Recent Comments

    கூடி முயங்க வழி செய்யும் செல்பேசி

    செல்பேசி பட்டரியின் சக்தி நீடிக்க சில வழிகள் செல்பேசி கையில் இருந்தால், நினைத்த போழ்தில் எல்லாம் மனதுக்கு இனியாரோடு அடிக்கடி குறுஞ் செய்திப் பரிமாற்றம் செய்யலாம். பொழுது போகாவிட்டால், முகப்புத்தகத்தில் பதிவு செய்வோருக்கு எல்லாம், நானும் 'உள்ளேன் ஐயா' என்று லைக் செய்யலாம். ஆனால் அதன் பட்டரி செயலிழந்து விட்டால்... மரத்தில் மாங்காய் எறியக் கூட பயன்தராது. பட்டரியில் உயிர் இருக்கும் வரைக்கும் தான் செல்பேசியின் வீரியம். அதிலும் மீண்டும் உயிரூட்டுவதற்கு மின் இணைப்புகள் அருகில் இல்லாவிட்டால் அதோ கதி தான். வழமையில் ஒரு தடவை முழுமையாக உயிரூட்டினால், செல்பேசி ஒரு நாளைக்குத் தாக்குப் பிடிக்கும். அது சாதாரண பாவனைக்கு! சதா முகம் புதைத்தால்...? உங்கள் செல்போன் பட்டரியை நீடிய பாவனைக்கு பயன்படுத்த இதோ சில வழிகள்! உங்கள் திரையின் பிரகாசத்தன்மையைக் (Brightness) குறையுங்கள். உங்கள் செல்பேசியில் Settings என்பதில் Display ஐ அழுத்தி, கண்ணை பாதிக்காமல், வாசிக்கக் கூடிய அளவுக்கு மங்கலாக வைத்திருங்கள். சுற்றாடல் வெளிச்சத்தைக் கணித்து அதன்படி பிரகாசத்தை மாற்றுவதற்கான, Auto Brightness என்பதை தெரிவு செய்யாதீர்கள். அத்துடன் பயன்படுத்தி முடிந்த பின்னால், சிறிது நேரத்தில் தன்பாட்டிலேயே திரையை மூடி நித்திரை செய்வதற்காக Sleep அல்லது Screen timeout என்பதைத் தெரிந்து, அதற்கான குறுகிய நேரத்தையும் தெரிவு செய்யுங்கள். ஐபோன் பிரியர்கள் Settings ல் General ஐ தெரிந்து Auto-Lock ஐ தெரியுங்கள். 2. காதில் கொழுவிக் கேட்கும் கருவிக்கான Bluetooth இணையத் தொடர்புக்கான Wi-fi, பாதை காட்டும் GPS போன்றவற்றைப் பயன்படுத்தாத நேரங்களில் மூடுங்கள். Settings ல் இவற்றை மாற்றலாம். பெரும்பாலான செல்பேசிகளில் வழமையான Home திரையிலேயே மாற்றங்களைச் செய்யலாம். 3. உங்கள் செல்பேசிக்கான செயலிகளை தரவிறக்கம் செய்யும் போது, நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதை அறியும் Location Based செயற்பாடுகள் பட்டரியின் உயிரை வேகமாய் குடிக்கும். எனவே தரவிறக்கம் செய்யும்போது, நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதைக் கட்டாயமாய் அறிய வேண்டிய GPS போன்றன தவிர்த்து, தேவையற்ற செயலிகள் GPS ஐ பயன்படுத்துவதைத் தவிருங்கள். தேவையெனின், டுLocation Access ஐ Settingsமூலமாகத் தவிருங்கள். 4. உங்கள் செல்பேசி இணைப்பின் வலிமை குறைவாக இருக்கிறதா என்பதை அவதானியுங்கள். குறிப்பாக செல்பேசி சேவை இல்லாத இடங்களில் இருந்தால், உங்கள் செல்பேசி அடிக்கடி இணைப்பைத் தேடுவதால் சக்தி விரயமாகும். இவ்வாறான சந்தர்ப்பங்களில், வலிமையான இணைப்புக் கிடைக்கும்வரை Airplane mode ஐ பயன்படுத்துங்கள். 5. Wi-Fi இணைப்பானது, செல்பேசி நிறுவன இணைப்பை விட குறைந்தளவு சக்தியைப் பயன்படுத்துவதுடன், அதன் மூலம் தரவுகள் வேகமாகப் பரிமாறலாம். 6. புதிதாக வரும் மின்னோலைகள், முகப் புத்தகத்தில் நண்பராக விரும்பு வோரின் வேண்டுகோள்கள் போன்றவற்றை உங்களுக்குத் தெரியப் படுத்துவதற்கு உங்கள் செல்பேசி அடிக்கடி அந்த சேவைகளுடன் தொடர்பு கொண்டு சக்தியை விரயமாக்கும். எனவே முக்கியமில்லாத செயலிகளில் notifications ஐ தவிருங்கள். 7. பயன்படுத்தாத செயலிகளை மூடுங்கள். இல்லாவிடில் அவை பின்னணியில் செயற்பட்டுக் கொண்டே இருந்து, சக்தியை விரயமாக்கும். ஐபோன் பிரியர்கள் Settingsல் General ல் Background App Refresh ஐ தெரிவு செய்யலாம். அன்ட்ரோய்ட் அபிமானிகள் Settings ல் Data Usage ல் Restrict background data ஐ தெரியலாம். 8. செல்பேசிகள் கடும் குளிரிலும் வெப்பத்திலும் வேகமாய் சக்தியை இழக்கும். இந்த வெப்பநிலைகளில் அவற்றின் பட்டரிகள் இரசாயனத் தாக்கத்திற்குட்படுவதாலேயே இந்தச் சக்தி இழப்பு. இந்த வெப்பநிலைகளைத் தவிருங்கள். 9. நீண்ட நேரம் மின் இணைப்பு இல்லாத சூழ்நிலைகளில், மேலதிகமாய் பட்டரிகள் வாங்கி உயிரூட்டிப் பயன்படுத்தலாம். ஆனால் ஐபோன் பிரியர்களுக்கு பட்டரி கழற்றி மாற்ற வழி கிடையாது. USB மூலமாக சக்தியூட்டுவதற்காக, மேலதிக சக்தி தரும் பட்டரிகள் கடைகளில் உண்டு. அவற்றை USB மூலமாக இணைத்து சக்தி பெறலாம். இந்த வகைகளில் சேமித்த சக்தியை என்ன செய்வது? செல்பேசி மூலமாய் மனதுக்கு இனியாரோடு 'என்ன எடுக்கிறன், எடுக்கிறன், ஆன்ஸர் பண்ணிறாயில்லை' என்று ஊடல் கொள்ள வேண்டியது தான். சில நேரம் வீடு சேரும்போது, கூடி முயங்கவும் (அல்லது வாங்கிக் கட்டவும்!) வழி கிடைக்கலாம்.

    Postad



    You must be logged in to post a comment Login