Recent Comments

    நைஜீரியா: கலையும் கொலையும்

    thayagam featured-nigeriaக.கலாமோகன்

    Okwui Enwezor கலை உலகத்தின் தந்தையாகக் கணிக்கப்படுபவர். நைஜீரியா தந்த மிகப் பெரிய கலைக் காவலர். இங்கு கொலைகள் சகஜம், வாழ்வு நிலை போல. இந்த நாட்டில்தான் Chinua Achebe யும் பிறந்து கவனத்துக்கு உரிய படைப்புகளைத் தந்துள்ளார். தமிழில் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன. நிறையக் கலை விசயங்களை வெளியே கொடுத்து இருக்கும் இந்த கறுப்புக் கண்டத்தின் நாடு பயங்கரவாத நெருக்கடியை ஒவ்வொரு தினத்திலும் வாழ்கின்றது. இந்த நாட்டில்தான் Abubakar Shekau எனும் பயங்கரவாதி வாழ்கின்றார். Boko Haram என்ற தீவிரவாத இஸ்லாமியக் கட்சியைத் தொடக்கி மக்களை விரட்டுவது, கொலைசெய்வது, பணயக் கைதிகளாகப் பிடிப்பது போன்ற மனித விரோதச் செயல்களைச் செய்துகொண்டுள்ளார். கடந்த வருடம் 237 சிறுமிகளை Boko Haram அங்கத்தவர்கள் கடத்தியுள்ளனர். இந்த கடத்தல்காரர்களை இஸ்லாமியர்கள் எனச் சொல்லலாமா? இந்தக் கொடுமையான கட்சியால் மக்கள் அழிகின்றனர், மக்கள் நிறைய அகதிளாக வருகின்றனர். Chinua-Achebeநைஜீரியாவின் “தீவிரவாத இஸ்லாமியர்கள்” ஜப்பானியர்கள் இல்லை, ஆனால் அவர்கள் கமிக்காஸ் பாணியில் வன்முறையை மக்களுக்குத் திணிப்பவர்கள். 22 ஆம் திகதி 7 வயதுள்ள சிறுமியைக் கமிக்காஸ் ஆக்கி நடத்தப்பட்ட வன்முறையில் 5 பேர் பலியாகியுள்ளனர். Kasuwar Jagwal சந்தையில் இந்தக் கொடுமை நடந்துள்ளது. அண்மையில் Chinua Achebe யின் “An image of Africa” என்ற புத்தகத்தை வாசித்தேன். இவர் இந்த நாட்டின் அரசியலால் பயப்படுத்தப்பட்டு உள்ளார். இவர் இங்கு நிறைய நெருக்கடிகளைச் சந்தித்தவர். தனது புத்தகத்தில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: “Nigeria is not a great country. It is one of the most disorderly nations in the world. It is one of the most corrupt, insensitive, inefficient places under the sun. It is one of the most expensive countries and one of those that give least value for money. It is dirty, callous, noisy, ostentatious, dishonest and vulgar. In short, it is among the most unpleasant places on earth!” ஒவ்வொரு நாட்டிலும் கலை ஒரு பக்கம், கொலை ஒரு பக்கம். “சிவாவின் நடனம்” எனும் மிக அழகிய கலைத்துவ இலக்கியத்தை தந்த ஆனந்த குமாரசாமி இலங்கையில் பிறந்தார். ஆனால் நிறையத் தமிழர்களும் சிங்களவர்களும் இஸ்லாமியர்களும் இந்த நாட்டை விட்டு அகதியாக வெளியே. கொலைகளுக்குத் தப்பி. இதுவும் ஓர் Boko Haram உலகமே.

    Postad



    You must be logged in to post a comment Login