவுப் பகுதியான Mossad உலகம் முழுவதும் பயங்கரவாதத்தையே விற்றுக் கொண்டுள்ளது. ISISபயங்கரவாத அழிப்பு மனித சுவாசிப்புக்கு முக்கியமானது. இது அழிப்பது மனிதத்தின் அடிப்படை உரிமைகளை. பயங்கரவாதம் இல்லாத உலகம் எமக்குக் கிடைப்பது சாத்தியமா? அதிகார பலத்துள் இன்றுகூட எழுத்துகளிலும் சொல்களிலும் பயங்கரவாதம் பல வடிவங்களில் பிறக்கின்றது. பயங்கரவாதம் சிறு அமைப்புகளதும், குழுக்களினதும் ரசிப்புப் பாவைகளாக வந்தபோதும், இது எமது அங்கீகரிக்கப்பட்ட அரசியலின் மதமாக இருத்தல் கேவலப்படத்தக்கது. ஆம்! ஹிட்டர்களது உலகில் நாம் என்பதை இன்றும் சொல்லலாம்

    Postad



    You must be logged in to post a comment Login