Recent Comments

    ஓசியில் கிடைக்கும் வைரஸ் தொற்று நீக்கிகள்!

    உங்கள் மின் கணனிக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு நோய்வாய்ப்பாட்டு உங்களை அல்லல்படுத்தியிருக்கக் கூடும். கணனிக்கு வைரஸ் தொற்றிக் கொண்டால், உங்களுக்கு தலையிடி தொற்றும். நித்திரை வர மறுக்கும். இரத்த அழுத்தம் கூடும். கணனிக்குள் பதியப்பட்ட உங்கள் வாழ்க்கையே முடிவுக்கு வந்ததாக மன அழுத்தம் ஏற்படும். நீங்களோ, அல்லது உங்கள் வீட்டுப் பிள்ளைகளோ, இணையத்தில் உலாவும் போது, ஏதாவது ஒரு இடத்தில் ஏடாகூடமாய் அழுத்தப் போக, உங்களை அறியாமலேயே இந்த வைரஸ் தொற்றியிருக்கக் கூடும். சில வேளைகளில் உங்கள் கணனியை தாங்களாகவே சோதனை செய்து, வைரஸ் பீடித்திருப்பதாகவும் அதற்கான சர்வரோக நிவாரணி தங்களிடம் இருப்பதாகவும் அதை இலவசமாயோ, பணத்திற்கோ பெற இதை அழுத்துங்கள் என்று கூறும் நிறுவனங்கள் உள்ளன. அவர்களிடம் மிகவும் அவதானமாக இருங்கள். அவர்களோ நீங்கள் அறியாமல் வைரஸை உங்களுக்குத் தொற்ற வைத்து விடுவார்கள். இணைய உலாவின் போது, எதை கிளிக்குகிறோம் என்பதில் மிகவும் அவதானம் தேவை. அதிலும் இலவசமாய் தருகிறோம், அழுத்துங்கள் என்று கூறுபவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். உங்களை அறியாமலேயே தங்கள் மென்பொருட்களை உங்கள் கணனிக்குள் செலுத்தி சட்டவிரோதமான செயற்பாடுகளை அவர்கள் செய்யக் கூடும். கணனிகளுக்கு வைரஸ் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும் மென்பொருட்கள் பல உள்ளன. அவற்றில் பலவற்றை நீங்கள் விலை கொடுத்து வாங்க வேண்டும். சிலவற்றிற்கு வருடா வருடம் பணம் செலுத்த வேண்டும். சிலவற்றை கணனிக்குள் இறக்கினாலே, அவற்றின் தொல்லை புதிய தலையிடியாகி விடும். அடிக்கடி தோன்றி, பணம் கொடுத்து அப்டேட் செய் என்று அரிகண்டம் தரும். இவற்றை விட இலவசமான, தகுந்த பாதுகாப்புத் தரக் கூடிய மென்பொருட்கள் உள்ளன. அவற்றை உங்கள் கணனிக்குள் பதிவிறக்கம் செய்வதன் மூலம் நீங்கள் உங்கள் கணனிகளை வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்க முடியும். இவற்றில் சிறந்த ஐந்து மென்பொருட்கள் பற்றிய விபரங்களை உங்களுக்குத் தருகிறோம். அவற்றைப் பற்றி அவற்றின் இணையத் தளத்திற்கு சென்று, அவற்றைப் பற்றி தீர விசாரித்தறிந்த பின்னால், தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இந்த மென்பொருட்கள் உங்கள் கணனியை முழுமையாக பரிசோதித்து வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறதா என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்தும். இவற்றில் சில விளம்பரங்களைக் கொண்டிருக்கின்றன. இலவசமான மென்பொருட்களை எழுதுவோர் இந்த விளம்பரங்கள் மூலமாகவே பணம் சம்பாதிக்கிறார்கள். கீழே குறிப்பிட்டுள்ள ஐந்து மென்பொருட்களையும் அவற்றில் உள்ள இணைய விலாசத்தில் சென்று தரவிறக்கம் செய்யலாம். Lavasoft Ad-Aware Free Antivirus+ (www.lavasoft.com/) Avast! (www.avast.com/en-ca/index) AVG (free.avg.com/ca-en/homepage) Avira (www.avira.com/en/avira-free-antivirus) Microsoft Security Essentials (windows.microsoft.com/en-US/windows/products/security-essentials)

    Postad



    You must be logged in to post a comment Login